சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...

சென்னையில் ஏத்தர் க்ரிட் பாயிண்ட்களை இன்ஸ்டால் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் இயங்கி வருகிறது. தொடங்கப்பட்ட ஒரு சில ஆண்டுகளிலேயே இந்தியா முழுக்க கவனம் ஈர்த்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...

தற்போதைய நிலையில் எஸ்340 மற்றும் எஸ்450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், தமிழக தலைநகர் சென்னையில் தற்போது ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை அமைத்து வருகிறது.

சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...

இவை ஏத்தர் க்ரிட் (Ather Grid) என அழைக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் சென்னை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் 50-55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்களை அமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...

அனைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களும் நடப்பு ஆண்டு இறுதி வரை ஏத்தர் க்ரிட் பாயிண்ட்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சார்ஜிங் பாயிண்ட்களை இன்ஸ்டால் செய்வதற்காக, ரெஸ்டாரெண்ட்கள், டெக் பார்க்குகள், மால்கள் மற்றும் ஜிம் நிர்வாகங்களுடன் ஏத்தர் எனர்ஜி கூட்டணி அமைத்துள்ளது.

சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்னையில் ஏற்கனவே 7 ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட்களை இன்ஸ்டால் செய்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. `ஃபோரம் விஜயா மால், அட்வொர்க்ஸ் மற்றும் பைக்ஸ் அண்ட் பர்கர்ஸ் உள்ளிட்ட இடங்களில் அவை அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...

ஏத்தர் க்ரிட் ஆப் மூலமாக, அருகே உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்களை எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் கண்டறிய முடியும். பெங்களூருக்கு அடுத்தபடியாக ஏத்தர் க்ரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை பெறும் இரண்டாவது நகரம் சென்னைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...

இதுதவிர இந்தியா முழுக்க 6,500 சார்ஜிங் பாயிண்ட்களை அமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டிற்குள் இந்த 6,500 சார்ஜிங் பாயிண்ட்களும் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...

இதனிடையே ஏத்தர் நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தற்போது பெங்களூர் நகரில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் சென்னையிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

சென்னையில் 55 ஏத்தர் க்ரிட் பாயிண்ட்கள்... நடப்பு ஆண்டு இறுதி வரை இலவசம்... மக்கள் அமோக வரவேற்பு...

வரும் ஜூன் மாதம் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் வருகைக்கு சென்னை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather Energy Plans To Install 55 Ather Grid Points In Chennai. Read in Tamil
Story first published: Saturday, May 18, 2019, 21:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X