உலகின் அதிக விலை கொண்ட எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலைய தெரிஞ்சிக்காதீங்க!

மின்சார பைக்குகளின் பிக் பாஸைப் போன்று ஆர்க் வெக்டார், எலக்ட்ரிக் பைக் தயாராக இருக்கின்றது. இவ்வாறு, இதனை நாம் கூறுவதற்கு இந்த பைக்கின் மலைக்க வைக்கும் விலையே காரணமாக இருக்கின்றது. இதுகுறித்த முழு தகவலையும் இந்த பதிவில் காணலாம்.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களால் சுற்றுப்புறச் சூழல் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. ஆகையால், இதனைத் தவிர்க்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில், எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகன பயன்பாட்டிற்கு மக்களை மாற்றும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

பொதுவாக மின் வாகனங்கள் அதிக விலையைக் கொண்டதாக இருக்கின்றன. இதற்கு, அதன் உற்பத்தி மற்றும் இதர செலவே முக்கிய காரணமாக இருக்கின்றன. ஆகையால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைக் காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று கூடுதலாக இருக்கின்றன. இதுவே, மக்களிடம் எலக்ட்ரிக் வாகனங்கள் புழக்கத்தில் வராமல் இருக்க முக்கிய காரமணாக இருக்கின்றன.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

இதையறிந்த அரசு, மக்களின் இந்த சிக்கலை கணிசமாக தீர்க்கும் வகையில், மின் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருகின்றது. இதற்காக ஃபேம் என்ற திட்டத்தினையும் அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன்மூலம், பன் மடங்கு அதிகமாக இருக்கும் எலக்ட்ரிக் வாகனத்தின் விலை கணிசமாக குறைவதுடன், மக்கள் மின் வாகங்களை வாங்கி பயன்படுத்த வழி வகை செய்யும் வகையில் இது அமைந்துள்ளது.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

இந்நிலையில், அரசு மானியம் வழங்கினாலும், வாங்க முடியாத விலையைக் கொண்டதாக, ஓர் எலக்ட்ரிக் பைக் உள்ளது. இதனைத்தான் கூடிய விரைவில் அதன் உரிமை நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த தகவலைதான் நாம் இந்த பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் அனைவரின் பார்வையையும் தன் வசம் திருப்பும் வகையில், மிகவும் கவர்ச்சி மற்றும் அழகான தோற்றத்தில் ஓர் எலக்ட்ரிக் பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பல முன்னணி நிறுவனங்களின் பெட்ரோல் பைக்குகள் அந்த அரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூழ்நிலையிலும், தன்பக்கம் அனைவரையும் ஈர்க்கும் அதன் டிசைன் உள்ளிட்டவை இருந்தன.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

அந்தவகையில், போங்கர்ஸ் எலக்ட்ரிக் சூப்பர் பைக் இருந்தது. வெக்டார் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பைக்கை ஆர்க் நிறுவனம்தான் வாகன கண்காட்சியில் முதல் முறையாக அறிமுகம் செய்திருந்தது.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

தற்போது ஆர்க் வெக்டார் எலக்ட்ரிக் பைக்கின் உற்பத்தியை அந்த நிறுவனம் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதேசமயம் இந்த பைக்கை லிமிடெட் வெர்ஷனாக, வெறும் 355 யூனிட்களை மட்டுமே தயாரிக்க இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

அவ்வாறு, தயாரிக்கப்படும் ஒவ்வொரு யூனிட்டும் அமெரிக்க டாலர் மதிப்பில் 118,000 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட உள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 82 லட்சமாகும். வாயை பிளக்க வைக்கும் இந்த விலைக்கேற்ப, பைக்கில் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதெல்லாம் கொஞ்சம் ரொம்ப ஓவர் தாங்க-னு நம்ம மனசுல தோனும்.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

ஆர்க் வெக்டார் எலக்ட்ரிக் பைக்கில் 399V திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட உள்ளது. இது, 140PS பவரையும், 85 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. அதேசமயம், இந்த பைக் வெறும் 2.7 விநாடிகளில் 0-த்தில் இருந்து 100 கிமீ வேகத்தைத் தொடும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இதன் அதிகபட்ச வேகமாக மணிக்கு 200 கிமீ உள்ளது.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

இந்த எலக்ட்ரிக் பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 193 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது. இது நகர பகுதியில் வைத்து பயன்படுத்தும்போது வெளிப்படும் அளவாகும். அதுவே, ஹை வே உள்ளிட்ட நெடுந்தூர பயணங்களில் ஆர்க் வெக்டார் எலக்ட்ரிக் பைக்கில் 274 கிமீ தூரம் வரை செல்ல முடியுமாம்.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

இத்துடன் சிறப்பு வசதிகளாக கார்பன் ஃபைபர் ஸ்விங்கரம், ஓஹ்லின்ஸ் டிடிஎக்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பு இரு பக்கங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு வசதிகளாக ப்ரெம்போ பிரேக்குகள் இரு முனையிலும் இணைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, இந்த நிறுவனம், ஆர்க் வெக்டார் எலக்ட்ரிக் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் வழங்க இருக்கின்றது.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

இந்த ஹெல்மெட் சாதாரண ஹெல்மெட்டுகளைப் போன்று அல்லாமல், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதாக இருக்கின்றது. அந்தவகையில், ஹெல்மெட்டின் உள் பகுதியில் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே வசதி வழங்கப்பட்டுள்ளது. இது எலக்ட்ரிக் பைக்கின் வேகம், நேவிகேஷன் மற்றும் செல்லகூடிய இடத்தின் தொலைவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நமக்கு வழங்கும்.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

இத்துடன், இந்த ஹெல்மெட்டில் கேமிராவும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன வசதியைக் கொண்ட ரைடிங் ஜாக்கெட்டும் இந்த எலக்ட்ரிக் பைக்குடன் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த ஜாக்கெட்டின் உள்பகுதியில் சென்சார் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது ரைடரின் தோள்பட்டை உணர்வு குறித்தும், இருட்டான சாலையில் எதிர்புறம் வரும் வாகனங்கள் குறித்த தகவலையும், சிறிய ஒலி மூலம் எச்சரிக்கையாக வழங்கும்.

உலகின் அதிக விலை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான்... இதயம் பலவீனமானவங்க இதோட விலையை தெரிஞ்சிக்காதீங்க...!

இதுபோன்ற, பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக ஆர்க் வெக்டார் எலக்ட்ரிக் பைக் கூடிய விரைவில் உற்பத்தியாக இருக்கின்றன. மேற்கூறியவை மட்டுமின்றி, கூடுதலாக இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் வெக்டார் எலக்ட்ரிக் பைக்கில் இணைக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றன.

இதனை, ஆர்க் நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால், இது குறிப்பிட்ட அளவில் மட்டுமே தயாராக இருப்பது குறிப்பிடத்தகுந்து.

Source: zigwheels

Most Read Articles
English summary
Arc Vector Electric Bike Heads For Production. Read In Tamil.
Story first published: Saturday, June 8, 2019, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X