இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி... கெத்து காட்டிய ஒரே நிறுவனம் இது மட்டும்தான்...

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி... கெத்து காட்டிய ஒரே நிறுவனம் இது மட்டும்தான்...

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 இரு சக்கர வாகனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 2,46,656 ஹீரோ ஸ்பிளெண்டர் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி... கெத்து காட்டிய ஒரே நிறுவனம் இது மட்டும்தான்...

இது கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 6 சதவீதம் குறைவு. ஏனெனில் கடந்த 2018 மார்ச் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 2,62,232 ஸ்பிளெண்டர் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருந்தது. 6 சதவீதம் என்கிற அளவிற்கு விற்பனை சரிந்திருந்தாலும் கூட ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தை பிடித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி... கெத்து காட்டிய ஒரே நிறுவனம் இது மட்டும்தான்...

இந்த பட்டியலில், ஹோண்டா நிறுவனத்தின் முதன்மையான மாடல்களில் ஒன்றான ஆக்டிவா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம் 1,48,241 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இரண்டாவது இடம் பிடித்திருந்தாலும் கூட, ஹோண்டா ஆக்டிவா சுமார் 29 சதவீதம் என்கிற அளவிற்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி... கெத்து காட்டிய ஒரே நிறுவனம் இது மட்டும்தான்...

ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம் 2,07,536 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. என்றாலும் அதிகம் விற்பனையான டாப்-5 இரு சக்கர வாகனங்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஸ்கூட்டர் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி... கெத்து காட்டிய ஒரே நிறுவனம் இது மட்டும்தான்...

இதனிடையே 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டூவீலர்களின் பட்டியலில், ஹீரோ எச்எப் டீலக்ஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மொத்தம் 1,46,162 எச்எப் டீலக்ஸ் மோட்டார் சைக்கிள்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. என்றாலும் முந்தைய இரண்டு மாடல்களை போல் ஹீரோ எச்எப் டீலக்சும் சரிவைதான் சந்தித்துள்ளது.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி... கெத்து காட்டிய ஒரே நிறுவனம் இது மட்டும்தான்...

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் மொத்தம் 1,83,162 ஹீரோ எச்எப் டீலக்ஸ் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கையானது கடந்த மார்ச் மாதத்தில் வெறும் 1,46,162 ஆக சரிந்துள்ளது. இது சுமார் 20 சதவீத வீழ்ச்சியாகும். இந்த சூழலில் இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து பஜாஜ் பல்சர் ரேஞ்ச் மோட்டார் சைக்கிள்கள் அசத்தியுள்ளன.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி... கெத்து காட்டிய ஒரே நிறுவனம் இது மட்டும்தான்...

கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 83,228 பல்சர் மோட்டார் சைக்கிள்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 154 சதவீதம் அதிகம் ஆகும். ஏனெனில் 2018 மார்ச் மாதத்தில் பஜாஜ் நிறுவனம் வெறும் 32,709 பல்சர் மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. டாப்-5 இரு சக்கர வாகனங்களின் பட்டியலில் இவ்வாறான ஒரு பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்திருப்பது பல்சர் மட்டுமே.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி... கெத்து காட்டிய ஒரே நிறுவனம் இது மட்டும்தான்...

இதனிடையே இந்த பட்டியலில் 5வது மற்றும் கடைசி இடத்தை பஜாஜ் பிளாட்டினா பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் 62,519 பிளாட்டினா மோட்டார் சைக்கிள்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 80 சதவீதம் அதிகம். 2018 மார்ச் மாதம் வெறும் 34,758 பிளாட்டினா மோட்டார் சைக்கிள்களை மட்டுமே பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

Most Read Articles
English summary
5 Best Selling Two Wheelers Of March 2019. Read in Tamil
Story first published: Thursday, April 18, 2019, 21:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X