நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

ஏத்தர் நிறுவனம் அதன் 450 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாரண்டி காலத்தை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில்தான், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஃபேம்-2 மானியத்திற்கான ஒப்புதல் பெறப்பட்டது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த வருடம் இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகம் செய்தது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

இதில், ஏத்தர் 340 மாடல் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும், ஏத்தர் 450 மாடல் 1 லட்சத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில்தான், இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விலையும் உயர்வு செய்யப்பட்டது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

இந்நிலையில், ஏத்தர் நிறுவனம், மத்திய அரசின் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் ஏத்தர் 450 மாடலுக்கு மானியம் பெறுவதற்கு விண்ணபத்திருந்தது. இதற்கான விண்ணப்பம் அண்மையில் ஒப்புதல் பெறப்பட்டநிலையில், அந்த ஸ்கூட்டரின் விலை கணிசமாக குறைந்தது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

அதேசமயம், ஏத்தர் நிறுவனம் அதன் 340 மாடலை, மானியத்திற்காக விண்ணப்பிக்கவில்லை. இதற்கு, 340 மாடலுக்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்காததே காரணமாக கூறப்படுகிறது. மேலும், பேம்-2 திட்டத்தினால், 450 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 5000 வரை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

இதனால், ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது, ரூ. 1.23 லட்சம் என்ற ஆன்ரோடு விலையில் கிடைக்கும். எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வரும் வேலையில் இந்த சலுகை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

இந்நிலையில், இந்த ஸ்கூட்டரின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம், 450 மாடலுக்கான வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது. இதனால், பழைய வாரண்டி காலமான இரண்டு ஆண்டுகள் மாற்றப்பட்டு, தற்போது 3 ஆண்டு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏத்தர் 450 மாடலுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த சலுகை ஏற்கனவே சாலையில் இருக்கும் 450 மாடலுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

ஏத்தர் நிறுவனம், ஃபேம்-2 திட்டத்தின் முடிவிற்காக, ஏத்தர் 450 மாடலின் டெலிவரியை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது, மானியத்திற்கான சான்றிதழைப் பெற்றுவிட்டதால், இன்னும் ஓரிரு வாரங்களில் டெலிவரி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

ஏத்தர் நிறுவனத்தின் இந்த இரு ஸ்கூட்டர்களும், வடிவமைப்பு மற்றும் ஃப்ரேம் ஆகியவற்றில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆனால், இவை சிறப்பம்சங்களிலும், செயல்திறனிலும் வேறுபட்டு காணப்படுகின்றன. இதன்காரணமாகவே, ஏத்தர் 340 மாடலைக் காட்டிலும் 450 மாடலுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இத்துடன், ஸ்மார்ட்போன் இணைப்பு, நேவிகேஷன் வசதி, பார்க்கிங் அசிஸ்ட், சார்ஜ் நிலையங்கள் இருக்கும் இடத்தை காண்பிக்கும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

ஏத்தரின் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் பிரஷ்லெஸ் டிசி மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஏத்தர் 340 ஸ்கூட்டரில் 1.92 KWh பேட்டரியும், ஏத்தர் 450 மாடலில் 2.4KWh பேட்டரியும் பொருத்தப்பட்டு உள்ளது. அதிக திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ள 450 மாடலின் ரேஞ்ச் எனப்படும் பயணிக்கும் தூரம் அதிகம் என்பதுடன், அதிகபட்ச வேகமும் கூடுதலாக இருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து, ஈக்கோ மோடில் வைத்து ஓட்டினால் 75 கிமீ தூரமும், சாதாரண மோடில் வைத்து ஓட்டும்போது 60 கிமீ தூரமும் பயணிக்க முடியும். ஏத்தர் 340 மாடல் ஈக்கோ மோடில் 60 கிமீ தூரமும், சாதாரண நிலையில் 50 கிமீ தூரமும் பயணிக்கும்.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

ஏத்தர் நிறுவனத்தின் இந்த இரண்டு மின் ஸ்கூட்டர்களும் பெங்களூருவில் மட்டும் விற்பனையாகி வரும்நிலையில், அவற்றை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் விதமான முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

அந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் துணையுடன் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக 130 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

அவ்வாறு வருகின்ற 2022ம் ஆண்டிற்குள், நாடு முழுவதும் உள்ள 30 நகரங்களில், 6,500க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக சென்னை மற்றும் புனேவிலும், இரண்டாம் கட்டமாக ஹைதராபாத் மற்றும் டெல்லியிலும் இந்த சேவைத் தொடங்க இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நற்செய்திக்கு மேல் நற்செய்தி: தொடர் இன்ப அதிர்ச்சியால் திகைத்து நிற்கும் ஏத்தர் ரசிகர்கள்!

இந்நிலையில், ஏத்தர் நிறுவனத்தின் இந்த இரு மின் ஸ்கூட்டர்களையும் சென்னைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து சோதனைச் செய்யும் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. எனவே இந்த ஸ்கூட்டர்கள் கூடிய விரைவில் சென்னையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather 450 Electric Scooter’s Warranty Increases To 3 Years. Read In Tamil.
Story first published: Saturday, May 11, 2019, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X