Just In
- 1 hr ago ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
- 3 hrs ago உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
- 3 hrs ago கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
- 5 hrs ago தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
Don't Miss!
- News வெங்கையா நாயுடுவுக்கு பத்மவிபூஷன்! 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்கிய ஜனாதிபதி திரௌபதி முர்மு
- Movies Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
- Finance செல்லகுட்டி ஈஷா அம்பானி புது சாதனை.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..!!
- Lifestyle உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- Sports MI vs RR - 20 ரன்களில் 3 விக்கெட்டுகள் இழந்த மும்பை.. ரோகித், சூர்யகுமார் அவுட்.. ராஜஸ்தான் அபாரம்
- Technology மலிவு விலை.. மல்டிஃபங்க்ஷன் Smartwatch.. இன்பில்ட் நேவிகேஷன், ப்ளூடூத் கால்லிங்.. இன்னும் ஏராளம்.. எந்த மாடல்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழகத்தின் இந்த நகரங்களை சேர்ந்தவர்கள் இனி ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எளிதாக வாங்கலாம்!
தமிழகத்தின் குறிப்பிட்ட நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இனி ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எளிதாக வாங்கலாம். ஏன்? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளார். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வரிசையாக அறிவித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு இதற்கு ஓர் உதாரணம்.
மத்திய அரசு அளித்து வரும் ஆதரவு காரணமாக, பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்தியாவில் போட்டி போட்டு கொண்டு மின்சார வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதில், ஆம்பியர் நிறுவனமும் ஒன்று. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஆம்பியர் இயங்கி கொண்டுள்ளது.
இந்த சூழலில், ஆம்பியர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இனி அமேசான் தளத்தின் வாயிலாகவும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை ஆம்பியர் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்காக ஆம்பியர் மற்றும் அமேசான் நிறுவனங்கள் புது கூட்டணியை அமைத்துள்ளன.
இதன்மூலம் குறிப்பிட்ட நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இனி அமேசான் தளம் மூலமாக ஆம்பியர் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி கொள்ள கூடிய வாய்ப்பை பெறுவார்கள். அமேசான் தளத்தில் ஆம்பியர் எலெக்ட்ரிக் டூவீலர்களை வாடிக்கையாளர்கள் வாங்கிய பிறகு, கட்டணம் செலுத்தியதை உறுதிபடுத்தும் ரசீது அவர்களுக்கு வழங்கப்படும்.
இதன்பின் சம்பந்தப்பட்ட டீலர் பாயிண்ட்டில் வாடிக்கையாளர்கள் வாகனத்தை டெலிவரி பெற்று கொள்ள முடியும். இதன் மூலமாக ஆன்லைன் ஷாப்பிங்கின் அனைத்து சௌகரியங்களையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட் தற்போது 200 சதவீதத்திற்கும் மேலான வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது.
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SMEV - Society of Manufacturers of Electric Vehicles) இதனை மதிப்பிட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ஆம்பியர் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அமேசான் ஷாப்பிங் தளத்தில் கிடைக்கவிருப்பது அந்நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்பியர் நிறுவனத்தின் ஸீல், வி-48 எல்ஏ, மேக்னஸ் 60, ரியோ எல்ஏ மற்றும் ரியோ எல்ஐ உள்ளிட்ட மாடல்கள் அமேசானில் கிடைக்கும். தேனி, தூத்துக்குடி, உடுமலைப்பேட்டை, கோபிச்செட்டிபாளையம், கோவை, கரூர், ஆம்பூர், திருச்சி, பெங்களூர், மங்களூர் மற்றும் மூடாபித்ரி ஆகிய நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும்.
நீங்கள் மேற்கண்ட நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் என்றால், ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அமேசான் தளத்திலே வாங்கி கொள்ளலாம். இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. நாட்டின் மற்ற நகரங்களில் இந்த வசதியை வெகு விரைவில் எதிர்பார்க்கலாம்.
-
இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
-
ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
-
ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!