ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

கேடிஎம் நிறுவனத்தின் புதிய 2020 கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் பைக் யூரோ-5விற்கு இணக்கமான என்ஜினுடன் ஐக்மா 2019 நிகழ்ச்சியில் அறிமுகமாகியுள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் முதன்மையான மாடலாக விளங்குகின்ற இந்த பைக்கில் இயந்திர பாகங்களில் மிக பெரிய அளவில் மாற்றங்கள் நடைபெற்று உள்ளன.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

ஆனால் இந்த 1290 சூப்பர் ட்யூக் ஆர் பைக்கில் கேடிம் நிறுவனம் வழக்கமான ஹெட்லைட் அமைப்பை தான் பொருத்தியுள்ளது. அதேபோல் தோற்றத்திலும் இந்த பைக் 790 மற்றும் 890 ட்யூக் மாடல்களை தான் ஒத்துள்ளது.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

என்ஜினை பாதுகாக்க பொருத்தப்பட்டுள்ள குறுக்கு நெடுக்கான கம்பிகள் புதிய உலோகத்தால் செய்யப்பட்டுள்ளன. பைக்கில் டிசைனிற்காக கொடுக்கப்பட்டுள்ள சப்-ப்ரேம்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

பைக்கின் முகப்பு, கரும் பூச்சு உடைய விண்ட் ஸ்க்ரீன் அமைப்பு புதிய வடிவில் திருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கும் இந்த 1290 சூப்பர் ட்யூக்கில் கவனித்தக்க வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் டேங்க்கின் டிசைன் மாற்றம் என்ஜின் யூரோ-5விற்கு மாற்றப்பட்டதற்காக கூட இருக்கலாம்.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

ஓட்டுபவர் அமர்வதற்கான இருக்கை அமைப்பு பெட்ரோல் டேங்குடன் நெருக்கமாக இல்லாத வகையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் மிக பெரிய மாற்றமே இதன் என்ஜின் யூரோ-5விற்கு மாற்றப்பட்டது தான்.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

75 டிகிரி வி-ட்வின் சிலிண்டர், லிக்யூடு கூல்டு, 8 வால்வு (சிலிண்டருக்கு 4 வால்வுகள் வீதம்) அமைப்புடன் உள்ள டிஒஎச்சி 1,103சிசி என்ஜின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலானது 9,500 ஆர்பிம்மில் 180 எச்பி ஆகவும், 8,000 ஆர்பிம்மில் 140 என்எம் டார்க் திறனாகவும் உள்ளது. யூரோ-4 என்ஜினுடன் தற்சமயம் விற்பனையாகி வருகின்ற மற்ற கேடிஎம் பைக்குகள் 173.5 எச்பி பவரை வெளிப்படுத்துகின்றன.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

ஆற்றல் வெளிப்படுத்தும் திறன் 200 எச்பி என்ற அளவை தொடவில்லை என்பது குறையாகத்தான் உள்ளது. இருப்பினும் வெளிப்படுத்தும் டார்க் திறன் 8,000 ஆர்பிஎம்மில் 140 என்எம் ஆகவுள்ளது சிறந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் இன்னொரு மாற்றமாக புகைப்போக்கி குழாய் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால், பெரிய ரேடியேட்டர் பொருத்துவதற்கான வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

இந்த பைக், இரண்டு கேட்டலிடிக் மாற்றிகள் கொண்ட முதன்மை மற்றும் துணை வகை சைலன்ஸர்களை கொண்டுள்ளது. 48மிமீ தலைக்கீழ் ஃபோர்க்ஸ் முன்புறத்திலும் மோனோ-ஷாக் பின்புறத்திலும் சஸ்பென்ஷன் அமைப்பாக இந்த பைக்கில் உள்ளன. இந்த இரு சஸ்பென்ஷனும் டபிள்யூ ஏபிஇஎக்ஸ் பிராண்டில் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

ப்ரேக்கிங் பணியை ப்ரெம்போ ஸ்டைலிமா நான்கு-பிஸ்டன், சக்கரத்துடன் சுழலும் காலிபர்கள் உடன் கூடிய 320 மிமீ ரோட்டார்கள் முன்புற சக்கரத்திலும், ப்ரெம்போ இரு-பிஸ்டன், நிலையாக பொருத்தப்பட்ட கால்லிப்பருடன் உள்ள 240மிமீ சிங்கிள் டிஸ்க் பின்புற சக்கரத்திலும் கவனிக்கின்றன.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

பாஷ் நிறுவனத்தின் 9.1 எம்பி 2.0 ஏபிஎஸ் (கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் சூப்பர்மோட்டோ ஏபிஎஸ்), வளைவுகளில் வண்டி கீழே விழாதவாறு அதிக தரைப்பிடிப்பை வழங்கும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், குயிக் ஷிஃப்டர்+ (மேல் மற்றும் கீழ் ஷிஃப்ட் செய்யும் வசதி), ஆண்டி-வீலிங் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவையும் இந்த 1290 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

ரெயின், ஸ்ட்ரீட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான ரைடிங் மோட்கள் நிலையாக இந்த பைக்கில் உள்ளது. ட்ராக் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என்ற மற்ற இரு ரைடிங் மோட்களும் தேர்வாக வழங்கப்படுகின்றன. இதில் ட்ராக் மோடின் மூலம் ஒன்பது நிலைகளுடன் தேவைப்படும்போது டார்க் திறனை அளித்து தரைப்பிடிப்பை அதிகரிக்கலாம். இதனால், பைக் கீழே விழும் நிலை உடனடியாக தவிர்க்கப்படும்.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

ஆண்டி-வீலிங் தொழில்நுட்பத்தை தேவைப்படாதபோது அணைத்து வைக்க முடியும். பெர்ஃபார்மன்ஸ் மோட், ஸ்டேரிங்கை மிக எளிதாக கட்டுப்படுத்தும் வகையில் இருக்கும். 1290 சூப்பர் பைக்கில் 5 இன்ச் டிஎஃப்டி ஸ்க்ரீன் அமைப்பு தேவைக்கு ஏற்ப கோணத்தை மாற்றும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது. கேடிஎம் நிறுவனம், வேகமாக செயல்படும் விதத்தில் 5 இன்ச் டிஎஃப்டி திரையின் தகவல்களை வழங்கும் மெனு அமைப்பையும் மாற்றியுள்ளது.

ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்

ஐக்மா கண்காட்சியில் 1290 சூப்பர் ட்யூக் ஆர் மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து புதிய 890 ட்யூக் ஆர், 390 அட்வென்ஜெர் உள்ளிட்ட சில பைக்குகளையும் கேடிஎம் நிறுவனம் பார்வைக்காக வைத்துள்ளது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2020 KTM 1290 Super Duke R
Story first published: Friday, November 8, 2019, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X