இனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...?

பஜாஜ் நிறுவனத்தின் டோமினார்400 பைக்கை டுகாட்டி டியாவலாக மாற்றுகின்ற வகையிலான கிட்டை ஆட்டோலாக் என்ற பிரபல வாகன டிசைன் வடிவமைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...?

பஜாஜ் நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனங்களில் ஒன்றாக டோமினார் இருக்கின்றது. இந்த பைக்கினை விலையுயர்ந்த டுகாட்டி டியாவல் பைக்காக மாற்றும் வகையிலான கிட்டை ஆட்டோலாக் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த கிட்டிற்கு டோமிவல் 2 என்ற பெயரை அது வைத்துள்ளது. இந்த கிட்டைப் பயன்படுத்தி டோமினாரை மாடிஃபை செய்தால், அச்சு அசலாக டியாவல் பைக்கைப் போல அது காட்சியளிக்கும்.

இனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...?

முன்னதாக, ஆட்டோலாக் நிறுவனம் டோமிவல் என்ற கிட்டை அறிமுகம் செய்திருந்தது. இது நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, தற்போது டோமிவல் 2 கிட்டை களமிறக்கியுள்ளது.

ஆட்டோலாக், வாகனங்களுக்கான வடிவமைப்பை செய்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

இனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...?

இந்த கிட்டை பஜாஜ் நிறுவனத்தின் டோமினாருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கிட்டில் பஜாஜ் டோமினாரை, டுகாட்டி டியாவலை காட்சிப்படுத்தும் வகையிலான அக்ஸசெரீஸ்கள் கிடைக்கின்றன. அந்தவகையில், சற்று ஃபிளாட்டானா ஹெட்லேம்ப், உயரமான வின்ட்ஸ்கிரீன் கிடைக்கின்றது.

இனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...?

இத்துடன், ப்யூவல் டேங்கிற்கான ஷ்ரவுட்ஸ் கொடுக்கப்படுகின்றது. இது முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. மேலும், ரேடியேட்டர் கவர் மற்றும் எஞ்ஜின் கவுல் உள்ளிட்டவையும் இதற்கு வழங்கப்படுகின்றது.

அதேசமயம், ஆட்டோலாக் நிறுவனம் டோமிவல் கிட் 2வில் இரு டிசைன்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...?

பஜாஜ் நிறுவனத்தின் இந்த டோமினார் பைக்கிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த பைக்கின் விலையை அந்நிறுவனம் சமீபத்தில்தான் அதிகரித்து அறிவித்திருந்தது. அந்தவகையில், ரூ. 5,800 உயர்த்தப்பட்டது.

ஆகையால், இந்த பைக் தற்போது ரூ. 1.8 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...?

இதன் விலை அதிகமாகக் காணப்பட்டாலும், அதற்கேற்ப மதிப்பைக் கொண்ட மடலாக டோமினார்400 இருக்கின்றது. அதற்கேற்ப வகையில், கூடுதல் காஸ்மெட்டிக் மற்றும் எஞ்ஜின் திறனைப் பெற்ற பைக்காக இது காட்சியளிக்கின்றது.

இனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...?

முன்னதாக, பஜாஜ் டோமினார் 400, அரோரா பச்சை மற்றும் ஒயின் கருப்பு உள்ளிட்ட நிறங்களில் விற்பனைக்கு கிடைத்து வந்தது. இதில், கூடுதலாக கிளாசி சிவப்பு நிறம் அண்மையில் சேர்க்கப்பட்டது. ஆகையால், தற்போது டோமினார்400 மூன்று விதமான நிறத் தேர்வில் கிடைக்கின்றது.

ஆனால், புதிய கிளாசி சிவப்பு நிறம் முதலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதன் பின்னரே இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...?

பஜாஜ் டோமினார் பைக்கில் ரைடருக்கான சொகுசான பயண அனுபவத்திற்காக, அதன் முன்பக்கத்தில் அப்சைட் டவுண் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பான பிரேக்கிங்கிற்காக 320 மிமீட்டரில் டிஸ்க் முன்பக்கத்திலும், 230 மிமீட்டர் அளவுள்ள டிஸ்க் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்பிற்காக ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்படுகின்றது.

இனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...?

இத்துடன், 373.3 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்ட், ப்யூவல் இன்ஜெக்சன் எஞ்ஜின் இந்த பைக்கில் நிறுவப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 40 பிஎஸ் பவரையும், 35 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இயங்குகின்றது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Autologue Revealed Ducati 1260 Diavel Kit For Bajaj Dominar. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X