கோவாவில் கோலாகலம்... இந்திய பைக் வீக் திருவிழா துவங்கியது

இந்திய பைக் பிரியர்களின் ஆவலை எகிற வைத்த, இந்திய பைக் வீக் திருவிழா கோவாவில் கோலாகலமாக நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவாவில் கோலாகலம்... இந்திய பைக் வீக் திருவிழா துவங்கியது

இத்தாலியில் ஆண்டுதோறும் நடக்கும் ஐக்மா கண்காட்சி போன்று, இந்தியாவின் மாபெரும் பைக் திருவிழாவாக இந்திய பைக் வீக் திருவிழா மாறி இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்த திருவிழாவின் உற்சாகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

 கோவாவில் கோலாகலம்... இந்திய பைக் வீக் திருவிழா துவங்கியது

இந்தியாவிலுள்ள பைக் உரிமையாளர்கள் மற்றும் பைக் பிரியர்களை ஒன்றிணைக்கும் விதமாக துவங்கப்பட்ட இந்த திருவிழா தற்போது பெரிய பைக் நிறுவனங்கள் பங்கேற்கும் அளவுக்கு பெரிய அளவிலான திருவிழாவாக மாறி இருக்கிறது.

 கோவாவில் கோலாகலம்... இந்திய பைக் வீக் திருவிழா துவங்கியது

கோவாவிலுள்ள வடகர் பகுதியில் இந்த திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பைக் உரிமையாளர்கள் தங்களது பைக்குகளில் பயணித்து வந்து கோவாவில் முற்றுகையிட்டு இருக்கின்றனர். இந்த ஆண்டு 40,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கோவாவில் கோலாகலம்... இந்திய பைக் வீக் திருவிழா துவங்கியது

இந்த ஆண்டு திருவிழாவில் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் எடிட்டர் ஜோபோ குருவில்லா, மூத்த உதவி ஆசிரியர் ராகுல் ஜஸ்வால், மும்பை நிருபர் புரோமித் கோஷ், உதவி ஆசிரியர்கள் ராகுல் நாகராஜ் மற்றும் புனித் பரத்வாஜ் இந்த திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். பிரத்யேக செய்திகளையும் நேரடியாக வழங்கி வருகின்றனர்.

 கோவாவில் கோலாகலம்... இந்திய பைக் வீக் திருவிழா துவங்கியது

நேற்றும், இன்றும் நடைபெறும் இந்த திருழாவில் கேடிஎம், ஹஸ்க்வர்னா, ட்ரையம்ஃப் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் புதிய பைக் மாடல்கள் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஃப்ளாட் டிராக் எக்ஸ்பீரியன்ஸ் களமும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. பைக் உரிமையாளர்களுக்கான ஹில் க்ளைம்ப் மற்றும் ஆஃப்ரோடு பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

 கோவாவில் கோலாகலம்... இந்திய பைக் வீக் திருவிழா துவங்கியது

இந்த திருவிழாவில் விசேஷமான தோற்றத்தில் மாறுதல்கள் செய்யப்பட்ட பைக் மாடல்கள், விசேஷ ஆக்சஸெரீகள், பைக் சாகச நிகழ்ச்சிகள், பைக் பிரியர்களை கவரும் வகையிலான முன்னணி இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், விதவிதமான உணவு வகைகள் என அனைத்து அம்சங்களுடன் இந்த திருவிழா களை கட்டி இருக்கிறது.

 கோவாவில் கோலாகலம்... இந்திய பைக் வீக் திருவிழா துவங்கியது

இன்று நிறைவு நாள் என்பதால், நாடுமுழுவதும் இருந்து பைக் உரிமையாளர்களும், ஆர்வலர்களும் குவிந்து வருகின்றனர். இந்திய பைக் வீக் திருவிழாவின் பிரத்யேக கவரேஜை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் தொடர்ந்து வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Most Read Articles
English summary
The India Bike Week 2019 has began with much fanfare at Vagator, Goa.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X