பெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை

பெனெல்லி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட 302எஸ் பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதி செய்துள்ளது. இதன் இந்திய அறிமுகம் குறித்து நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்புகையில் பெனெல்லி மோட்டார் நிறுவனம் விரைவில் என பதிலளித்துள்ளது.

பெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை

ஆனால் இந்த பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. நமக்கு தெரிந்த வரை இந்த 302எஸ் பைக் அமெரிக்க மார்கெட்டில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டதால், இந்தியா சந்தையிலும் மிக விரைவில் 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

பெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை

இந்திய மார்கெட்டில் பெனெல்லி டிஎன்டி300 பைக்குக்கு மாற்றாக வெளியாகவுள்ள இந்த 302எஸ் பைக், டிஎன்டி300 பைக்கை விட தோற்றத்திலும் அப்டேட்டிலும் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளது. உதாரணமாக ஹெட்லைட்ஸ் முழுவதும் எல்இடி விளக்குகளாக உள்ளது.

பெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை

டிஎன்டி300 பைக்கில் உள்ள செமி-டிஜிட்டல் யூனிட்டிற்கு பதிலாக இந்த பைக்கில் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தொடுத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஸ்டைலான அப்டேட்டாக சிறிய அளவில் ரேடியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

பெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை

இந்த மாற்றங்களை தவிர்த்து பார்த்தால், 302எஸ் மாடல் பைக்கும் டிஎன்டி300 பைக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும். எரிபொருள் டேங்கின் வடிவம், ஷாட்டில், பின்புற பேனல், என்ஜின் தாங்கி போன்ற பாகங்கள் அனைத்தும் இந்த இரு பைக்குகளிலும் ஒரே வடிவத்தில் தான் உள்ளன.

பெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை

ஆனால் 302எஸ் பைக்கின் என்ஜின் வெளியிடும் ஆற்றல் டிஎன்டி300-ஐ விட அதிகமாக உள்ளது. 302எஸ் பைக்கில் 300சிசி, இணையான ட்வின் சிலிண்டர் அமைப்புடன் கூடிய லிக்யூடு-கூல்டு, நான்கு வால்வு டிஓஎச்சி என்ஜின் அதிகப்பட்சமாக 11,000 ஆர்பிஎம்-ல் 37.5 பிஎச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்-ல் 25.62 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை

282சிசி இணையான ட்வின் சிலிண்டர் அமைப்புடன் உள்ள லிக்யூடு-கூல்டு, 4 வால்வு டிஓஎச்சி என்ஜினை கொண்ட டிஎன்டி300 பைக் 10,500 ஆர்பிஎம்-ல் 32.2 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 24.94 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

பெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை

ஹார்ட்வேர்களை பொறுத்து பார்த்தால், டிஎன்டி300 பைக்கில் உள்ள சஸ்பென்ஷன், ப்ரேக்கிங் அமைப்பை தான் 302எஸ் பைக் கொண்டுள்ளது. டிஎன்டி300 பைக்கில் முன் சக்கரத்தில் 41 மிமீ தலைக்கீழான ஃபோர்க்ஸ் அமைப்பும் பின்புற சக்கரத்தில் சமச்சீரற்ற முறையில் அமைக்கப்பட்ட மோனோ-ஷாக் அமைப்பு உள்ளன. முன்புற சஸ்பென்ஷன் அமைப்பை தேவைக்கு ஏற்ற போல் சரி செய்ய முடியாது. ஆனால் பின்புற சஸ்பென்ஷனை மாற்றலாம்.

பெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை

ப்ரேக்கிங் அமைப்பாக நான்கு பிஸ்டன்களுடன் பொருத்தப்பட்ட 260 மிமீ ட்யூல் டிஸ்க் முன்புறத்திலும், இரண்டு பிஸ்டன்களுடன் பொருத்தப்பட்ட 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பின்புறத்திலும் உள்ளன. அமெரிக்காவில் விற்பனையாகி வருகின்ற 302எஸ் பைக்கில் ஏஞ்சல் எஸ்டி டயர்கள் முன்புற சக்கரத்தில் 120/70-இசட்ஆர்17 மற்றும் பின்புற சக்கரத்தில் 160/60-இசட்ஆர்17 என்ற அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளன. இதே டயர் அமைப்பு தான் இந்தியாவில் வெளியாகும் 302எஸ் பைக்கிலும் கொடுக்கப்படும் என தெரிகிறது.

பெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை

பெனெல்லி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வாகனமாக டிஎன்டி600ஐ பைக்கை உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் இந்த பைக்கின் அறிமுகம் அடுத்த மாதம் 5ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை இத்தாலியில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
2020 Benelli 302S to be launched in India soon
Story first published: Saturday, October 26, 2019, 19:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X