ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...? - முன்பதிவுக்கு முந்துங்கள்!

ஏத்தர் பேட்டரி ஸ்கூட்டரை ரூ. 4 ஆயிரத்துக்கு ஓட்டிச் செல்லும் வாய்ப்பை, அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்க அளித்துள்ளது. இதுகுறித்து விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...? - முன்பதிவுக்கு முந்துங்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம், பேட்டரியால் இயங்கும் ஏத்தர் ஸ்கூட்டரை கடந்த வருடம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 என இரு மாடலில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஏத்தர் 340 மாடல் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும், ஏத்தர் 450 மாடல் 1 லட்சத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்பட்டுகிறது.

ஏத்தர் 340 மாடல் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60ல் இருந்து 70 கி.மீ., தூரம் வரை செல்லலாம். அதேபோல், ஏத்தர் 450 மாடலை முழுமையாக சார்ஜ் செய்யதால் 75 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். இந்த இரு ஸ்கூட்டருமே அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடியவை.

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...? - முன்பதிவுக்கு முந்துங்கள்!

ஏத்தர் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை முறையாக செய்தால், அது ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் பவரை ஏற்றிக்கொள்ளும் அளவுக்கு திறன் கொண்டது. அதேபோல, வாகன ஓட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கும் வகையில், இந்த இரு மாடல்களிலும் முன்புறம் மற்றும் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்மார்ட் இன்டராக்டிவ் டேஷ் போர்டு, 7 இன்ச் டச் ஸ்கிரீன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டரை எளிதில் கையாளும் வகையில் ஏதெர் செயலி (ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்மூலம் ஸ்கூட்டரை கனெக்ட் செய்து, ஸ்கூட்டர் எங்கு உள்ளது. பேட்டரியில் எவ்வளவு சார்ஜ் உள்ளது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த ஆப் மூலம் அறிந்துக்கொள்ளலாம். மேலும், உங்கள் ஸ்கூட்டரை உங்களின் அனுமதியின்றி வேறு யாரும் எடுத்துச் செல்லமுடியாத அளவுக்கு இதில் செக்யூரிட்டி வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், உங்கள் வாகனம் திருட்டுப்போவது தடுக்கப்படும்.

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...? - முன்பதிவுக்கு முந்துங்கள்!

இந்த செயலி மூலம், அருகில் உள்ள சார்ஜிங் மையத்தையும் அறிந்துக்கொள்ளமுடியும். ஏத்தர் ஸ்கூட்டரானது தற்போது வரை கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனம் மற்ற மாநிலங்களிலும் தனது காலடி தடத்தை பதிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

இதற்காக சென்னை, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 'ஏத்தர் கிரிட்' எனப்படும் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ உள்ளது. இந்த நகரங்களைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் தனது விற்பனையைத் தொடங்கி விரிவாக்கம் செய்ய உள்ளது.

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...? - முன்பதிவுக்கு முந்துங்கள்!

இந்த நிலையில், ஏத்தர் நிறுவனம் தனது பிராண்டை முழுமையாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வகையில், சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முதல் நடவடிக்கையாக ஏத்தர் ஸ்கூட்டர்களை வாடைக திட்டத்தில் மக்கள் பயன்படுத்தலாம் என அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தற்போது ஏத்தர் ஸ்கூட்டரை 'லீஸ்' முறையில் பயன்படுத்தும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின்படி, ஏத்தர் 340 ஸ்கூட்டர் 13 மாதம் முதல் 36 மாதங்கள் வரை லீசுக்கு விடப்படுகிறது. இதற்காக ரூ. 30 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை கட்டண வசூலிக்கப்படுகிறது. இது லீஸ் மாதத்தைப் பொருத்து மாற்றமடையலாம். அதேபோல, இந்த மாடல் ஸ்கூட்டரை ஒரு மாத கால வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் 3 ஆயிரத்து 977 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. வாடைக முறையில் ஸ்கூட்டரை சில ஆவணங்களுடன் குறைந்தபட்ச முன்பணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை திரும்ப அளிக்கப்படும் தொகையாகும்.

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...? - முன்பதிவுக்கு முந்துங்கள்!

ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு ரூ. 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை லீசுக்காக வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று, மாத வாடகையாக 4 ஆயிரத்து 220 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏத்தர் 340 ஸ்கூட்டரை வாங்குவதைப்போன்றே 450க்கும் முன்பதிவு மற்றும் சில ஆவணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

ஏத்தர் ஸ்கூட்டர்களை வாடகை மற்றும் லீசு முறையில் அறிவித்திருப்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த சலுகைகள் அனைத்தும் பெங்களூருவில் மட்டுமே என்பது நம்மில் பலருக்கு ஏமற்றத்தை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

Most Read Articles
English summary
Ather Electric Scooter AvailableIn Lease And Rent Mode. Read In Tamil.
Story first published: Monday, February 18, 2019, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X