முதலிடத்தை தக்க வைத்து கொண்டது ஹோண்டா ஆக்டிவா... 2, 3வது இடங்களில் எந்த ஸ்கூட்டர் தெரியுமா?

இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

முதலிடத்தை தக்க வைத்து கொண்டது ஹோண்டா ஆக்டிவா... 2, 3வது இடங்களில் எந்த ஸ்கூட்டர் தெரியுமா?

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-4 ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹோண்டா ஆக்டிவா முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 2,05,239 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதம் (2018 பிப்ரவரி) மொத்தம் 2,47,377 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

முதலிடத்தை தக்க வைத்து கொண்டது ஹோண்டா ஆக்டிவா... 2, 3வது இடங்களில் எந்த ஸ்கூட்டர் தெரியுமா?

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விற்பனை சரிந்திருந்தாலும் கூட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. தற்போது ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை களமிறக்கும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

முதலிடத்தை தக்க வைத்து கொண்டது ஹோண்டா ஆக்டிவா... 2, 3வது இடங்களில் எந்த ஸ்கூட்டர் தெரியுமா?

இந்த பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்திருப்பது டிவிஎஸ் ஜூபிடர். கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 48,688 ஜூபிடர் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018 பிப்ரவரியில் மொத்தம் 63,534 யூனிட் டிவிஎஸ் ஜூபிடர்கள் விற்பனையாகியிருந்தன. விற்பனை சரிந்திருந்தாலும், ஹோண்டா ஆக்டிவாவை போல் டிவிஎஸ் ஜூபிடரும் 2வது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

முதலிடத்தை தக்க வைத்து கொண்டது ஹோண்டா ஆக்டிவா... 2, 3வது இடங்களில் எந்த ஸ்கூட்டர் தெரியுமா?

இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருப்பது சுஸுகி அக்ஸெஸ். 2019 பிப்ரவரியில் 48,265 யூனிட் சுஸுகி அக்ஸெஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2018 பிப்ரவரியில் வெறும் 39,061 சுஸுகி அக்ஸெஸ் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனையாகி இருந்தன. விற்பனையில் வளர்ச்சியை சந்தித்திருப்பதன் மூலம் சுஸுகி அக்ஸெஸ் ஒரு இடம் முன்னேறியுள்ளது.

முதலிடத்தை தக்க வைத்து கொண்டது ஹோண்டா ஆக்டிவா... 2, 3வது இடங்களில் எந்த ஸ்கூட்டர் தெரியுமா?

கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுஸுகி அக்ஸெஸ் 4வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், சுஸுகி அக்ஸெஸ் ஒரு இடம் முன்னேறியிருந்தாலும் கூட 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டால் ஒரு இடம் பின்தங்கியுள்ளது.

முதலிடத்தை தக்க வைத்து கொண்டது ஹோண்டா ஆக்டிவா... 2, 3வது இடங்களில் எந்த ஸ்கூட்டர் தெரியுமா?

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியலில் டிவிஎஸ் ஜூபிடரை வீழ்த்தி, சுஸுகி அக்ஸெஸ் 125 ஸ்கூட்டர் 2வது இடத்தை பிடித்திருந்தது. ஆனால் அடுத்த மாதத்திலேயே சுஸுகி அக்ஸெஸை 3வது இடத்திற்கு தள்ளி, தனது இடத்தை மீண்டும் பிடித்துள்ளது டிவிஎஸ் ஜூபிடர்.

முதலிடத்தை தக்க வைத்து கொண்டது ஹோண்டா ஆக்டிவா... 2, 3வது இடங்களில் எந்த ஸ்கூட்டர் தெரியுமா?

இதனிடையே 2018ம் ஆண்டு பிப்ரவரி மாத பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ஸ்கூட்டர் ஹோண்டா டியோ. அப்போது 41,556 டியோ ஸ்கூட்டர்களை மட்டுமே ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை 45,017 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

முதலிடத்தை தக்க வைத்து கொண்டது ஹோண்டா ஆக்டிவா... 2, 3வது இடங்களில் எந்த ஸ்கூட்டர் தெரியுமா?

என்றாலும் தற்போது ஒரு இடம் பின்தங்கி 4வது இடத்தையே ஹோண்டா டியோவால் பிடிக்க முடிந்திருக்கிறது. இந்திய இளைஞர்கள் மத்தியில் ஹோண்டா டியோ மிகவும் பிரபலமாக திகழ்கிறது. குறிப்பாக கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கல்லூரிக்கு செல்லும் இளைஞர்கள்தான் ஹோண்டா டியோவிற்கான முக்கிய வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

Most Read Articles
English summary
2019 February Sales Report: Best Selling Scooters In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X