நியூ(2020) டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ன் இந்திய அறிமுக தேதி வெளியானது!

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பு பைக்கான நியூ 2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ஐ உலக சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனால் இதன் இந்திய அறிமுகம் மிக விரைவில் நடக்கும் எனவும் தெரிகிறது.

கேடிஎம் ட்யூக் 790-ன் போட்டி மாடல் நியூ(2020) டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ன் அறிமுக தேதி வெளியானது...

இந்த நியூ 2020 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் புதிய பல அப்டேட்களையும் தொழிற்நுட்பங்களையும் மேம்படுத்தப்பட்ட என்ஜினையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 2020 ஜனவரியில் இந்திய மார்கெட்டில் அடியெடுத்து வைக்கவுள்ளதாக கூறப்படும் இந்த பைக்கின் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

கேடிஎம் ட்யூக் 790-ன் போட்டி மாடல் நியூ(2020) டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ன் அறிமுக தேதி வெளியானது...

இந்த மேம்படுத்தப்பட்ட லிக்யூட்-கூல்டு என்ஜின் மூன்று சிலிண்டர் அமைப்புகளுடன் 765சிசியில் 11,750 ஆர்பிஎம்-ல் 123 பிஎச்பி பவரையும் 9,350 ஆர்பிஎம்-ல் 79 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு தற்போதுள்ள மாடலை விட அப்டேட்டாக ஆறு வேக நிலைகளை வழங்கும் கியர்பாக்ஸை கொண்டிருக்கும்.

கேடிஎம் ட்யூக் 790-ன் போட்டி மாடல் நியூ(2020) டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ன் அறிமுக தேதி வெளியானது...

மேலும் இந்த 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் மாடல், விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மாற்றக்கூடிய ஏபிஎஸ், ஐந்து ரைடிங் மோட்ஸ் மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் தன்னுள் கொண்டிருக்கிறது.

கேடிஎம் ட்யூக் 790-ன் போட்டி மாடல் நியூ(2020) டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ன் அறிமுக தேதி வெளியானது...

மை டிரையம்ப் கனெக்ட்டிவ்விட்டி சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட டிஎஃப்டி திரை மற்றும் செயல்பாடுகளால் மெருகேற்றப்பட்ட ப்ளூடூத் தேர்வும் இந்த பைக்கில் உள்ளன. மை டிரையம்ப் கனெக்ட்டிவ்விட்டி மூலம் ஓட்டுனர் தனது ஸ்மார்ட் போனின் அழைப்புகளையும் அதிலுள்ள பாடல்களையும் கேட்க முடியும். வாகனத்திற்கு இடையில் எளிதாக நுழைந்து செல்வதற்கான வசதி மற்றும் கேமிரா தொடர்பும் இந்த பைக்கில் உள்ளது.

கேடிஎம் ட்யூக் 790-ன் போட்டி மாடல் நியூ(2020) டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ன் அறிமுக தேதி வெளியானது...

நியூ 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்ஸில், முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்ட முன்புற டூம், முந்தைய மாடலில் இருந்த ஹாலோஜென் லைட்டிற்கு பதிலாக பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி ஹெட்லைட்கள், அதிகமான காற்றை உள்வாங்கும் பகுதி என ஸ்டைலான டிசைன்களும் புகுத்தப்பட்டுள்ளன.

கேடிஎம் ட்யூக் 790-ன் போட்டி மாடல் நியூ(2020) டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ன் அறிமுக தேதி வெளியானது...

கூடுதல் ஸ்டைலான டிசைன்களாக, கார்பன்-பைபரால் வடிவமைக்கப்பட்ட சைலன்ஸர், கருப்பு நிறத்தில் கண்ட்ரோல் ப்ளேட்ஸ், வித்தியாசமான கண்ணாடி அமைப்பு, சாடின் உலோகத்தால் செய்யப்பட்ட கால் வைக்கும் பகுதி, புதிய ஹேண்டில்பார் போன்றவை பைக்கை ஸ்போர்ட்ஸ் பைக்காக காட்டுவதற்கு உருவாக்கப்பட்டுள்ளன.

கேடிஎம் ட்யூக் 790-ன் போட்டி மாடல் நியூ(2020) டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ன் அறிமுக தேதி வெளியானது...

அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ன் விலை தற்போதுள்ள மாடலை விட சற்று அதிகமாகலாம். இந்த பைக் அறிமுகமானல், இதற்கு போட்டியாக கேடிஎம் ட்யூக் 790, எம்வி அகுஸ்டா 800 ஆர்ஆர் ட்ரக்ஸ்டெர், டுகாட்டி மான்ஸ்டர் 821 போன்றவை சந்தையில் உள்ளன.

Most Read Articles
English summary
New (2020) Triumph Street Triple RS India Launch Confirmed: To Rival The KTM Duke 790
Story first published: Tuesday, October 15, 2019, 16:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X