உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...

புதிய ட்ரையம்ப் ராக்கெட் 3 மோட்டார்சைக்கிள் ரூ.18 லட்சம் விலையுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் அறிமுகம் நடைபெற்றுவரும் இந்தியா பைக் வாரம் கண்காட்சியில் நடைபெற்றுள்ளது.

உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...

மிகவும் ஆற்றல் மிக்க 2500சிசி என்ஜினை இந்த பைக் கொண்டுள்ளதால் இதுதான் தற்போதைக்கு உலகத்திலேயே அதிக ஆற்றலை வெளியிடும் என்ஜினை கொண்ட பைக்காக உள்ளது. என்ஜின் மட்டுமின்றி பல புதிய காஸ்மெடிக் மாற்றங்களும் இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன.

உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...

இரு விதமான வேரியண்ட்களை இந்த பைக் கொண்டுள்ளது. இதில் ராக்கெட் 3 ஆர் வேரியண்ட் மிக பெரிய பரப்பில் ரைடிங் ஸ்டாண்ஸை கொண்டுள்ளது. 3 ஜிடி வேரியண்ட் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ற ரைடிங் ஸ்டைலில் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...

தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான இருக்கை அமைப்பு, அட்ஜெட்ஸ்ட் செய்யக்கூடிய பேக் ரெஸ்ட், பெரிய விண்ட்ஸ்க்ரீன், சிறந்த ரைடிங் ஸ்டான்ஸ் போன்றவற்றை ஜிடி பைக் கொண்டுள்ளது.

உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...

செயல்திறன் முறையில் ஜிடி வேரியண்ட்டுடன் ஒப்பிடும்போது ராக்கெட் 3 ஆர் மிக சுறுசுறுப்பானது. மற்றப்படி ராக்கெட் பைக்கின் இந்த இரு வேரியண்ட்களும் ஒரே என்ஜின் அமைப்பை தான் கொண்டுள்ளன. அதேபோல் மற்ற பாகங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக தான் உள்ளது.

உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...

இந்த பைக்கில் உள்ள இன்லைன் 3-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, டிஒஎச்சி 2,500சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 165 பிஎச்பி பவரையும் 4,000 ஆர்பிஎம்-ல் 221 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. முந்தைய மாடலை காட்டிலும் ராக்கெட் 3 பைக் 11 சதவீதம் அதிகமான ஆற்றலை வெளியிடும் திறன் பெற்றுள்ளது.

உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...

குறிப்பாக இந்த பைக்கின் டார்க் திறனை வேறெந்த தயாரிப்பு பைக்கும் பெற்றது கிடையாது. மிகவும் எடை குறைவான அலாய் சக்கரங்களை இந்த ராக்கெட் 3 பைக்கில் பொருத்தியுள்ள ட்ரையம்ப் நிறுவனம் என்ஜினை வெறும் 18 கிலோவில் பொருத்தியுள்ளது. பைக்கை சுற்றிலும் புதிய அலுமினியம் ஃப்ரேம் மற்றும் மற்ற பாகங்கள் அனைத்தும் நவீன தொழிற்நுட்பங்களால் அட்வான்ஸாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் மொத்த பைக்கின் எடை சுமார் 40 கிலோ அளவிற்கு குறைந்துள்ளது.

உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...

ஸ்போர்டி 20-ஸ்போக் வீல்ஸ், யூனிக் ஒரு பக்க ஸ்விங்கார்ம், இரட்டை ஹெட்லைட் அமைப்பு, வழவழப்பான டிஆர்எல், புதிய வடிவில் பெட்ரோல் டேங்க், ப்ரஷ்ட் அலுமினியம் ஏர்பாக்ஸ் கவர், ப்ரஷ்ட் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் எக்ஸாஸ்ட் ஹெட் ஷீல்ட்ஸ் மற்றும் எண்ட் கேப் போன்ற முந்தைய மாடலின் பாகங்களை சில அப்டேட்டுடன் கொண்டுள்ளது.

உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...

இவை மட்டுமில்லாமல் 2020 ராக்கெட் 3 பைக்கில் அகலமான ஹேண்டில்பார்ஸ், டார்க் அசிஸ்ட் ஹைட்ராலிக் க்ளட்ச், முழுவதும் அட்ஜெட்ஸ்ட் செய்யக்கூடிய ஷோவா மோனோஷாக் ஆர்எஸ்யூ, ஷோவா யூஎஸ்டி முன்புற ஃபோர்க்ஸ், ப்ரெம்போ ஸ்டைலிமா ப்ரேக்ஸ் மற்றும் ட்ரிபிள் எக்ஸாஸ்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட பைக்காக ட்ரையம்ப் ராக்கெட் 3 இந்தியாவில் அறிமுகம்...

கார்னரிங் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், சாவியை உபயோகிக்காமலேயே ஸ்டேரிங்கை லாக் செய்யக்கூடிய சிஸ்டம் போன்றவற்றையும் இந்த பைக் பெற்றுள்ளது. ரோடு, மழை, ஸ்போர்ட் மற்றும் ஓட்டுனரின் விருப்பத்திற்கேற்ப என நான்கு விதங்களிலும் இந்த பைக்கை ஓட்ட முடியும். இந்திய சந்தையில் 18 லட்ச ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் முன் சக்கரம் 17 x 3.5 இன்ச்சிலும் பின் சக்கரம் 16X 7.5 இன்ச்சிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Triumph Rocket 3 India Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X