மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...

யமஹா ஆட்டோமொபைல் நிறுவனம் பைக், கார்களுடன் மூன்று சக்கர வாகன உற்பத்தியிலும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிறுவனத்தின் புதிய மூன்று சக்கர வாகனமான ட்ரைசிட்டி 300 ஸ்கூட்டர் 2019 டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...

இந்த கண்காட்சியில் இடம் பெற்றதன் மூலம் இந்த ட்ரைசிட்டி 300 ஸ்கூட்டரின் சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இந்த மூன்று சக்கர டிசைன் முதலில் 2019 யமஹா நிகேன் ஸ்போர்ட் டூரிங் மோட்டார் சைக்கிளில் தான் வடிவமைக்கப்பட்டது.

மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...

'மிக பெரிய மகிழ்ச்சி இனி வர இருக்கிறது- மனிதர்களுக்கு ஏற்ற கூறுகளுடன் ஏஆர்டி' என்ற தத்துவத்துடன் ட்ரைசிட்டி 300 ஸ்கூட்டர் டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரில் யமஹா நிறுவனம், சாய்ந்த மல்டி வீலர்ஸ் (எல்எம்எம்) என்ற தொழிற்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.

மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...

இந்த தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்ட மற்றொரு வாகனமான நிகேன் மற்றும் ட்ரைசிட்டி 125 போன்ற மூன்று சக்கர வாகனங்களை அடிப்படையாக கொண்டு இந்த மூன்று சக்கர டிரைசிட்டி 300 ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...

தரமான சிறப்பம்சங்கள், மற்ற ஸ்கூட்டர்களுடன் போட்டியிடும் வகையிலான விலை மற்றும் நிகரற்ற தரம் போன்றவற்றால் வாடிக்கையாளர்களை கவனத்தை பெற்றிருக்கும் இந்த ஸ்கூட்டரை சந்தையில் முன்னிலை படுத்த யமஹா நிறுவனம் பல திட்டங்களை வகுத்து வைத்துள்ளது.

மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...

மேலும் இந்த மூன்று சக்கர வாகனத்தால் ஹர்பன் இயக்க பிரிவை மீண்டும் புத்துயிர் பெற வைக்க முடியும் எனவும் யமஹா நிறுவனம் நம்புகிறது. மிக விரைவில் ட்ரைசிட்டி 300 ஸ்கூட்டர் சில ஐரோப்பிய நாடுகளின் மார்கெட்டில் அறிமுகமாகவுள்ளது.

மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...

ப்ளூ கோர் என்ற என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் என்ஜின் வெளியிடும் ஆற்றல் குறித்த தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளிவரவில்லை. இவை அனைத்தும் நவம்பரில் இத்தாலியில் நடைபெறவுள்ள இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் வெளிவரும் என தெரிகிறது.

மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...

இந்த ட்ரைசிட்டி 300 பைக் கண்டிப்பாக நம்பகத்தன்மையுடன் ஓட்டும் உணர்வையும் நல்ல விதமான தொடக்கத்தை ஈரமான பரப்பிலும் கொடுக்கும் என யமஹா நிறுவனம் கூறுகிறது.

மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...

ட்ரைசிட்டி 300 மூன்று விதமான நிறங்களின் தேர்வுகளில் விற்பனையாகவுள்ளது. அவையாவன, டெக் கமோ, நிம்புஸ் க்ரே மற்றும் மாட் க்ரே ஆகும். இந்த அழகிய ட்ரைசிட்டி 300 ஸ்கூட்டர் இந்தியாவில் தற்போதைக்கு வெளிவராது. ஆனால் நிச்சயமாக எதிர்காலத்தில் இங்கு அவசியம் தேவைப்படும் வாகனமாக மாறும் என்பது உறுதி.

மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...

யமஹா இந்தியா நிறுவனத்தை பொறுத்த வரையில், வரும் டிசம்பரில் தனது அடுத்த அறிமுகமாக அப்டேட் செய்யப்பட்ட ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கை வெளியிடவுள்ளது. இந்நிறுவனத்தின் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வெளியாகவுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக் குறித்த விரிவான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Tokyo Motor Show 2019: Yamaha Tricity 300 three wheeled scooter unveiled
Story first published: Friday, October 25, 2019, 19:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X