நீங்களுடன் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் அறிமுக விபரம்!

அடுத்த மாதம் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நீங்களுடன் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் அறிமுக விபரம்!

இந்திய மார்க்கெட்டில் சுஸுகி ஜிக்ஸெர் 150 பைக்கிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மிரட்டலான ஸ்டைல், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதே முக்கிய காரணங்கள். இந்த நிலையில், ஜிக்ஸெர் பிராண்டிற்கு இருக்கும் பிரபலத்தை வைத்து, அதே பிராண்டில் கூடுதல் சக்திவாய்ந்த மாடலை அறிமுகம் செய்ய சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நீங்களுடன் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் அறிமுக விபரம்!

அதாவது, 250சிசி எஞ்சினுடன் புதிய ஜிக்ஸெர் பைக்கை சுஸுகி உருவாக்கி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த பைக் அறிமுகம் குறித்து பல்வேறு யூகத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

MOST READ:எக்ஸ்சி40 புண்ணியத்தில் வால்வோ நிறுவனத்தின் விற்பனையில் நல்ல முன்னேற்றம்!

நீங்களுடன் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் அறிமுக விபரம்!

இந்த நிலையில், அடுத்த மாதம் 20ந் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டீலர்கள் கூட்டத்தில் புதிய ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பைக்அட்வைஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

நீங்களுடன் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் அறிமுக விபரம்!

புதிய ஜிக்ஸெர் 250 பைக் மாடலானது சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சீன கூட்டாளியான ஹவோஜு நிறுவனம் தயாரித்த டிஆர்-300 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹவோஜு டிஆர்-300 பைக்கின் ஸ்டைல் அப்படியே இருக்கும் என்று தெரிகிறது.

நீங்களுடன் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் அறிமுக விபரம்!

அதேநேரத்தில், சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கில் இடம்பெற இருக்கும் ஏர் மற்றும் லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட எஞ்சின் புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 22 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

நீங்களுடன் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் அறிமுக விபரம்!

புதிய ஜிக்ஸெர் 250 பைக்கானது நேக்கட் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட மாடலாக இருக்கும். யமஹா எஃப்இசட்-25 உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். ஜிக்ஸெர் 150 பைக்கில் பயன்படுத்ததப்படும் அதே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான் இதிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ:ஜூனில் அறிமுகமாகிறது புதிய மாருதி ஆல்ட்டோ கார்?

நீங்களுடன் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் அறிமுக விபரம்!

முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இந்த புதிய ஜிக்ஸெர் 250 பைக்கின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

நீங்களுடன் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் அறிமுக விபரம்!

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக் ரூ.1.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மிக சவாலான விலையில் வரும் 250சிசி பைக் மாடலாக இருக்கும் என்பதால், கேடிஎம் 200 ட்யூக் பைக்கிற்கும் போட்டியாக இருக்கலாம்.

Source: Bikeadvice

Most Read Articles

English summary
According to reports, Suzuki is planning to unveil Gixxer 250 bike in India on 20th May, 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X