ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம்? அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பலமுறை காப்பாற்றும் வீடியோ தொகுப்பு!

விபத்தை நேருக்கு நேராக சந்திக்க விருந்த வாகனங்களை ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி எப்படி காப்பாற்றுகின்றது என்பதை விளக்குகின்ற வகையிலான வீடியோக்கள் தொகுப்பை இங்கு காணலாம்.

ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம்..? அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பல முறை காப்பாற்றும் வீடியோக்களின் தொகுப்பு!

இந்தியாவில் பல சாலைகள் ஆபத்து நிறைந்தவையானவை காட்சியளிக்கின்றன. இதுகுறித்த தகவலை இதற்கு முன்பாக வந்த பல செய்திகளில் நாம் கண்டுள்ளோம். இதுபோன்ற சாலைகள் கண்டறியப்பட்டு, அந்த பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அதனைப் பலர் மதிப்பதே இல்லை. இதன்காரணமாக பல்வேறு பின்விளைவுகளை அவர்கள் சந்திக்கின்றனர்.

ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம்..? அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பல முறை காப்பாற்றும் வீடியோக்களின் தொகுப்பு!

தொடர்ந்து, இதுபோன்ற அவலநிலைகளை தவிர்க்கும் விதமாக பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கும் வாகன ஓட்டிகள் மத்தியில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆகையால், முடிந்த அளவு வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்க வேண்டும் என்பதில் அரசும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் அதிக கவனத்தைச் செலுத்து வருகின்றன.

ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம்..? அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பல முறை காப்பாற்றும் வீடியோக்களின் தொகுப்பு!

இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து வாகனங்களிலும் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்கின்ற வகையிலான முயற்சிகள் எடுக்கப்பட்டது.

அதன்படி, சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வாகனங்களில் அறிமுகம் செய்ய வேண்டுண் என்பது கடந்த வருடம் கட்டாயமாக்கப்பட்டது.

ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம்..? அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பல முறை காப்பாற்றும் வீடியோக்களின் தொகுப்பு!

இதில், 125 சிசி-க்கும் குறைவான வாகனங்களில் சிபிஎஸ் பிரேக்கிங் வசதியும், அதற்கும் அதிகமான சிசி திறனைக் கொண்ட வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் நிறுவப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம்..? அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பல முறை காப்பாற்றும் வீடியோக்களின் தொகுப்பு!

ஆனால், பலர் இந்த பிரேக்கிங் வசதியின் பாதுகாப்பு அம்சம்குறித்த தகவலை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். இதனை வெளிப்படுத்துகின்ற வகையிலான பல வீடியோக் காட்சிகள் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. அதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம்..? அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பல முறை காப்பாற்றும் வீடியோக்களின் தொகுப்பு!

சரக்கு லாரியின் மோதலில் இருந்து பாதுகாப்பு:

இந்த வீடியோவில், கேடிஎம் ஆர்சி 390 பைக் நெடுஞ்சாலையில் பயணிப்பதைக் காட்டுகின்றது. இரவு நேரத்தில் இதுபோன்று நெடுஞ்சாலையில் சிறிய ரக வாகனத்தில் பயணிப்பது எப்போதுமே ஆபத்துதான். இதனை உறுதி செய்கின்ற வகையிலேயே இந்த வீடியோக் காட்சி அமைந்துள்ளது.

இந்த சம்பவம் அனைத்தையும், பைக்கர் ஒருவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது.

ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம்..? அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பல முறை காப்பாற்றும் வீடியோக்களின் தொகுப்பு!

அதில், இரண்டுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை ஒன்றில் அதிக வேகமாக செல்கின்றனர். அப்போது, தங்களுக்கு முன்னே சென்ற வாகனங்கள் அனைத்தும் அவர்கள் ஓவர் டேக் செய்தவாறு செல்கின்றனர்.

