ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா R15.. ஜிக்ஸர், கேடிஎம் எல்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

இந்திய மார்க்கெட்டில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா நிறுவனத்தின் ஆர்15 பைக்தான் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

By Arun

யமஹா நிறுவனம் YZF-R15 வெர்ஷன் 3.0 பைக்கை, டெல்லியில் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போவில் லான்ச் செய்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பின் லான்ச் ஆன யமஹா YZF-R15 வெர்ஷன் 3.0 பைக், இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் ஒன்றாக திகழ்கிறது.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா R15.. ஜிக்ஸர், கேடிஎம் எல்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

கடந்த மே மாதம் மட்டும் 6,611 YZF-R15 பைக்குகளை யமஹா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதே நேரத்தில் சுஸூகி நிறுவனம், 4,185 ஜிக்ஸர் பைக்குகளையும் (ஜிக்ஸர், ஜிக்ஸர் எஸ்எப் இரண்டும் சேர்த்து), கேடிஎம் நிறுவனம் 2,553 கேடிஎம் ஆர்சி 200 பைக்குகளையும் மட்டுமே விற்பனை செய்துள்ளன.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா R15.. ஜிக்ஸர், கேடிஎம் எல்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

எனினும் பஜாஜ் ஆர்எஸ் 200 பைக்கின், சேல்ஸ் டேட்டா கிடைக்கவில்லை. ஆனால் பஜாஜ் ஆர்எஸ் 200 பைக்கை காட்டிலும், யமஹா YZF-R15 பைக்குகளுக்குதான் இந்தியாவில் அதிக ரசிகர்கள் இருப்பார்கள் என்று எளிதாக ஒரு முடிவுக்கு வந்து விட முடியும்.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா R15.. ஜிக்ஸர், கேடிஎம் எல்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

பல்வேறு தாமதங்களுக்கு பிறகு, இந்திய மார்க்கெட்டில் புதிய YZF-R15 பைக்குகளை, கடந்த ஜனவரி மாதம்தான் யமஹா களமிறக்கியது. சர்வதேச வெர்ஷனுடன் ஒப்பிடுகையில், இந்திய வெர்ஷன் R15 பைக்கில், ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா R15.. ஜிக்ஸர், கேடிஎம் எல்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

அதாவது ஏபிஎஸ் பிரேக் உள்ளிட்ட சில வசதிகள் இந்திய வெர்ஷன் R15 பைக்கில் இடம்பெறவில்லை. இந்திய மார்க்கெட்டில் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த மாற்றங்களை யமஹா நிறுவனம் செய்தது.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா R15.. ஜிக்ஸர், கேடிஎம் எல்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

அதற்காக இந்திய வெர்ஷன் R15 பைக்கில் வசதிகள் குறைவு என்று நிச்சயமாக சொல்லிவிட முடியாது. நீண்ட பட்டியல் போடும் அளவிற்கான பல்வேறு வசதிகளுடன்தான் இந்திய வெர்ஷன் R15 பைக்கை யமஹா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா R15.. ஜிக்ஸர், கேடிஎம் எல்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 18.7 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஸ்லிப்பர் கிளட்ச் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸை இந்த பைக் பெற்றுள்ளது. இரண்டு சக்கரங்களிலும், டிஸ்க் பிரேக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா R15.. ஜிக்ஸர், கேடிஎம் எல்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

யமஹா YZF-R15 V3 பைக்கின் மும்பை எக்ஸ் ஷோரூம் விலை 1.26 லட்ச ரூபாய். இவ்வளவு விலை கொடுப்பதற்கு இந்த பைக் தகுதியானதுதான். இதன் டிசைன், வாகன ஆர்வலர்கள் பலரையும் ஈர்த்த யமஹா YZF-R1 போன்றே உள்ளது.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா R15.. ஜிக்ஸர், கேடிஎம் எல்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

YZF-R15 V3 பைக்கிற்கு இந்திய மார்க்கெட்டில் நேரடி போட்டி என எந்த பைக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அனைத்து ஃபுல்லி ஃபேர்டு பைக்குகளையும் கவனத்தில் எடுத்து கொண்டால், YZF-R15 V3 பைக்கிற்குதான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா R15.. ஜிக்ஸர், கேடிஎம் எல்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

இதனிடையே YZF-R15 பைக்கின் புதிய வெர்ஷனை யமஹா நிறுவனம் விரைவில் மார்க்கெட்டில் லான்ச் செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் யமஹா பைக் ஆர்வலர்கள் தற்போதில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha YZF-R15 has a massive fan following in india:Proof. Read in tamil.
Story first published: Tuesday, June 26, 2018, 18:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X