பல்வேறு மாற்றங்களுடன் மார்க்கெட்டை கலக்க வருகிறது 2019 சுஸுகி ஜிக்ஸெர் 155... முழு விபரம்!

2019 சுஸுகி ஜிக்ஸெர் 155 மோட்டார் சைக்கிள் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல்வேறு மாற்றங்களுடன் மார்க்கெட்டை கலக்க வருகிறது 2019 சுஸுகி ஜிக்ஸெர் 155... முழு விபரம்!

அப்டேட் செய்யப்பட்ட 2019 மாடல் ஜிக்ஸெர் 155 மோட்டார் சைக்கிளை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய சுஸுகி நிறுவனம் (2019 Suzuki Gixxer 155) தயாராகி வருகிறது. அனேகமாக புதிய ஜிக்ஸெர் 155 மோட்டார் சைக்கிள், இந்திய மார்க்கெட்டில் அடுத்த மாதம் (மே) களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய மாடலில் சுஸுகி நிறுவனம் பல்வேறு அப்டேட்களை செய்யவுள்ளது. பெரும்பாலான மாற்றங்கள் அழகியல் சார்ந்ததாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு மாற்றங்களுடன் மார்க்கெட்டை கலக்க வருகிறது 2019 சுஸுகி ஜிக்ஸெர் 155... முழு விபரம்!

சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்-எஸ் சீரீஸை (Suzuki GSX-S Series) மனதில் வைத்து, 2019 ஜிக்ஸெர் 155 மாடல் டிசைன் செய்யப்படவுள்ளது. இதில், ரீ டிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும்

புதிய ஃபெண்டர்கள் (Fenders) வழங்கப்படவுள்ளன. எரிபொருள் டேங்கிற்கு புதிய டிசைன் கொடுக்கப்படவுள்ளது. என்றாலும் தற்போதைய மாடலில் உள்ள சில அம்சங்களும் அப்படியே புதிய மாடலுக்கும் எடுத்து செல்லப்படவுள்ளன.

பல்வேறு மாற்றங்களுடன் மார்க்கெட்டை கலக்க வருகிறது 2019 சுஸுகி ஜிக்ஸெர் 155... முழு விபரம்!

2019 சுஸுகி ஜிக்ஸெர் 155 மாடலில், ஸ்போர்ட்டியான ஸ்பிளிட் சீட் (Split Seat) இருக்கை அமைப்பு இடம்பெறவுள்ளது. ஆனால் தற்போதைய மாடலில் சிங்கிள் பீஸ் யூனிட் மட்டுமே இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த செக்மெண்ட்டில் சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் ரைடிங் பொஷிஸன்தான் (Riding Position) மிகச்சிறப்பானதாக கருதப்படுகிறது. இருந்தபோதும் அதனை இன்னும் சிறப்பானதாக மாற்ற சுஸுகி நிறுவனத்தின் இன்ஜினியர்கள் சில மாற்றங்களை செய்யவுள்ளனர்.

பல்வேறு மாற்றங்களுடன் மார்க்கெட்டை கலக்க வருகிறது 2019 சுஸுகி ஜிக்ஸெர் 155... முழு விபரம்!

அதே நேரத்தில் சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் (Single Piece Handlebar) தக்க வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டருக்கு புதிய டிசைன் கொடுக்கப்படலாம். மெட்டீரியல்களின் தரம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எல்இடி ஹெட்லேம்ப், டெயில்லேம்ப் மற்றும் எல்இடி இன்டீகேட்டர்கள் இடம்பெறவுள்ளது.

பல்வேறு மாற்றங்களுடன் மார்க்கெட்டை கலக்க வருகிறது 2019 சுஸுகி ஜிக்ஸெர் 155... முழு விபரம்!

அதே சமயம் 2019 ஜிக்ஸெர் 155 மோட்டார் சைக்கிளில், சுஸுகி ஈஸி ஸ்டார்ட் சிஸ்டம் (Suzuki Easy Start System) அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஜிக்ஸெர் பைக்கில், 154.9 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8,000 ஆர்பிஎம்மில் 14.8 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் பவர் அவுட்புட்டை அதிகரிக்கும் வகையில், புதிய மாடலின் இன்ஜினில் சுஸுகி நிறுவனம் சில மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பல்வேறு மாற்றங்களுடன் மார்க்கெட்டை கலக்க வருகிறது 2019 சுஸுகி ஜிக்ஸெர் 155... முழு விபரம்!

தற்போதைய மாடலின் முன்பகுதியில் 266 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பகுதியில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதே பிரேக்கிங் அமைப்பு புதிய மாடலுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. அதே நேரத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படும். இவை தவிர அப்டேட் செய்யப்பட்ட 2019 மாடலில் புதிய கலர் ஆப்ஷன்களும் வழங்கப்படவுள்ளன. இதன் காரணமாக பழைய மாடலை காட்டிலும் புதிய மாடலின் விலை சற்றே அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
2019 Suzuki Gixxer 155 India Launch Details. Read in Tamil
Story first published: Monday, April 8, 2019, 10:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X