புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது!

கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தானே நகரை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய மாடல் டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கின்றன.

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்திவாய்ந்த பைக் மாடலாக டோமினார் 400 பைக் விற்பனையில் உள்ளது. கேடிஎம் 390 பைக்குகளின் எஞ்சின் உள்ளிட்ட முக்கிய பாகங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த புதிய பைக் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கிறது.

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது!

Image Courtesy: Kanchan Bajaj (Thane dealership)

எனினும், கேடிஎம் 390 மாடல்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக்குளால் தொடர்ந்து மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற முடியாத நிலையில் உள்ளது. இந்த சூழலில், பஜாஜ் டோமினார் 400 பைக்கில் பல கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து புதிய மாடலாக களமிறக்கி உள்ளது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது!

புதிய அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் முன்புற சஸ்பென்ஷன் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ:பெங்களூரில் இந்த விஷயத்தை எப்படியாவது பிரபலமாக்க தீவிர முயற்சி... இதற்காக செய்யப்போவது இதுதான்...

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது!

முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள் கொண்ட இந்த பைக்கில் சிறிய மாற்றங்களை செய்து அதிக பிரகாசத்தை பாய்ச்சும் விதத்தில் மேம்படுத்தி இருக்கிறது பஜாஜ் ஆட்டோ. அதேபோன்று, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது!

கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி 390 பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே 373.2சிசி எஞ்சின் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மூன்று ஸ்பார்க் பிளக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதுதான் வேறுபடுத்தும் அம்சம்.

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது!

இந்த பைக்கின் எஞ்சின் டியூவல் கேம்சாஃப்ட் கொண்டதாக வந்திருப்பதால் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளை எளிதாக எதிர்கொள்ளும் என்று கருதப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 40 பிஎஸ் பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பழைய மாடலைவிட கூடுதலாக 5 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது!

அதேபோன்று, பழைய மாடல் அதிகபட்சமாக 148 கிமீ வரை டாப் ஸ்பீடு கொண்டதாக இருந்தது. ஆனால், புதிய மாடல் அதிகபட்சமாக 156 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

MOST READ:பெங்களூரில் இந்த விஷயத்தை எப்படியாவது பிரபலமாக்க தீவிர முயற்சி... இதற்காக செய்யப்போவது இதுதான்...

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது!

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கில் புதிய பச்சை வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கவாஸாகி பைக்குகளை போன்ற இந்த விசேஷ பச்சை வண்ணம் டோமினார் 400 பைக் பிரியர்களை கவரும் இதுதவிர, கருப்பு வண்ணத்திலும் கிடைக்கிறது.

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது!

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் மாடலானது ரூ.1,73,870 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. பழைய மாடலைவிட ரூ.11,000 கூடுதல் விலை கொண்டதாக வந்துள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310, ஹோண்டா சிபிஆர்300ஆர் மற்றும் கேடிஎம் 390 ட்யூக் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். விலை அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு மாடல்களையும் குறி வைக்கிறது.

Most Read Articles

மேலும்... #பஜாஜ் ஆட்டோ
English summary
All new 2019 Bajaj Dominar deliveries have officially started in India.
Story first published: Thursday, April 4, 2019, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X