பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் கால்பதிக்கும் ஏத்தர்..!!

ஏத்தர் மின் ஸ்கூட்டர் நிறுவனம் பெங்களூருவைத் தொடர்ந்து சென்னை டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தனது விற்பனையைத் தொடங் உள்ளது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் கால்பதிக்கும் ஏத்தர்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை மையமாக வைத்து இயங்கி வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம், பேட்டரியால் இயங்கும் ஏத்தர் எனும் ஸ்கூட்டரை கடந்த வருடம் இருசக்கர வாகன சந்தையில் அறிமுகம் செய்தது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் கால்பதிக்கும் ஏத்தர்!

ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 என இரு வேரியண்ட்களில் இந்த ஸ்கூட்டர் சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகியது. இதில், ஏத்தர் 340 மாடல் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் என்றும், ஏத்தர் 450 மாடலை 1 லட்சத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் கால்பதிக்கும் ஏதர்!

இந்த ஏத்தர் ஸ்கூட்டரானது தற்போது வரை கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மட்டும் தான் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மற்ற மாநிலங்களின் நகரப் பகுதியில் தனது விற்பனையை தொடங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் கால்பதிக்கும் ஏதர்!

அதற்காக தனது சொந்த தயாரிப்பான 'ஏத்தர் கிரிட்' எனப்படும் மின் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க உள்ளது. அவ்வாறு சார்ஜிங் நிலையங்கள் கட்டமைத்தப் பின்னரே அந்த நகரங்களில் தனது விற்பனையை துவங்கும் என ஏத்தர் நிறுவனம் அறிவித்திருந்தது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் கால்பதிக்கும் ஏதர்!

இந்நிலையில், முதல்கட்டமாக சென்னை மற்றும் புனேவில் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ உள்ளது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் தனது சேவையை தொடங்கும்.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் கால்பதிக்கும் ஏதர்!

இதுகுறித்து ஏத்தர் நிறுவனத்தின் சிஇஓ தருண் மேதா, சமூகவளைதளத்தில் ஓர் பதிவு ஒன்றைத் பகிர்ந்திருந்துள்ளார். அதில், "ஏத்தர் நிறுவனம் மற்ற நகரங்களிலும் தனது விற்பனையைத் தொடங்க தயாராகி வருகிறது. அதற்காக குறிப்பிட்ட அளவில் வாகனங்கள் தயாராக்கப்பட்டுள்ளன" என தெரிவித்திருந்தார்.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் கால்பதிக்கும் ஏதர்!

ஏத்தர் 340 மாடலை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 70 கிமீ வரை செல்லும். ஏத்தர் 450 மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இந்த இரு ஸ்கூட்டருமே அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும். மேலும், ஒரு மணி நேரத்தில் 80 சதவீத அளவுக்கு இந்த ஸ்கூட்டர்கள் சார்ஜ் ஆகிவிடும்.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் கால்பதிக்கும் ஏதர்!

இரண்டு ஸ்கூட்டரிலும் முன்புற மற்றும் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஸ்மார்ட் இன்டராக்டிவ் டேஷ் போர்டு, 7 இன்ச் டச் ஸ்கிரீன் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த ஸ்கூட்டரை ஏதெர் செயலி (ஆப்) மூலம் கன்னெக்ட் செய்து பேட்டரியின் திறனை மற்றும் அருகில் உள்ள சார்ஜிங் மையத்தின் விவரம் தெரிந்து ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
Ather Energy Plan To Launch Show Room Soon In Chennai. Read In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X