அதிக திறனுடைய பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம், அதன் எஸ்1000ஆர்ஆர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருக்கும் நாள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பைக் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டாராட் என்ற பெயரில் அதிநவீன பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில், உலக தரம் வாய்ந்த பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கின் அப்டேட் வெர்ஷனை, அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

அவ்வாறு, வருகின்ற ஜூன் 27ம் தேதி, புதிய மாடல் பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது. இந்த சூப்பர் பைக்கை பிஎம்டபிள்யூ நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்திருந்தது. ஆனால், இதன் உலகளாவிய அறிமுகத்தை கடந்த 2009ம் ஆண்டே அந்த நிறுவனம் நிகழ்த்திவிட்டது.

பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

அதேசமயம், தற்போது அறிமுகமாக இருக்கும் இந்த புத்தம் புதிய மாடல் எஸ்1000ஆர்ஆர் பைக்கில் பல்வேறு அப்டேட் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், புதிய நவீன அம்சங்கள், அதிக திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் மற்றும் குறைக்கப்பட்ட எடை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை அடங்கிய மாடலாக இந்த பைக் களமிறங்க இருக்கின்றது.

பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

அவ்வாறு, இந்த பைக்கின் அதீத திறனுக்காக 999சிசி திறன்கொண்ட, 4 ஸ்ட்ரோக் 16 வால்வ் உடைய டிஓஎச்சி இன்லைன்-4 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, பழைய மாடலைக் காட்டிலும் 8 எச்பி அதிகமாக வெளிப்படுத்தும் வகையில் ட்யூன்-அப் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், 207 எச்பி பவரை 13,500 ஆர்பிஎம்மிலும், 113 என்எம்டார்க்கை 11,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். மேலும், இதன் லிக்யூடு கூல்ட், ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

இத்துடன், மேலுமொரு அப்டேட்டாக, இந்த எஞ்ஜினில் பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்கேம் டெக்னாலஜி வழங்கப்பட்டுள்ளது. இது, வால்வின் நேரம் மற்றும் உயர்த்துதலை கன்ட்ரோல் செய்ய பயன்படும். வால்வ் நேரத்தை கன்ட்ரோல் செய்யப்படுவதால், பைக் சாலச் சிறந்த செயல்திறனை, வெவ்வேறு ஆக்சலரேஷனிலும் வெளிப்படுத்தும்.

பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

அதேபோன்று, இந்த பைக்கின் எலக்ட்ரானிக் சிஸ்டமும் கணிமசான அப்டேட்டைப் பெற்றுள்ளது. அவ்வாறு, அதில் ஆறு ஆக்ஸிஸ் ஐம்யூ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது, ஏபிஎஸ் பிரேக்கிங் மற்றும் டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த உதவும். மேலும், ரோட், ரெயின், டைனமிக் மற்றும் ரேஸ் ஆகிய நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

அவை, அதன் பெயருக்கேற்பாற்போல திறன்களை வெளிப்படுத்தும். இவற்றை, பைக்கில் வழங்கப்பட்டுள்ள 6.5 இன்சிலான டிஎஃப்டி டிஸ்பிளே மூலம் கன்ட்ரோல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த பைக்கில் மேலுமொரு நடவடிக்கையாக எடை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

இந்த அதிரடி நடவடிக்கையால், பைக்கின் சக்தி மேலும் கூடியுள்ளது. அவ்வாறு, எஸ்1000ஆர்ஆர் பைக்கில் 11 கிலோ குறைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இது தற்போது 197 கிலோவாக உள்ளது. அதேபோன்று, இதன் டாப் ஸ்பெக் மாடல் 193.5 கிலோவாக இருக்கின்றது. இந்த எடைக் குறைப்பானது, குறைவான எடைக் கொண்ட பாகங்கள் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

இத்துடன் பாதுகாப்பு வசதியாக, பழைய ஹேயஸ் பிரேக்குகளுக்கு பதிலாக, ப்ரெம்போ யூனிட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பான சஸ்பென்ஷனுக்காக மர்ஸோச்சி சஸ்பென்ஷன்கள் வழங்கப்பபட்டுள்ளன. பிஎம்டபிள்யூ-வின் இந்த எஸ்1000ஆர்ஆர் பைக் சர்வதேச சந்தையில், ஸ்டாண்டர்டு, ஸ்போர்ட் மற்றும் எம் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

ஆனால், இந்தியாவில் ஸ்டாண்டர்டு மாடல் மட்டும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைக் காட்டிலும் அதிக விலைக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது. தற்போது, விற்பனையில் இருக்கும் எஸ்1000ஆர்ஆர் பைக் ரூ.18.5 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்!

அதேபோன்று, இதர மாடல்களான ஸ்போர்ட் மற்றும் எம் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்படுமேயானால், அதில் ஸ்போர்ட் மாடல், ஸ்டாண்டர்டு மாடலைக் காட்டிலும் ரூ. 2 லட்சம் அதிமாகவும், டாப் ஸ்பெக் மாடலான எம், ரூ. 25 லட்சத்திற்கும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
2019 BMW S1000RR Launching 25 June. Read In Tamil.
Story first published: Friday, June 14, 2019, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X