பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

ஆர்வக்கோளாறு காரணமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில், போலீசார் வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில், உரிய அனுமதி பெறாமல் பைக் சாகசங்களில் (Bike Stunting) ஈடுபடுவது சட்டப்படி தவறு. எனவே சட்டத்தை மீறி, பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில், பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

ஆனாலும் ஆர்வக்கோளாறு காரணமாக இளைஞர்கள் சிலர் தொடர்ந்து பைக் சாகசங்களில் ஈடுபட்டு கொண்டுதான் உள்ளனர். சென்னையில் உள்ள இசிஆர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக பைக் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

இந்த சூழலில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில், இளைஞர்கள் சிலர் சமீபத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில், அந்த இளைஞர் குழு பைக் சாகசத்தில் ஈடுபட்டது. ஆனால் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் அந்த இளைஞர்கள் அணியவில்லை.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

இளைஞர் குழுவின் பைக் சாகசத்தை நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் போலீசார் அதிரடியாக சீனுக்குள் என்ட்ரி கொடுத்தனர். பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தங்கள் லத்தியால் போலீசார் வெளுத்து வாங்கி விட்டனர்.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

அதிலும் ஒரு இளைஞர் மட்டும் போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டார். பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் அவர் வாங்கிய அடியை பார்த்தால் இனி பைக் சாகசத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு மீண்டும் எழாது என தெரிகிறது!!

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

ஆரம்பத்தில் நிறைய பேர் பைக் சாகசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஆனால் போலீசார் வந்து அடிக்க தொடங்கியதை கண்டதும் ஒரு சிலர் உடனடியாக ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டனர்.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

இந்த சம்பவங்களை எல்லாம் அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் பதிவு செய்தனர். அந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

ஆனால் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டனரா? அல்லது வெறும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டு விட்டனரா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களால், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ஆனால் பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வதில்லை.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

பைக் சாகசம் என்பது எப்போதும் கணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எப்போது வேண்டுமானாலும் பேலன்ஸை இழந்து மற்ற வாகனத்தின் மீது மோதி விடக்கூடிய அபாயம் உள்ளது.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

அத்துடன் சாலையில் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகளின் கவனத்தையும் பைக் சாகசம் சிதறடித்து விடும். இதன் காரணமாகவும் அதிகப்படியான விபத்துக்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் பைக் சாகசத்தில் ஈடுபடுவது என்பது சட்டவிரோதமான ஒன்றாக உள்ளது.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

சாலையில் பயணம் செய்யும்போது அடிக்கடி லேன் மாறுவதும் கூட இந்தியாவில் சட்ட விரோதமான செயல்தான். மற்ற வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலோ அல்லது அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலோ வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

அத்தகைய நபர்களை போலீசார் கைது செய்யலாம். அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்யலாம். ஆனால் அடிக்க கூடாது. அந்த வகையில் பார்த்தால் ராஜ்கோட் போலீசார் செய்ததும் தவறுதான்.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

ஆனால் இந்தியாவில் உள்ள போலீசார், போக்குவரத்து விதிகள் குறித்து அனைவருக்கும் புரியவைக்க பல வழிகளை கையாண்டு வருகின்றனர். இதில் ஒன்றுதான் லத்தி சார்ஜ் போல!!

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

அதே சமயம் வாகன ஓட்டிகளிடம் கையெடுத்து கும்பிட்டு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்திய சம்பவங்களும் கூட இந்தியாவில் நடைபெற்றுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

இந்தியாவில் ஸ்டண்ட் ரைடிங்

இந்தியாவில் சமீப காலமாக ஸ்டண்ட் ரைடிங் பிரபலம் அடைந்து வருகிறது. எனினும் ஸ்டண்ட் ரைடிங்கை எவ்வாறு பாதுகாப்பாக மேற்கொள்வது? என்பதை கற்று தர போதிய அளவிலான பயிற்சி மையங்களோ அல்லது பயிற்சியாளர்களோ இந்தியாவில் இல்லை.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

என்றாலும் பைக்குகள் மீது காதல் கொண்ட இளைஞர்கள் சிலர் ஸ்டண்ட் ரைடிங் மீது அதிக ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் தொழில்முறை ரைடரின் கண்காணிப்பு இல்லாமலும், ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமலும் ஸ்டண்ட் ரைடிங் செய்யும்போதுதான் பிரச்னை எழுகிறது.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?

இதுதவிர பொதுமக்கள் அதிக அளவில் கூடியிருக்கும் இடங்களில் ஸ்டண்ட் ரைடிங் செய்வதும் தவறான ஒரு செயல்தான். இதையெல்லாம் பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Most Read Articles

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Youngsters Assaulted By Police For Performing Bike Stunts On The Public Road. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X