புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை மின் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

ஏத்தர் நிறுவனம் விரைவில் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்கமிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்குறித்த சுவாராஷ்யமான தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

கஜா புயலை போல சென்னை வாசிகள் மத்தியில் தீவிர புயலை, ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏற்படுத்தியுள்ளன.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகையை பல மாநிலங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தநிலையில், தலைநகர் சென்னையில் ஏத்தர் நிறுவனம் அண்மையில் களமிறக்கியது.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

இந்த நிறுவனம், ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய இரு மாடல்களைதான் சென்னை வாசிகளுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, நாட்டின் மேலும் சில முக்கிய நகரங்கள் மற்றும் உலக நாடுகளிலும் களமிறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

இந்நிலையில், தற்போது விற்பனைச் செய்து வரும் இரண்டு மாடல்களைக்காட்டிலும், மிக மலிவான மாடலை தயாரிக்கும் பணியில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் களமிறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை பைக்வேல் ஆங்கில தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

இந்த அப்கமிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிமியம் தரத்தில் தயாரிக்கப்பட உள்ளது. ஆனால், அது என்ட்ரீ லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் போட்டியிடாது என கூறப்படுகின்றது. ஆகையால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சம் என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது, தற்போது விற்பனையில் இருக்கும் ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்களின் விலையைக்காட்டிலும் ரூ. 10 - ரூ. 22 ஆயிரம் வரை குறைந்த விலையாகும்.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

அதேசமயம், ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஸ்கூட்டரைப் போன்றே புதிய மலிவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கலாம் என கூறப்படுன்றது. ஆனால், இந்த இரு மாடல்களைக் காட்டிலும் குறைந்த தொழில்நுட்ப அம்சங்களையே அது பெற இருக்கின்றது. ஆகையால், உற்பத்தி செலவு கணிசமாக குறைக்கப்பட்டு, அதன் விலையும் மலிவாக நிர்ணயிக்கப்படும்.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

இதில், நீக்கப்படும் அம்சங்களாக டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் ட்யூவல் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், இந்நிறுவனம் மிக உறுதியாக கன்னெக்டட் ஈகோ சிஸ்டத்தை நம்புவதால், மலிவான விலைகொண்ட டச் ஸ்கிரீன் க்ளஸ்டர் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

இத்துடன், ஸ்கூட்டரின் வடிவமைப்பு மொழியையும் ஏத்தர் குறைக்கலாம், இது தற்போதைய வரம்பை விட சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும். செயல்திறனைப் பொறுத்தவரை, நிறுவனம் சமரசம் செய்யும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆகையால், வரவிருக்கும் இ-ஸ்கூட்டரிலும் தற்போதைய மாடல்களில் இடம்பெற்றிருக்கும் அதே பவர்டிரெய்ன் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்டவை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

இந்த மலிவு விலை ஸ்கூட்டரை ஏத்தர் நிறுவனம், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனென்றால், தற்போது இந்நிறுவனம் பெங்களூரு மற்றும் சென்னையில் மட்டுமே விற்பனைச் செய்து வருவதால், அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

முன்னதாக, சென்னையைத் தொடர்ந்து, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

இதைத்தொடர்ந்து, உள்நாட்டின் முக்கிய நகரங்களான புனே, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணியில்தான் ஏத்தர் நிறுவனம் மும்பரமாக செயல்பட்டு வருகின்றது.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி சமீபத்தில் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன்காரணமாக, நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மின் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

அதனடிப்படையில், ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை கணிசமாக குறைந்தது. ஆகையால், தற்போது சென்னையில் ஏத்தர் 340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.10 லட்சம் என்ற விலையிலும், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.22 லட்ச விலையிலும் கிடைக்க உள்ளது. இவை, சென்னை ஆன் ரோடு விலையாகும்.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

அதேசமயம், பெங்களூரு ஆன்ரோடு விலையில் ஏத்தர் 340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.02 லட்ச ரூபாய்க்கும், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.12 லட்ச ரூபாய்க்கும் விற்பனைக்கு கிடைக்கின்றது. சென்னையைக் காட்டிலும் பெங்களூருவில் விலைக் குறைவாக ஏத்தர் ஸ்கூட்டர்கள் கிடைக்க, இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள வரி விதிப்பு முறையே வித்தியாசமாக இருக்கின்றது.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

ஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஒரே மாதிரியான பிஎல்டிசி மின் மோட்டார்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், பேட்டரி பேக்கேஜ் மட்டும் மாடலுக்கு ஏற்ப மாறுபடுகின்றது.

புதிய புயலை உருவாக்கிய ஏத்தர்... மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

அந்தவகையில், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 2.45 kWh லித்தியம் அயன் பேட்டரியும், ஏத்தர் 340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.92 kWh லித்தியம் அயன் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

இதில், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிலோ மீட்டர்களும், ஏத்தர் 340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர்கள் வரையும் பயணிக்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather Announces About Affordable Electric Scooter. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X