2022ம் ஆண்டிற்குள் முன்னணி நகரங்களில் நடக்கப்போகும் மாற்றம் இதுதான்... ஏத்தர் நிறுவனம் மெகா திட்டம்

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022ம் ஆண்டிற்குள் முன்னணி நகரங்களில் நடக்கப்போகும் மாற்றம் இதுதான்... ஏத்தர் நிறுவனம் மெகா திட்டம்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் (Ather Energy) எலெக்ட்ரிக் டூவீலர்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த சூழலில் இந்தியா முழுக்க பல்வேறு நகரங்களில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கம் செய்ய ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன்படி நடப்பாண்டு இறுதிக்குள்ளாக, இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில், 200 புதிய சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022ம் ஆண்டிற்குள் முன்னணி நகரங்களில் நடக்கப்போகும் மாற்றம் இதுதான்... ஏத்தர் நிறுவனம் மெகா திட்டம்

மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள 26 இடங்களில், சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது தொடர்பான பணிக்கு, கோத்ரேஜ் நேச்சர்ஸ் நிறுவனத்துடன் ஏத்தர் எனர்ஜி கடந்த மாதம் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது. மும்பை, புனே நகரங்களில் வரும் காலங்களில் இன்னும் ஏராளமான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க இவ்விரு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன.

2022ம் ஆண்டிற்குள் முன்னணி நகரங்களில் நடக்கப்போகும் மாற்றம் இதுதான்... ஏத்தர் நிறுவனம் மெகா திட்டம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கி வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், இந்தியா முழுவதும் உள்ள முன்னணி நகரங்களில், சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை பெருக்க 130 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் பெங்களூர் நகரின் 35 இடங்களில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வைத்துள்ளது. அதேசமயம் வரும் 2022ம் ஆண்டிற்குள்ளாக, நாட்டின் முக்கியமான 30 நகரங்களில், 6,500க்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

2022ம் ஆண்டிற்குள் முன்னணி நகரங்களில் நடக்கப்போகும் மாற்றம் இதுதான்... ஏத்தர் நிறுவனம் மெகா திட்டம்

ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 என்ற பெயர்களில் 2 பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவ்விரு ஸ்கூட்டர்களின் விலையும் சற்று பிரீமியமாகதான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், என்ட்ரி லெவல் ஏத்தர் 340 ஸ்கூட்டரின் விலை 1.13 லட்ச ரூபாய் ஆகும். அதே சமயம் டாப் எண்ட் ஏத்தர் 450 ஸ்கூட்டரின் விலை 1.28 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் பெங்களூர் ஆன் ரோடு விலையாகும்.

2022ம் ஆண்டிற்குள் முன்னணி நகரங்களில் நடக்கப்போகும் மாற்றம் இதுதான்... ஏத்தர் நிறுவனம் மெகா திட்டம்

ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் முதலில் பெங்களூர் நகரில் மட்டும்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. எனினும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விரைவில் வியாபாரத்தை விரிவுபடுத்த உள்ளது. அனேகமாக மும்பை மற்றும் புனேவில் இருந்து விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்படலாம். ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் பல்வேறு அட்டகாசமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

2022ம் ஆண்டிற்குள் முன்னணி நகரங்களில் நடக்கப்போகும் மாற்றம் இதுதான்... ஏத்தர் நிறுவனம் மெகா திட்டம்

சப்ஸ்க்ரிப்சன் திட்டங்கள் தவிர, தனது இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் ரென்டல்/லீசிங் திட்டங்களையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வழங்குகிறது. ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான லீசிங் திட்டங்கள் ஒரு மாதத்திற்கு 2,274 ரூபாயில் இருந்து தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி திகழ்ந்து வருகிறது. அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Source: BikeDekho

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather Plans To Set Up 200 New EV Charging Stations By End-2019 — 6,500 Stations By 2022. Read in Tamil
Story first published: Thursday, April 11, 2019, 20:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X