பஜாஜ், யமஹா, கேடிஎம் பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கும் அப்ரிலியா 150சிசி பைக்!

அப்ரிலியா நிறுவனம் தனது புதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை பஜாஜ், யமஹா, கேடிஎம் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அப்ரிலியா 150சிசி பைக்

பியாஜியோ நிறுவனம் தனது முதல் 150சிசி இருசக்கர வாகனத்தை அப்ரிலியா பிராண்டில் வருகின்ற 2020ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, மூன்று மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

அப்ரிலியா நிறுவனம் பஜாஜ், கேடிஎம், டிவிஎஸ் மற்றும் யமஹா ஆகிய நிறுவனங்களின் பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் 125சிசி முதல் 150சிசி திறனுடைய பைக்குகளை தயாரித்து வருகிறது.

அப்ரிலியா 150சிசி பைக்

அந்த வகையில் தான் தற்போது இந்த புத்தம் புதிய 150சிசி திறன்கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை பியாஜியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இன்னும் 12 முதல் 15 மாதங்களுக்குள் இதனை விற்பனைக்கு அறிமுகமும் செய்ய உள்ளது.

அதன்படி, அப்ரிலியா ஆர்எஸ் 150 ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் டுவோனோ 150 ஸ்டிரீட் என்ற இரு மாடல்களை முன்னதாக அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இரண்டு மாடல் பைக்குகளும் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.

அப்ரிலியா 150சிசி பைக்

எனினும், இந்த இரண்டு பைக்குகளும் இந்தியாவில் அறிமுகமாக நீண்ட காலமாகும் என எண்ணப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் அறிமுகம் குறித்து அப்ரிலியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த இரு மாடல்களும் வருகின்ற 2020ம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் இருக்கும் 150சிசி ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடலில் இருந்து இந்தியாவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் சில வித்தியாசங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அப்ரிலியா பிராண்டில் வரும் 150சிசி மாடல் முதல் பைக் என்பதால் இந்த பைக்கின் மீது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்ரிலியா 150சிசி பைக்

மேலும், இந்த மாடலில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 150சிசி லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 17Bhp பவரையும், 14Nm டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் எக்ஸ்-ஷோரூம் விலையில் 80 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அப்ரிலியா 150சிசி பைக்

அப்ரிலியா ஆர்எஸ்150 மாடல் பைக் இந்தியாவில் ஏற்கனவே கொடிக்கட்டிப் பறந்துக்கொண்டிருக்கும் பஜாஜ், யமஹா, கேடிஎம் ஆகிய நிறுவனங்களின் பைக்குகளுடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprirlia 15CC Bike Will Launch In India May 2020. Read In Tamil.
Story first published: Tuesday, February 19, 2019, 18:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X