அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அவான் மோட்டார்ஸ் நிறுவனம் ஸீரோ மற்றும் ஸீரோ ப்ளஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏற்கனவே சந்தையில் களமிறக்கியது. இதில், ஸீரோ சந்தையிலிருந்து விலக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், அடுத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையும் சந்தையில் களமிறக்கி உள்ளது.

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அவான் டிரென்ட் இ என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். ஒற்றை பேட்டரியுடன் பேஸ் வேரியண்ட்டும், இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்ட மாடல் விலை உயர்ந்த வேரியண்ட்டாகவும் விற்பனைக்கு வந்துள்ளது.

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.56,900 எக்ஸ்ஷோரூம் விலையாகவும், அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட இரட்டை பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்டிற்கு ரூ.81,269 எக்ஸ்ஷோரூம் விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.1,100 செலுத்தி இந்த ஸ்கூட்டருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 48V, 28Ah திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் பயணிக்கும்.

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அதுவே, டிரென்ட் இ ஸ்கூட்டரின் டபுள் பேட்டரி பேக் மாடலானது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 110 கிமீ தூரம் வரை பயணிக்கும். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 2 முதல் 4 மணிநேரம் வரை பிடிக்கும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு 45 கிமீ வேகம் வரை பயணிக்கும்.

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரானது அதிகபட்சமாக 150 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது அண்மையில் பெங்களூரில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது சவாலான விலையில் சந்தைக்கு வந்துள்ளது.

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அடுத்த 6 மாதங்களில் மேலும் 6 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அவான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதனால், பரந்துபட்ட வாடிக்கையாளர் வட்டத்தை பெற முடியும் என்று கருதுகிறது.

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அண்மையில் அவான் மோட்டார்ஸ் நிறுவனம் ஸீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையிலிருந்து விலக்கிக் கொண்டது. ஸீரோ ப்ளஸ் மாடலானது ரூ.47,000 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அவான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியாக இருக்கிறது.

Most Read Articles
English summary
Avan Motors, a Pune-based electric scooter start-up has launched its third product in the Indian market, the Trend E. The Avan Trend E electric scooter is available in two variants, with a starting price of Rs 56,900, ex-showroom (Delhi).
Story first published: Friday, March 22, 2019, 16:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X