அஸ்டன் மார்ட்டின் - பிராக் கூட்டணியில் அறிமுகமாகும் உயர்வகை மோட்டார்சைக்கிள்!

அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் லிமிடேட் எடிசன் பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அஸ்டன் மார்ட்டின் - பிராக் கூட்டணியில் அறிமுகமாகும் உயர்வகை மோட்டார்சைக்கிள்!

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் பிரிமீயம் கார் தயாரிப்பில் பிரபலமாக விளங்குகிறது. இந்த நிலையில், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் வகையில், விசேஷ மோட்டார்சைக்கிள்களை அஸ்டன் மார்ட்டின் வெளியிட இருக்கிறது.

அஸ்டன் மார்ட்டின் - பிராக் கூட்டணியில் அறிமுகமாகும் உயர்வகை மோட்டார்சைக்கிள்!

இதற்காக, இங்கிலாந்தை சேர்ந்த பிராக் சுப்பீரியர் என்ற மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த கூட்டணியின் புதிய மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் இத்தாலியில் நடக்க இருக்கும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அஸ்டன் மார்ட்டின் - பிராக் கூட்டணியில் அறிமுகமாகும் உயர்வகை மோட்டார்சைக்கிள்!

அஸ்டன் மார்ட்டின் பிராண்டில் வர இருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் லிமிடேட் எடிசன் எனப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும். இந்த கூட்டணியில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் மிக தனித்துவமான டிசைன் மற்றும் உயரிய தொழில்நுட்ப அம்சங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்டன் மார்ட்டின் - பிராக் கூட்டணியில் அறிமுகமாகும் உயர்வகை மோட்டார்சைக்கிள்!

இத்தாலியில் ஆண்டுதோறும் நடந்து வரும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் முதல்முறையாக அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் முத்திரையுடன் புதிய மோட்டார்சைக்கிள் வர இருப்பது ரசிகர்களையும், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பையும், ஆவலையும் தூண்டியுள்ளது.

அஸ்டன் மார்ட்டின் - பிராக் கூட்டணியில் அறிமுகமாகும் உயர்வகை மோட்டார்சைக்கிள்!

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் படைப்புப் பிரிவின் தலைமை அதிகாரி மரேக் ரிச்மேன் மற்றும் பிராக் சுப்பிரீயர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தியரி ஹென்ரிட் ஆகியோரின் எண்ண ஓட்டத்தின் அடிப்படையில் இந்த புதிய மோட்டார்சைக்கிளை இரு நிறுவனங்களின் பொறியாளர் குழு இணைந்து உருவாக்கி இருக்கின்றனர். ரிச்மேன் மற்றும் ஹென்ரிட் ஆகிய இருவருமே மோட்டார்சைக்கிள் பிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: முகேஷ் அம்பானி வைத்திருக்கும் மாளிகை போன்ற பிரைவேட் ஜெட்டின் விலை இதுதான்... மயக்கம் போட்றாதீங்க...

அஸ்டன் மார்ட்டின் - பிராக் கூட்டணியில் அறிமுகமாகும் உயர்வகை மோட்டார்சைக்கிள்!

இதுகுறித்து ரிச்மேன் கூறுகையில்," எனக்கும், எனது குழுவினருக்கும் இது சுவாரஸ்யமான அதே நேரத்தில் சிறந்த திட்டமாக கருதுகிறோம். பிராக் நிறுவனத்துடன் இணைந்து மிகவும் தனித்துவமான, அழகான மோட்டார்சைக்கிளை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இதனை கூறலாம்," என்று தெரிவித்துள்ளார்.

MOST READ: 83 ஆயிரம் ரூபாயை எண்ணி முடிக்க 3 மணி நேரம்... டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்த ஆக்டிவா வாடிக்கையாளர்

அஸ்டன் மார்ட்டின் - பிராக் கூட்டணியில் அறிமுகமாகும் உயர்வகை மோட்டார்சைக்கிள்!

இங்கிலாந்தை சேர்ந்த பிராக் சுப்பிரீயர் நிறுவனம் 1919 முதல் 1940 வரையிலான காலக்கட்டத்தில் மோட்டார்சைக்கிள்களுக்கான சைடு கார்களையும், கார்களையும் தயாரித்தது. மேலும், இந்நிறுவனம் தயாரித்த மோட்டார்சைக்கிள்கள் ரோல்ய்ராய்ஸ் கார்களுக்கு இணையான அந்தஸ்துடன் குறிப்பிடப்படுகின்றன.

MOST READ: பெட்ரோல், டீசலுக்கு குட்பை... தண்ணீரில் இயங்கும் கார் எஞ்சின்... எஞ்சினியர்கள் அசத்தல்

அஸ்டன் மார்ட்டின் - பிராக் கூட்டணியில் அறிமுகமாகும் உயர்வகை மோட்டார்சைக்கிள்!

எனவே, அஸ்டன் மார்ட்டின் மற்றும் பிராக் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

Most Read Articles

English summary
British car maker Aston Martin has partnered with United Kingdom based Brough Superior to manufacture a limited edition motorcycle. The first motorcycle built by this partnership is expected to be unveiled at the EICMA 2019 this November.
Story first published: Monday, October 28, 2019, 14:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X