Just In
- 1 hr ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 4 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
யமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் விற்பனைக்கு வந்தது!!
யமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ராலி ரெட் மற்றும் ரேஸிங் புளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.
யமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.
யமஹா ரே ஸ்கூட்டரின் ஸ்ட்ரீட் ராலி எடிசன் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இளைஞர்களை கவரும் பல்வேறு கவர்ச்சிகரமான விஷயங்கள் இந்த விசேஷ மாடலில் இடம்பெற்றிருந்தது.
புதிய யமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி ஸ்கூட்டர் இரண்டு இரட்டை வண்ணக் கலவையில் காட்சியளித்தது. இந்த ஸ்கூட்டரில் விசேஷ பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், 6 ஸ்போக்ஸ் தங்க வண்ண அலாய் வீல்கள் இதன் மற்றொரு முக்கிய அம்சமாக இருந்தது. சஸ்பென்ஷனின் ஸ்பிரிங்குகளிலும் தங்க வண்ண முலாம் பூச்சுடன் காட்சி தந்தது.
இந்த ஸ்கூட்டரில் அலுமினிய ஃபுட்ரெஸ்ட்டுகள், கருப்பு வண்ண எஞ்சின் கார்டு, கைப்பிடிகளில் தங்க வண்ண அலங்காரம் உள்ளிட்டவை கண்ணை கவரும் அம்சங்களாக இருந்தன. அதாவது, கஸ்டமைஸ் செய்யப்பட்ட ராலி ரேஸ் ஸ்கூட்டர் போன்று காட்சி தருகிறது. ஆனால், இப்போது வந்திருக்கும் மாடலில் பல்வேறு அம்சங்கள் நீக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிரது.
தற்போது வந்திருக்கும் மாடலில் புதிய பாடி டீக்கெல் ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கினறன. ராலி ரெட் மற்றும் ரேஸிங் புளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ.57,898 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் 113சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாமக 7.2 பிஎஸ் பவரையும், 8.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
"யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் மாடலானது ஸ்டைல் மற்றும் செயல்திறன் என இரண்டையும் கலந்து கட்டிய கலவையாக இருக்கும்," என யமஹா நிறுவனத்தின் உயர் அதிகாரி ராய் குரியன் கூறி இருக்கிறார்.
சுஸுகி பர்க்மேன் 125 ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இரு தினங்களே உள்ள நிலையில், சந்தைப் போட்டியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், யமஹா நிறுவனம் முந்திக் கொண்டு இந்த புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது.