கேடிஎம்390 பைக்கிற்கு போட்டியாக மலிவான விலையில் அதிக பவருடன் தயாராகும் பஜாஜ் டோமினார் ஏடிவி பைக்...?

பஜாஜ் மோட்டார்ஸ் கேடிஎம் ஏடிவி பைக்கிற்கு இணையான பவரைக் கொண்ட புதிய பைக்கினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேடிஎம்390 பைக்கிற்கு போட்டியாக மலிவான விலையில் அதிக பவருடன் தயாராகும் பஜாஜ் டோமினார் டார்க்ஸ்-ஏடிவி பைக்...?

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பஜாஜ், வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட் மற்றும் விலையுயர்ந்த ரக வாகன தயாரிப்பில் இந்த நிறுவனம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அந்த வகையில், இந்த நிறுவனம் தயாரித்த பல்சர், டிஸ்கவர், பிளாட்டினா உட்பட பல பைக்குகள் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தநிலையில், பஜாஜ் நிறுவனம் தனது புத்தம் புதிய மாடலான டோமினார்400 பைக்கை கேடிஎம் பைக்கிற்கு போட்டியாக இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும், இந்த பைக்கை 2019ம் ஆண்டுக்கான புதிய நார்ம்ஸ்-க்கு ஏற்பவாறு அதனை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

கேடிஎம்390 பைக்கிற்கு போட்டியாக மலிவான விலையில் அதிக பவருடன் தயாராகும் பஜாஜ் டோமினார் டார்க்ஸ்-ஏடிவி பைக்...?

அதன்படி, கேடிஎம் பைக்குகளில் இடம்பெற்றிருப்பதைப் போல முன்புற யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இதில் நிறுவப்பட்டுள்ளது. மேலும், புதுப் பொலிவுகளுடன் களமிறங்க உள்ள இந்த பைக்கில், நவீன வசதிகளாக கியர் பொசிஷன் இன்டிகேட்டர் டிரிப்மீட்டர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

கேடிஎம்390 பைக்கிற்கு போட்டியாக மலிவான விலையில் அதிக பவருடன் தயாராகும் பஜாஜ் டோமினார் டார்க்ஸ்-ஏடிவி பைக்...?

இந்த நிலையில், பஜாஜ் நிறுவனம் தற்போது டோமினார் வரிசையில் டார்க்ஸ்-ஏடிவி என்னும் புதிய பைக்கினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த பைக்கை கேடிஎம் பைக்கின் அட்வென்சர் 390 மாடலுக்கு போட்டியாக தயாரித்து வருகின்றது. அவ்வாறு, தற்போது தயாராகி வரும் இந்த பைக், அதிக சக்தி வாய்ந்ததாகவும், மலிவான விலையைக் கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ம் வருடம் நவம்பர் மாதம் கேடிஎம் நிறுவனம் டியூக் 125 இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, டியூக் 790 பைக்கை வருகின்ற மாதங்களில் அறிமுகம் செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றது. மேலும், தனது புத்தம் புதிய மாடலான கேடிஎம் அட்வென்சர் 390 மாடலையும் இந்த வருடத்திற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேடிஎம்390 பைக்கிற்கு போட்டியாக மலிவான விலையில் அதிக பவருடன் தயாராகும் பஜாஜ் டோமினார் டார்க்ஸ்-ஏடிவி பைக்...?

கேடிஎம் பைக்கின் அட்வென்சர் பைக்கிற்கு இணையாக தயாராக இருக்கும் பஜாஜ் டோமினார் டார்க்ஸ்-ஏடிவி பைக் குறித்த மற்ற தகவல்கள் இதுவரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த மாடலில், நீண்ட தூரம் செல்ல ஏதுவாக முன்பக்க மேற்புற டவுண் போர்க்குகளும், மோனோசாக் ரியர் சஸ்பென்ஷன், ஹை ரைடிங் டிஸ்டன்ஸ், உயரமாக அமைக்கப்பட்ட மட்குவார்ட்கள் ஆகியவை இடம் பெறும் எதிர்பார்க்கப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Automaker Preparing Adv Bike Based On 390 Adv. Read In Tamil.
Story first published: Monday, March 11, 2019, 17:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X