புதிய பஜாஜ் டோமினார் பைக்கின் விலை இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் இன்றே 'புக்' செய்து விடுவீர்கள்

பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ள புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விலை, டாப் ஸ்பீடு உள்ளிட்ட தகவல்கள் கசிந்துள்ளன. இவை இளைஞர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டிவிட்டுள்ளன.

புதிய பஜாஜ் டோமினார் பைக்கின் விலை இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் இன்றே புக் செய்து விடுவீர்கள்

இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள பைக்குகளில் ஒன்று பஜாஜ் டோமினார் 400 (Bajaj Dominar 400). பஜாஜ் நிறுவனம் தற்போது புத்தம் புதிய 2019ம் ஆண்டு மாடல் டோமினார் 400 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பஜாஜ் நிறுவனத்தின் தொழிற்சாலையில், 2019 டோமினார் 400 பைக் உற்பத்தி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. பஜாஜ் நிறுவன டீலர்களிடம் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இன்னும் ஒரு சில நாட்களில் புதிய டோமினார் 400 பைக் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புதிய பஜாஜ் டோமினார் பைக்கின் விலை இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் இன்றே புக் செய்து விடுவீர்கள்

ஒரு சில டீலர்ஷிப்களில், புதிய டோமினார் 400 பைக்கிற்கான முன்பதிவு தொடங்கப்பட்டிருப்பது இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் உள்ளது. எனவே 2019 டோமினார் 400 பைக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.

புதிய டோமினார் 400 மோட்டார் சைக்கிளில், ஆல் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் சிறப்பான கூலிங்கிற்காக பெரிய ரேடியேட்டர் ஆகியவை இடம்பெறவுள்ளன. அத்துடன் பழைய மாடலில் இருப்பது போன்றே புதிய மாடலின் எரிபொருள் டேங்க்கின் மீதும் டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்படவுள்ளது.

நேரம், கியர் பொஷிஸன், டிரிப் டிஸ்டன்ஸ் மற்றும் எரிபொருள் நுகர்வு உள்ளிட்ட தகவல்களை இது வழங்கும். அதே நேரத்தில் பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய மாடலில் கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground Clearance) அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்ஜினில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் பஜாஜ் நிறுவனம் வெளியிடவில்லை. என்றாலும் முன்பை காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், தி ஸ்ட்ரோம் ரைடர் என்ற யூடிபருக்கு புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கியர்களில் 2019 டோமினார் 400 பைக்கின் டாப் ஸ்பீடை (Top Speed) சோதித்து பார்த்தார்.

புதிய பஜாஜ் டோமினார் பைக்கின் விலை இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் இன்றே புக் செய்து விடுவீர்கள்

அத்துடன் பழைய மாடல் டோமினார் 400 பைக்கின் டாப் ஸ்பீடை ஒப்பிட்டு தற்போது வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை வைத்து பார்க்கையில், புதிய மாடல் டோமினார் 400 பைக்கின் வேகம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது புதிய மாடல் பஜாஜ் டோமினார் 400 பைக்கானது, முதல் கியரில் மணிக்கு 57 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்திலும், இரண்டாவது கியரில் மணிக்கு 81 கிலோ மீட்டர்கள் வேகத்திலும், மூன்றாவது கியரில் மணிக்கு 106 கிலோ மீட்டர்கள் வேகத்திலும் பறந்தது.

பழைய மாடல் டோமினார் 400 பைக்குடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம். பழைய மாடல் டோமினார் 400 பைக்கின் வேகம் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கியர்களில் முறையே மணிக்கு 49, 71 மற்றும் 92 கிலோ மீட்டர்கள் மட்டுமே.

இத்தனைக்கும் புதிய மாடல் டோமினார் 400 பைக், காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் வைத்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. பழைய மாடல் டோமினார் 400 பைக் சோதனை செய்யப்பட்ட இடத்துடன் ஒப்பிடுகையில், இது மிக உயரமான மற்றும் ஆக்ஸிஜன் குறைவான பகுதியாகும்.

அப்படி இருந்தும் கூட புதிய மாடல் டோமினார் 400 பைக்தான் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இரண்டு மாடல் பைக்குகளையும் சோதனை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

புதிய பஜாஜ் டோமினார் பைக்கின் விலை இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் இன்றே புக் செய்து விடுவீர்கள்

தற்போது உள்ள டோமினார் 400 பைக்கில், 373.3 சிசி, ட்ரிபிள் ஸ்பார்க், எஸ்ஓஹெச்சி, 4 வால்வு, டிடிஎஸ்-ஐ, லிக்விட் கூல்டு, ஃப்யூயல் இன்ஜென்டட் இன்ஜின் (373.3cc, Triple Spark, SOHC, 4 Valve, DTS-i, Liquid Cooled, Fuel Injected Engine) பொருத்தப்பட்டுள்ளது.

இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸின் வழியாக, 8,000 ஆர்பிஎம்மில் 35 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 35 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் சக்தி வாய்ந்தது. இந்த சூழலில் மேற்கண்ட வீடியோவில், இந்த ரைடர் 2019 டோமினார் பைக்கை 10 ஆயிரம் ஆர்பிஎம் வரை ஓட்டுவதை காண முடிகிறது.

அதே நேரத்தில் அதிர்வுகளும் குறைவாகவே உள்ளன. இதற்கு டிஓஹெச்சி (DOHC) செட் அப்பிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். தற்போது உள்ள பழைய மாடல் டோமினார் 400 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 1.63 லட்ச ரூபாய்.

இதனுடன் ஒப்பிடுகையில் புதிய மாடல் பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விலை சுமார் ரூ.20 ஆயிரம் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது 2019 டோமினார் 400 பைக்கின் விலை ரூ.1.8-2 லட்ச ரூபாய்க்குள் (எக்ஸ் ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக செய்யப்பட்டுள்ள அப்டேட்களுக்கு இது நியாயமான விலையாகவே பார்க்கப்படுகிறது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக்காகவே இது இருக்கும். இதனிடையே ஏற்கனவே குறிப்பிட்டபடி இன்னும் ஒரு சில நாட்களில் புதிய டோமினார் 400 விற்பனைக்கு வரவுள்ளது. அந்த நாளுக்காகதான் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பேராவலுடன் காத்து கொண்டுள்ளனர்!!!

Most Read Articles
English summary
2019 Bajaj Dominar Faster Than Old Dominar: Top Speed, Expected Price, Specifications. Read in Tamil
Story first published: Sunday, February 10, 2019, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X