40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

இளம் எஞ்ஜினியர் ஒருவர் சென்னையிலிருந்து காஷ்மீர் வரை 15 மாநிலங்கள் வழியாக சவாலான பாதையில் கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளார். இதுகுறித்த சுவாரஷ்யமான தகவலை இந்த பதிவில் காணலாம்.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் ஆதித்யா. 24 வயது நிரம்பிய இவர் பொறியியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்கின்றார். இவருக்கு மோட்டார் வாகனங்கள் மீதிருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக மெக்கானிக்கல் துறையிலேயே பட்டம் பெற்றிருக்கின்றார். அதுமட்டுமின்றி, இது சம்பந்தப்பட்ட பாடப் பிரிவிலேயே தற்போது சென்னை ஐஐடி-யில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றார்.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

தற்போதைய இளைஞர்கள் பலர் தனக்கு பிடித்த துறையில் ஏதாவது ஒரு சாதனையைப் படைத்திட வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையிலான, ஆர்வம் ஆதித்யாவிற்கும் வந்துள்ளது.

அந்தவகையில், நீண்ட தூரத்தை பயணத்தை மேற்கொள்ள எண்ணிய ஆதித்யா, இதற்காக தெற்கு இந்தியாவில் இருந்து வட இந்தியாவிற்கு செல்ல இலக்கு நிர்ணயித்தார். இந்த இலக்கை எட்டி தற்போது சாதனையும் அவர் படைத்துள்ளார்.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

இதற்காக, அவர் பயன்படுத்திய வாகனம் மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. ஆம், நாகராஜன் ஆதித்யா இந்த நீண்ட தூர பயணத்திற்காக அப்ரில்லா நிறுவனத்தின் எஸ்ஆர் 150 ஸ்கூட்டரையே உபயோகப்படுத்தியுள்ளார். இது பலரிடையே மிகுந்த ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

பொதுவாக, பலர் ஸ்கூட்டரை நீண்ட தூர பயணத்திற்கு உபயோகப்படுத்த மாட்டார்கள். அவை, அதிக தூர பயணத்திற்கு ஏற்றவையல்ல என பெரும்பாலானோர் கூறுவதை நம்மால் கேட்க முடிகின்றது. ஆனால், அதனை முறியடிக்கும் வகையில் ஆதித்யா, அப்ரில்லா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை, புதிய சாதனைக்காக பயன்படுத்தியுள்ளார்.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

அந்தவகையில், தனது சொந்த ஊரான சென்னை அடையாறில் தொடங்கி, 15 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் வரைச் சென்றுள்ளார். கடந்த ஜூன் மாதம் 4 தொடங்கிய இப்பயணம் ஜூலை 13 அன்றே முடிவுற்றது.

இந்த பயணத்தின்போது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 15 மாநிலங்களை அவர் கடந்துச் சென்றுள்ளார்.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

மேலும், இந்த ஒரு மாத கால பயணத்தின்போது, ஆதித்தியாவும் அவரது ஸ்கூட்டரும் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டதாக கூறப்படுகின்றது. அதில், முக்கியமானதாக கால நிலை இருக்கின்றது. அவ்வாறு, ராஜஸ்தானின் 50டிகிரி செல்சியஸ் வெப்பநிலை முதல் லடாக் பகுதியின் -10 டிகிரி செல்சியஸ் வரையிலான சீதோஷ்ன நிலையை அவர் சந்தித்துள்ளார். ஆகையால், ஆதித்யாவிற்கு இது ஓர் புதுவித அனுபவமாக அமைந்திருக்கின்றது.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

மேலும், இந்த பயணத்தின்போது இயற்கையின் அழகுமிகுந்த பல காட்சிகளை அவர் நேரடியாக கண்டு ரசித்துள்ளார். இந்த புதுவித அனுபவத்தை எட்டுவதற்கு அவர் தொடர்ச்சியாக 40 நாட்கள் மற்றும் 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை கடந்துச் சென்றுள்ளார்.

தொடர்ந்து, பயணத்தின்போது மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் சென்றுள்ளார். மேலும், சில சவாலான பாதைகளில் மணிக்கு 50 கிமீ என்ற வேகத்தில் சென்றுள்ளார். இதன்காரணமாகவே, கணிசமான நேரத்தில் நிர்ணயித்த இலக்கை அவரால் எட்ட முடிந்துள்ளது.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

அதேசமயம், தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் ஹெல்மட், கையுறை, ரைடிங் ஜாக்கெட் மற்றும் பேண்ட் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு கவசங்களையும் அவர் அணிந்தே பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

ஆதித்யா, இந்த அப்ரில்லா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாங்கியதாக கூறப்படுகின்று. இந்த சாதனை பயணத்தை அவர் தொடங்குவதற்கு முன்னர் வரை, அதாவது 2019 ஜூன் 3ம் தேதி வரை வெறும் 8,000 கிமீட்டர்கள் மட்டுமே அது பயணித்திருக்கின்றது.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

இதையடுத்து, தனது அப்ரில்லா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு பயன்பாட்டை வழங்கும் என்பதை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதில், தற்போது புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

இந்த பயணத்திற்காக அப்ரில்லா எஸ்ஆர் 150 எந்தவொரு சிறப்பு மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என ஆதித்யா உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும், தனது ஸ்கூட்டரை இதுவரை இரண்டு மட்டுமே சர்வீஸ் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

தொடர்ந்து பேசிய அவர், "ஜங்லா மற்றும் கார்கில் போன்ற சிறிய டவுன்களில் பயணிக்கும்போது, பலர் தன்னை ஆச்சரியமாக பார்த்ததாகவும், அவர்கள் இதுவரை அப்ரில்லா போன்ற ஸ்கூட்டரில் சுற்றுலா பயணிகள் வந்ததில்லை என்ற தெரிவித்ததாகவும்" கூறினார்.

இந்த தருணத்தால் தான் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்திருப்பதாக ஆதித்யாக கூறினார்.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

அப்ரில்லா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் ஸ்போர்ட்ஸ் வாகனங்களின் உருவத்தை ஒத்தவாறு காட்சியளிக்கின்றன. அதுமட்டுமின்றி, அதன் எஞ்ஜின் செயல்பாடுகளும் ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கு இணையானதாக இருக்கின்றது.

40 நாட்கள் 10,000 கிமீ: சென்னை இளைஞரின் புதிய சாதனை... இந்த ஸ்கூட்டரிலா இவ்வளவு தூரம் பயணித்தார்..?

இதன்காரணமாகவே, அப்ரில்லா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. மேலும், ஸ்கூட்டர்களுக்கு கிடைத்த டிமாண்டின் காரணமாக, பைக்குகளைக் காட்டிலும் ஸ்கூட்டர்களின் அறிமுகத்திற்கே அது முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
10000 KiloMetre Roadtrip Aprilia SR 150 Scooter 24 Year Old Engineer Completes Epic 40 Day Roadtrip. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X