புதிய டிசைன், பாதுகாப்பு வசதியுடன் விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் பஜாஜ் சிடி110...

பஜாஜ் நிறுவனம், அதன் சிடி110 மாடல் பைக்கை புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தயார் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய டிசைன், பாதுகாப்பு வசதியுடன் விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் பஜாஜ் சிடி110...

பஜாஜ் நிறுவனம், விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய பாதுகாப்பு வதிகளுக்கு ஏற்ப அதன் தயாரிப்புகளை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. புதிய பாதுகாப்பு விதியாக வாகன ஓட்டிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பிரேக்கிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்தல் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், அனைத்து நிறுவனங்களும் அதன் தயாரிப்பு வாகனங்களை புதிய பாதுகாப்பு விதிகளுக்கு அப்டேட் செய்து வருகின்றது.

புதிய டிசைன், பாதுகாப்பு வசதியுடன் விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் பஜாஜ் சிடி110...

அந்தவகையில்தான், இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, பஜாஜும் அதன் பைக்குகளை புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப பிரேக்கிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்வது வருகின்றது. அதுமட்டுமின்றி, இந்த சூழ்நிலையை மேலும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, அதன் பைக்குகளில் புதிய டிசைன், எஞ்ஜின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் போன்ற வசதியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

புதிய டிசைன், பாதுகாப்பு வசதியுடன் விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் பஜாஜ் சிடி110...

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் அதன் என்ட்ரீ லெவல் மற்றும் புகழ்வாய்ந்த பைக்கான பஜாஜ் சிடி110 பைக்கை புதிதுப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், புதிய பதிப்பு நாடு முழுவதும் உள்ள, அதன் டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பிளாட்டினாவைப் போலவே, புதிய சிடி110 பைக்கும் சில மேம்பாடுகளைப் பெற்றிருக்கின்றது. அண்மையில், இந்த புதிய அப்டேட் குறித்த வீடியோ ஒன்றை பெட்ரோ ஹெட் யுடியூப் தளம் வெளியிட்டிருந்தது. அதனை கீழே காணலாம்.

அந்தவகையில், பாதுகாப்பு வசதியாக பஜாஜ் சிடி110 பைக்கில் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதனை, அந்த நிறுவனம் ஆன்டி ஸ்கிட் பிரேக்ஸ் என அழைக்கின்றது. இதற்கு சருக்கி விடுதலுக்கான பிரேக்குகள் என அர்த்தம். இத்துடன், முக்கிய அம்சமாக க்னீ பேடுடன் கூடி பெட்ரோல் டேங்க், மேம்படுத்தப்பட்ட க்ரிப், புதுப்பிக்கப்பட்ட கிராஃபிக், பெரியளவிலான சொகுசான இருக்கை மற்றும் பின்புறத்தை விரிவாக காட்டும் வகையிலான கண்ணாடிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய டிசைன், பாதுகாப்பு வசதியுடன் விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் பஜாஜ் சிடி110...

2019 பஜாஜ் சிடி110 பைக்கில் செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றமாக அதன் எஞ்ஜின் இருக்கின்றது. அந்தவகையில், இந்த சிடி110-ல் புதிய 115சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்ட் டிடிஎஸ்-ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்கும். ஆனால், இந்த எஞ்ஜினின் டார்க் மற்றும் பிஎச்பி குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

புதிய டிசைன், பாதுகாப்பு வசதியுடன் விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் பஜாஜ் சிடி110...

இருப்பினும், இந்த எஞ்ஜின் 8.6 எச்பி மற்றும் 9.81 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனென்றால், அண்மையில் வெளியாகிய பிளாடி எச்-கியர் பைக்கில் இதே தரத்திலான எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இது மேற்கூரிய திறன்களைத்தான் வெளிப்படுத்துகின்றது. அதேசமயம், இந்த பிஎஸ்-6 தரத்திற்கேற்ப உருவாக்கப்பட்டிருப்பதாக இருக்கின்றதா என்ற தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

புதிய டிசைன், பாதுகாப்பு வசதியுடன் விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் பஜாஜ் சிடி110...

தற்போது, மிகப் பெரிய மாற்றங்களில் அறிமுகமாகியுள்ள பிளாட்டினா மாடல் பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், முன்பக்க வீலில் டிஸ்க் பிரேக் மற்றும் 5-ஸ்பீடு கிர்பாக்ஸ் உள்ளிட்டவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை டெல்லி எக்ஸ்-ஷோரூமில் ரூ. 55 ஆயிரமாக இருக்கின்றது. இந்த விலையைக் காட்டிலும் புதிய பஜாஜ் சிடி110 மாடல் பைக்கின் விலை ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய டிசைன், பாதுகாப்பு வசதியுடன் விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் பஜாஜ் சிடி110...

மேலும், இந்த மோட்டார்சைக்கிள் ஹீரோ நிறுவனத்தின் எச்எஃப் டீலக்ஸ், ஹீரோ சிடி ட்ரீம் 110, யமஹா சல்யூட் ஆர்எக்ஸ், டிவிஎஸ் ஸ்போர்ட் உள்ளிட்ட மாடல் பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும். அதேசமயம் அண்மைக் காலங்களாக விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வரும், இந்திய வாகனச் சந்தையில், ஓர் புதிய இடத்தைப் பிடிக்கும் விதமாக பஜாஜ் நிறுவனம், இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
2019 Bajaj CT 110 Gets New Upgrade. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X