புதிய அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

டெல்லியை சேர்ந்த அவான் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதம் ஸீரோ என்ற பிராண்டில் ஸீரோ ப்ளஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

பெங்களூரில் நடந்த உள்ளூர் ஆட்டோமொபைல் கண்காட்சியில், அவான் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த புதிய ஸ்கூட்டரின் படங்கள், விபரங்களை காணலாம்.

புதிய அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

டெல்லியை சேர்ந்த அவான் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதம் ஸீரோ என்ற பிராண்டில் ஸீரோ ப்ளஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த நிலையில், அடுத்து, ஸீரோ பிராண்டில் டிரென்ட் இ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

புதிய அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆட்டோமொபைல் கண்காட்சியில், இந்த புதிய அவான் டிரென்ட் இ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஸ்கூட்டர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புதிய அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த புதிய ஸ்கூட்டர் இளைஞர்களை கவரும் வகையில், பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. பார்ப்பதற்கு டிவிஎஸ் ஸ்கூட்டி சைஸில் இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டரில் லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி, அதிகபட்சமாக 60 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான திறனை பெற்றுள்ளது. இதில், இரண்டு பேட்டரி பொருத்தும் வசதியும் இருக்கிறது. இதன்மூலமாக, 110 கிமீ தூரம் பயணிக்கும் வசதியை வாடிக்கையாளர் பெறலாம்.

புதிய அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை இரண்டு முதல் 4 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகம் வரை செல்லும். நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களை பெற்றிருக்கிறது.

அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹைட்ராலிக் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளது. இந்த ஸ்கூட்டர் 150 கிலோ எடையை சுமந்து செல்லும்.

புதிய அவான் டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

அவான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் புனே நகரில் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. இங்குதான் ஸீரோ ப்ளஸ் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. அதே வரிசையில், புதிய டிரென்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இங்கு விரைவில் உற்பத்தி துவங்கப்படும்.

ஒகினவா பிரெயஸ் மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் அவான் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் மாடல்கள் போட்டி போடும். எதிர்காலத்தில் மின்சார ஸ்கூட்டர் சந்தையில் அவான் நிறுவனம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Avan Motors has unveiled their latest smart electric scooter, the Trend E. The Avan Trend E electric scooter was showcased at the ongoing Automobile Expo in Bangalore. The Trend E is the latest addition to the brand's 'Xero' series of electric scooter lineup.
Story first published: Monday, March 11, 2019, 10:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X