இதில், ஒருவர் தனக்கு முன்பாக லாரி ஒன்று செல்வதை உணராமல் அதிகவேகமாக வருகின்றார். பின்னர், லாரி செல்வதை உணர்ந்த அந்த நபர் உடனடியாக பிரேக்கைப் பிடித்து பைக்கை நிறுத்துகின்றார். இந்த வாகனத்தில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இருந்ததன் காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பக்கவாட்டு கண்ணாடி இல்லாமல் திரும்பிய கார்:

அடுத்ததாக நாம் பார்க்க உள்ள வீடியோவில், கார் ஓட்டுநர் ஒருவர் அஜாக்கிரதையைப் பற்ற காணவிருக்கின்றோம். பெரும்பாலான விபத்துகள், வாகன ஓட்டிகள் தங்களுக்கு பின்னால் வரும் வாகனங்களைப் பற்றி கவலைப் படாமல் செல்வதன் காரணத்தினாலயே நடைபெறுகின்றது.

ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம்..? அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பல முறை காப்பாற்றும் வீடியோக்களின் தொகுப்பு!

அந்தவகையில், பக்கவாட்டு கண்ணாடியைப் பார்க்காமல் வந்த மாருதி சுஸுகி ஈகோ காரால் ஓர் இருசக்கர வாகன பெரும் விபத்தைச் சந்திக்கவிருந்தார். ஆனால், அவருடை வாகனத்தில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இருந்ததன் காரணத்தால் அவர் அந்த விபத்தில் இருந்து தப்பினார். பைக் வருவதைப் பார்க்காமல் வந்த காரால், பைக் நேராக ரிக்சா ஒன்றின் மீது மோதவிருந்தது. ஆனால், சிறப்பான தொழில்நுட்பத்தின் வசதியால் அவருக்கும், ரிக்சா டிரைவருக்கும் நேரவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

திடீரென தடத்தை மாற்றிய இன்னோவா:

பெரும்பாலான வாகன ஓட்டிகள் செய்யக்கூடிய தவறுகளில் ஒன்றாக, திடீரென பாதையை மாற்றுவது இருக்கின்றது. இதனால், நாட்டில் பல்வேறு நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த சம்பவத்தில், பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியின் காரணமாக மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம்..? அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பல முறை காப்பாற்றும் வீடியோக்களின் தொகுப்பு!

சாலையின் வலது பக்கத்தில் சென்றுக் கொண்டிருந்த டொயோட்டா இன்னோவா, தனக்க முன்பக்கமாக சென்றுக் கொண்டிருந்த கன்டெயினர் லாரி நின்றதால், திடீரென இடது பக்கம் வலைத்து திரும்பியது. அப்போது, பஜாஜ் டோமினார் பைக் வந்ததை உணராத அந்த இன்னோவா கார், தான் மட்டும் செல்வதை குறிக்கோளாக வைத்து முன்னேறிச் செல்கின்றது. இதில், இருசக்கர வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் தப்பிக்கின்றார்.

பிரேக் மின் விளக்கு இல்லாத வாகனம்:

மழை மற்றும் அதிக பயன்பாட்டின் காரணமாக வாகனங்களில் பிரேக் பிடிக்கும் ஒளிரும் மின் விளக்குகள் சில நேரங்களில் செயலிழக்கின்றன. இதுபோன்ற சமயங்களில் பின்வரும் வாகனங்கள், முன்னாடிச் செல்லும் வாகனங்கள் பிரேக் பிடிப்பதை உணராமல் சென்று மோதிவிடுகின்றன. இதனால், இரு வாகனங்களும் பெருத்த சேதத்தை சந்திக்கும் சூழல் ஏற்படுகின்றது.

ஏபிஎஸ் வசதி ஏன் முக்கியம்..? அதிவேகத்தில் பைக்கர்களின் உயிரை பல முறை காப்பாற்றும் வீடியோக்களின் தொகுப்பு!

இத்தகையச் சூழலைதான் கேடிஎம் டியூக் பைக்கின் உரிமையாளர் சந்திக்கின்றனர். நல்ல வேலையாக அந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக் வசதி இருந்ததன் காரணத்தால், இதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலே நாம் பார்த்ததைப் போன்று பல சமயங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வாகன ஓட்டிகளை பாதுகாக்கின்ற வகையிலேயே அமைந்துள்ளது. இந்த வசதியை உள்ளடக்கிய வாகனங்கள் சற்று விலை அதிகமானதாக காணப்பட்டாலும், அவை விலையுயர்விற்கு தகுதியானவையாக இருக்கின்றன.

இதன் காரணமாகவே, இந்திய அரசு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
ABS Saves Bikers Lives Five Videos Prove ABS Safety. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X