நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் களமிறங்கும் அப்ரில்லா ஸ்டிரோம்125... முழு விபரம்!

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் அப்ரில்லாவின் புதிய ஆட்டோமேடிக் ஸ்கூட்டரான ஸ்டிரோம் 125 இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக்கின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் களமிறங்கும் அப்ரில்லா ஸ்டிரோம்125... முழு விபரம்!

இந்தியாவில் பைக்குகளுக்கு நிகரான விற்பனையை ஸ்கூட்டர்களும் சமீபகலாமாக பெற்று வருகின்றன. இதனால் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், பைக்குகளுக்கு இணையான சிசி கொண்ட ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி, 125சிசி முதல் 150 சிசி கொண்ட ஸ்கூட்டர்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் களமிறங்கும் அப்ரில்லா ஸ்டிரோம்125... முழு விபரம்!

அந்த வகையில், பியாஜியோ நிறுவனம் 160சிசி கொண்ட பவர்ஃபுல் ஸ்கூட்டரை, சுஸுகியின் பர்க்மேன் மேக்ஸி மாடல் ஸ்கூட்டருக்கு எதிராக இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க திட்டமிட்டு வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியன. அவ்வாறு, புதிய மேக்ஸி ரக கூட்டரை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அப்ரில்லா நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் களமிறங்கும் அப்ரில்லா ஸ்டிரோம்125... முழு விபரம்!

இந்நிலையில், 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட அப்ரில்லா 125 ஸ்டிரோம் ஸ்கூட்டரை அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஸ்கூட்டர் அந்த நிறுவனத்தின் என்ட்ரீ லெவல் மாடலாக தயாராகி உள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் களமிறங்கும் அப்ரில்லா ஸ்டிரோம்125... முழு விபரம்!

இந்த புத்தம் புதிய 2019 அப்ரில்லா 125 ஸ்டிரோம் ஸ்கூட்டர் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப உருவாகியுள்ளது. ஆகையால், விற்பனைக்கு வரவிருக்கும் அப்ரில்லாவின் ஸ்டிரோம் 125-ல் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டி லுக்கில் இருக்கும் இந்த ஸ்கூட்டரில் நவீன தொழில்நுட்ப வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் களமிறங்கும் அப்ரில்லா ஸ்டிரோம்125... முழு விபரம்!

அந்த வகையில், பேனிக் அலர்ட், நேவிகேஷன், அவசகார உதவி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், ஸ்கூட்டர் தொலைந்தால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும். அதேபோன்று, இந்த ஸ்கூட்டரை அவ்வளவு எளிதாக திருடிவிடவும் முடியாது. அதற்கு தான் பேனிக் அலர்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது, ஸ்கூட்டரை யாரேனும் திருடும் முயற்சியில் அசைத்தால் அலர்ட் கொடுக்க ஆரம்பித்துவிடும்.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் களமிறங்கும் அப்ரில்லா ஸ்டிரோம்125... முழு விபரம்!

அவ்வாறு, இந்த வசதிகள் அனைத்தையும் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ள, ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு ஆப்புகளை இணைக்கும் வசதி மூலம் பெற முடியும். மேலும், ஸ்கூட்டர் குறித்த தகவல்களையும் இந்த ஆப்பில் பெற்றுக்கொள்ளலாம். இத்துடன், ஸ்கூட்டரில் 7 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், உயரமான வின்ட்ஸ்கிரீனும் பொருத்தப்பட்டுள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் களமிறங்கும் அப்ரில்லா ஸ்டிரோம்125... முழு விபரம்!

இந்த அப்ரில்லா 125 ஸ்டிரோம் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் 124.49 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 9.51 பிஎச்பி பவரை 7,250 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். அதேபோன்று, 9.9என்எம் டார்க்கை 6,250 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இத்துடன் சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் களமிறங்கும் அப்ரில்லா ஸ்டிரோம்125... முழு விபரம்!

மூன்று வண்ணங்களில், மேட் ஃபினிஷிங்கில் கிடைக்கும் இந்த அப்ரில்லா ஸ்டிரோம் ஸ்கூட்டரில் 12 இன்ச் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நல்ல ரைட் அனுபவத்தை வழங்கும் வகையில், முன்பக்கத்தில் 120/80 அளவு கொண்ட டயரும், பின் பக்கத்தில் 130/80 அளவு கொண்ட டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் களமிறங்கும் அப்ரில்லா ஸ்டிரோம்125... முழு விபரம்!

இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்ஸனை பொருத்தவரை டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. மேனோஷாக் ஆப்ஷர்பர் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய நவீன அம்சங்களைக் கொண்ட ஸ்டிரோம்125 ஸ்கூட்டருக்கு, இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

source: rushlane

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
2019 Aprilia Storm 125cc Automatic Scooter. Read In Tamil.
Story first published: Friday, April 19, 2019, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X