மலிவான விலையில் பாதுகாப்பு வசதிகளுடன் களமிறங்கும் பஜாஜ் அவென்ஜர்!

பஜாஜ் நிறுவனம் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் மலிவான விலையில் புதிய அவென்ஜர் 160 மாடலை விற்பனைக்கு களமிறக்க இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் விலை மற்றும் சிறப்பு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

மலிவான விலையில் பாதுகாப்பு வசிகளுடன் களமிறங்கும் பஜாஜ் அவென்ஜர்!

க்ரூஸர் ரக பைக் என்றாலே அதிக விலைக் கொடுத்துதான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றும் வகையிலும், பஜாஜ் நிறுவனம் பட்ஜெட் விலையில் க்ரூஸர் ரக அவென்ஜர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

மலிவான விலையில் பாதுகாப்பு வசிகளுடன் களமிறங்கும் பஜாஜ் அவென்ஜர்!

அவென்ஜர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவ்வாறு, புதிய சாதனையாக வெறும் நான்கு மாதத்தில் 1 லட்சம் புக்கிங்களை இந்த பைக் பெற்றது. காலப்போக்கில், இது அப்படியே மாற்றமடைந்து 2 முதல் 2.5 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே விற்பனையாகின. இது 10 மடங்கு விற்பனைச் சரிவாகும்.

மலிவான விலையில் பாதுகாப்பு வசிகளுடன் களமிறங்கும் பஜாஜ் அவென்ஜர்!

இதன் காரணமாக பஜாஜ் நிறுவனம் கடந்த வருடம் அவென்ஜர் 150 மாடலை விற்பனையில் இருந்து விலக்கிக்கொண்டது. மேலும், இதற்கு மாற்று வாகனமாக 180 மாடலை அறிமுகம் செய்தது. ஆனால், இதுவும் பெரிய அளவில் விற்பனையைப் பெறவில்லை.

மலிவான விலையில் பாதுகாப்பு வசிகளுடன் களமிறங்கும் பஜாஜ் அவென்ஜர்!

ஆகையால், இம்முறை மீண்டும் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 மாடலை ரீபிளேஸ் செய்யும் விதமாக ஏபிஎஸ் என்னும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் அவென்ஜர் 160 மாடலை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

மலிவான விலையில் பாதுகாப்பு வசிகளுடன் களமிறங்கும் பஜாஜ் அவென்ஜர்!

இந்த க்ரூஸர் ரக பைக்கை அவென்ஜர் 180 மாடலைக் காட்டிலும் ரூ. 8 ஆயிரம் விலைக் குறைவாக விற்க பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், புதிதாக களமிறங்க இருக்கும் அவென்ஜர் 160 பைக்கிற்கு ரூ. 81,036 என்ற எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலிவான விலையில் பாதுகாப்பு வசிகளுடன் களமிறங்கும் பஜாஜ் அவென்ஜர்!

பஜாஜின் இந்த புத்தம் புதிய அவென்ஜர் 160 பைக்கில் 160.3சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் ஏர் கூல்டு வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின்தான் பல்சர் என்எஸ் 160 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 15.5 பிஎஸ் பவரை 8,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். அதேபோன்று, 14.6 என் எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜினில் 5 ஸ்பீடு டிரான்மிஸ்ஸன் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மலிவான விலையில் பாதுகாப்பு வசிகளுடன் களமிறங்கும் பஜாஜ் அவென்ஜர்!

இது பிஎஸ்-4 எஞ்ஜின் என்று கூறப்படுகிறது. ஆகையால், பிஎஸ்-6 எஞ்ஜினைக் கொண்ட அவெஞ்ஜரை இந்த வருடத்தின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

source: autocarindia

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Avenger 160 ABS To Be Priced Rs. 81k. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X