புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?

அப்ரிலியா நிறுவனத்தின் புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அருகியுள்ளன.

புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் அப்ரிலியா நிறுவனத்தின் இரண்டு புதிய 150சிசி பைக் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. ஒன்று ஃபேரிங் பேனல்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும், மற்றொன்று நேக்கட் ரக மாடலாகவும் இருந்தன.

புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?

எனினும், அந்த இரண்டு பைக் மாடல்களும் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக தெரிவிக்கப்பட்டது. அப்படியே வந்தாலும், அதற்கு நீண்ட வருட காத்திருப்பு தேவை என்று தெரிவிக்கப்பட்டது.

புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?

இந்த நிலையில், கோவாவில் அப்ரிலியா நிறுவனத்தின் இந்திய டீலர்களுக்கான ஆண்டு கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அப்ரிலியா நிறுவனத்தின் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் டீலர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?

அதில், புதிய 150சிசி ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த ஆர்எஸ்150 என்ற ஸ்போர்ட்ஸ் பைக் மாடலுக்கும் இந்த 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடலுக்கும் வேறுபாடுகள் இருந்தன.

புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?

டீலர்களுக்கான கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடலானது சீனாவில் விற்பனை செய்யப்ப்டும் ஸோங்சென் ஜிபிஆர் 150 பைக்கின் டிசைனை ஒத்திருக்கிறது. எனினும், முழுமையான விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?

ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் 150சிசி ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடலிலில் இருந்து இந்தியாவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் பல விதங்களில் வேற்றுமைகளை கொண்டுள்ளது.

புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?

பெட்ரோல் டேங்க், இருக்கை அமைப்பு மற்றும் வால் பகுதி வடிவமைப்புகளில் மாற்றங்களை பெற்றிருக்கிறது. அதாவது, பழைய டிசைன் தாத்பரியங்களை பெற்றிருப்பது சிறிய ஏமாற்றம் என்றாலும், அப்ரிலியா பிராண்டில் வரும் 150சிசி மாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மாடலில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 150சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 17 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?

முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், குயிக் ஷிஃப்டர் வசதிகளும் ஆப்ஷனலாக வழங்கப்படலாம். 17 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா?

அப்ரிலியா ஆர்எஸ்150 பைக் மாடல் இந்தியாவில் யமஹா ஆர்15 வி3.0 பைக் மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். எனினும் விலை போட்டியாளர்களைவிட அதிகம் நிர்ணயிக்கப்படலாம். ரூ.1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் வாய்ப்புள்ளது. இதனுடன் 150சிசி ரகத்தில் நேக்கட் ரக பைக் மாடலையும் அப்ரிலியா அறிமுகம் செய்யும் வாய்ப்புள்ளது.

Source: ZigWheels

Most Read Articles
மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
The Aprilia RS 150's spy pic has emerged for the first time in India, from a dealer meet held in Goa. However, it is not actually the RS 150 which was unveiled at Auto Expo 2018, but similar to the Zongshen GPR 150 sold in the Chinese market. Still, as the Aprilia RS 150's launch date and price for the Indian market still remain unclear, this spy pic hint to its possible introduction.
Story first published: Thursday, January 17, 2019, 14:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X