ரூ.2.30 லட்சத்தில் 22 கிம்கோவின் மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ஸ்கூட்டர் மாடல்களை 22 கிம்கோ மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ரூ.2.30 லட்சத்தில் 22 கிம்கோவின் மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

தைவான் நாட்டை சேர்ந்த கிம்கோ நிறுவனம் இந்தியாவின் 22 மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து வர்த்தகத்தை துவங்கி இருக்கிறது. முதல்கட்டமாக ஒரு மின்சார ஸ்கூட்டர் மற்றும் இரண்டு பிரிமீயம் ரக பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் இந்தியாவில் களமிறக்கி உள்ளது. கிம்கோ எக்ஸ்-டவுன் 300ஐ, லைக் 200 ஆகியவை பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், ஐ-ஃப்ளோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரூ.2.30 லட்சத்தில் 22 கிம்கோவின் மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

கிம்கோ எக்ஸ் - டவுன் 300ஐ

இதில், கிம்கோ நிறுவனத்தின் எக்ஸ்-டவுன் 300ஐ ஸ்கூட்டர் மேக்ஸி ரக ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மிகவும் பிரம்மாண்டமான இந்த மாடல்தான் இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ஸ்கூட்டர் மாடல். இந்த ஸ்கூட்டருக்கு ரூ.2.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.2.30 லட்சத்தில் 22 கிம்கோவின் மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கிம்கோ எக்ஸ்- டவுன் 300ஐ ஸ்கூட்டரில் 276 சிசிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.5 பிஎச்பி பவரையும், 25 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதுதான் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 12.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

ரூ.2.30 லட்சத்தில் 22 கிம்கோவின் மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் மிகவும் திறன் வாய்ந்த இந்த மேக்ஸி ஸ்கூட்டர் 181 கிலோ எடை கொண்டது. அதிக எடையுடைய ஸ்கூட்டர் மாடலாகவும் வந்துள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ரூ.2.30 லட்சத்தில் 22 கிம்கோவின் மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

கிம்கோ லைக் 200

கிம்கோ லைக் 200 ஸ்கூட்டருக்கு ரூ.1.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பெட்ரோல் ஸ்கூட்டரில் 163 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த ஸ்கூட்டர் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த பிரிமீயம் ஸ்கூட்டர் மாடலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும்.

ரூ.2.30 லட்சத்தில் 22 கிம்கோவின் மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

கிம்கோ ஐ-ஃப்ளோ

2018 ஆட்டோ எக்ஸ்போவில் கிம்கோ ஐ- ஃப்ளோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 22 மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த ஸ்கூட்டர் பிரிமீயம் அம்சங்களுடன் கவர்கிறது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் மின்மோட்டார் 2,100 வாட் பவரை அளிக்கும் திறன் பெற்றது.

ரூ.2.30 லட்சத்தில் 22 கிம்கோவின் மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

மணிக்கு 60 கிமீ வேகம் வரை செல்லும். ஒரு பேட்டரியில் 60 கிமீ தூரம் வரை பயணிக்கும். இரண்டாவது பேட்டரியையும் பொருத்தினால், 120 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இந்த ஸ்கூட்டருக்கான பேட்டரியை லீசுக்கு பெறுவதற்கு மாதம் ரூ.500 வரை செலவிட வேண்டி இருக்கும்.

ரூ.2.30 லட்சத்தில் 22 கிம்கோவின் மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டருக்கு 5 வருட வாரண்டியும், ஸ்கூட்டருக்கான பராமரிப்பு செலவும் பேட்டரி குத்தகை தொகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளதாக 22 கிம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி விளக்குகள், காம்பி பிரேக்கிங் சிஸ்டம், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் நுட்பம், ரிவர்ஸ், க்ரூஸ் மற்றும் டிராக் என மூன்று விதமான டிரைவிங் மோடுகள் ஆகியவை உள்ளன.

Most Read Articles
மேலும்... #22 கிம்கோ
English summary
22 KYMCO has launched three scooters in the Indian market. By launching the three scooters, 22 KYMCO has officially debuted in India. 22 KYMCO has revealed the iFlow, the Like 200 and the X-Town 300i for the Indian market. While the iFow is an electric scooter, the Like 200 and the X-Town 300i are petrol-powered.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X