மற்ற நகரங்களுக்கு கிடைக்காத பாக்கியம் நம்ம சென்னைக்கு கிடைச்சிருக்கு -சென்னை வாசிகளே தயாராக இருங்க!

தயாரிப்பு மாநிலத்திற்கு அடுத்தபடியாக, தனது தயாரிப்புகளை சென்னையில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக பிரபல நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மற்ற நகரங்களுக்கு கிடைக்காத பாக்கியம் நம்ம சென்னைக்கு கிடைச்சிருக்கு -சென்னை வாசிகளே தயராக இருங்க!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், பேட்டரியால் இயங்கும் ஏத்தர் மின் ஸ்கூட்டரை கடந்த வருடம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அந்த வகையில், ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய இரண்டு மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

மற்ற நகரங்களுக்கு கிடைக்காத பாக்கியம் நம்ம சென்னைக்கு கிடைச்சிருக்கு -சென்னை வாசிகளே தயராக இருங்க!

ஏத்தர் 340 மாடல் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும், ஏத்தர் 450 மாடல் 1 லட்சத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. ஏத்தர் 340 மாடல் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60ல் இருந்து 70கிமீ தூரம் வரை செல்லலாம்.

மற்ற நகரங்களுக்கு கிடைக்காத பாக்கியம் நம்ம சென்னைக்கு கிடைச்சிருக்கு -சென்னை வாசிகளே தயராக இருங்க!

அதேபோல், ஏத்தர் 450 மாடலை முழுமையாக சார்ஜ் செய்யதால் 75 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இந்த இரு மின் ஸ்கூட்டருமே அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடியவை.

மற்ற நகரங்களுக்கு கிடைக்காத பாக்கியம் நம்ம சென்னைக்கு கிடைச்சிருக்கு -சென்னை வாசிகளே தயராக இருங்க!

ஏத்தர் நிறுவனத்தின் இந்த இரண்டு மின் ஸ்கூட்டர்களும் பெங்களூருவில் மட்டும் விற்பனையாகி வரும்நிலையில், அவற்றை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் விதமாக ஏத்தர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மற்ற நகரங்களுக்கு கிடைக்காத பாக்கியம் நம்ம சென்னைக்கு கிடைச்சிருக்கு -சென்னை வாசிகளே தயராக இருங்க!

அந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் துணையுடன் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக 130 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மற்ற நகரங்களுக்கு கிடைக்காத பாக்கியம் நம்ம சென்னைக்கு கிடைச்சிருக்கு -சென்னை வாசிகளே தயராக இருங்க!

அவ்வாறு வருகின்ற 2022ம் ஆண்டிற்குள், நாடு முழுவதும் உள்ள 30 நகரங்களில், 6,500க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக சென்னை மற்றும் புனேவிலும், இரண்டாம் கட்டமாக ஹைதராபாத் மற்றும் டெல்லியிலும் இந்த சேவைத் தொடங்க இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மற்ற நகரங்களுக்கு கிடைக்காத பாக்கியம் நம்ம சென்னைக்கு கிடைச்சிருக்கு -சென்னை வாசிகளே தயராக இருங்க!

இந்நிலையில், ஏத்தர் நிறுவனத்தின் இந்த இரு மின் ஸ்கூட்டர்களையும் சென்னைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து சோதனைச் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகைப்படங்களை ரஷ்லேன் இணையதளம் வெளியிட்டுள்ளது.

மற்ற நகரங்களுக்கு கிடைக்காத பாக்கியம் நம்ம சென்னைக்கு கிடைச்சிருக்கு -சென்னை வாசிகளே தயராக இருங்க!

மேலும், ஏத்தர் நிறுவனத்தின் இந்த இரண்டு மின் ஸ்கூட்டர்களையும் வருகின்ற ஜீன் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, இந்த நிறுவனம் முதல்முறையாக உற்பத்தி மாநிலத்திற்கு அடுத்தபடியாக வேறொரு மாநிலத்தில் விற்பனைக்கு களமிறங்க இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather Electric Scooters Chennai Launch In June. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X