நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்துடன் வருகிறது பஜாஜ்; என்ன என தெரிந்தால் அசந்து போவீர்கள்

வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஏபிஎஸ் பிரேக் வசதியுடனும் பஜாஜ் பல்சர் 200F மற்றும் பஜாஜ் ஆவெஞ்சர் விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய ஏபிஎஸ் மாற்றத்தின் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்துடன் வருகிறது பஜாஜ்; என்ன என தெரிந்தால் அசந்து போவீர்கள்

பஜாஜ் பல்சர் 200F மற்றும் பஜாஜ் ஆவெஞ்சர் பைக்கில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் வசதி கிடையாது. பாதுகாப்பு அம்சங்களில் இன்றியமையாத ஒன்றாக திகழும் ஏபிஎஸ் பிரேக் வசதி இந்த இரு பைக்கில் இல்லாமல் இருப்பது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்துடன் வருகிறது பஜாஜ்; என்ன என தெரிந்தால் அசந்து போவீர்கள்

இந்த குறையை களையும் விதமாக பஜாஜ் பல்சர் 200F மற்றும் பஜாஜ் ஆவெஞ்சர் பைக் ஏபிஎஸ் வசதியுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது.

நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்துடன் வருகிறது பஜாஜ்; என்ன என தெரிந்தால் அசந்து போவீர்கள்

பஜாஜ் பல்சர் 200F;

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக், கடந்த 2001ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இளைஞர்களின் இதய துடிப்பாகவே மாறிபோனது பல்சர். பல்சர் என்ற மந்திர சொல்லுக்கு மயங்காத இளைஞர்கள் யாரும் நிச்சயமாக இருக்கவே முடியாது.

நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்துடன் வருகிறது பஜாஜ்; என்ன என தெரிந்தால் அசந்து போவீர்கள்

புதிய மாடல்களை அறிமுகம் செய்யும்போது பெரும் ஆர்ப்பாட்டம் செய்து அதற்கு பிரபலம் தேடுவது வாகன தயாரிப்பு நிறுவனங்களின் இயல்பு. ஆனால், பல்சர் பிராண்டின் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் வைத்து,எந்தவிதஆர்ப்பாட்டமும் இல்லாமல் பஜாஜ் ஆட்டோ 200F பல்சரை விற்பனைக்கு கொண்டு வந்தது. பல்சர் 200F இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்துடன் வருகிறது பஜாஜ்; என்ன என தெரிந்தால் அசந்து போவீர்கள்

இந்நிலையில் பஜாஜ் பல்சர் 200F பைக்கில் ஏபிஎஸ் வசதியுடன் வருவதால் தற்போது ரூ.97,760 (எக்ஸ் ஷோரூம்) விலைக்கு விற்பனையாகும் பல்சர் 200F இனி 7,600 விலை உயர்த்தப்பட்டு ரூ.1,05,254 (எக்ஸ் ஷோரூம்) விலைக்கு விற்பனையாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பஜாஜ் பல்சர் 200F எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 8,500 ஆர்பிஎம் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாகவும் இருக்கிறது.

நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்துடன் வருகிறது பஜாஜ்; என்ன என தெரிந்தால் அசந்து போவீர்கள்

IMAGE SOURCE: 4,5,6

ஏபிஎஸ் வசதியுடன் வரும் பஜாஜ் பல்சர் 200F பைக்கின் தோற்றம் மற்றும் என்ஜின் அம்சங்களில் மாற்றங்கள் இருக்காது என பஜாஜ் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பஜாஜ் பல்சர் 200F பைக் 2019ம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்துடன் வருகிறது பஜாஜ்; என்ன என தெரிந்தால் அசந்து போவீர்கள்

பஜாஜ் ஆவெஞ்ஜர்;

க்ரூஸர் ரக பைக் மாடல்கள் எப்போதுமே விலை அதிகமாக இருப்பதால் பலர் சாதாரண பைக்குகளிலேயே சிரமத்துடன் பயணத்தை தொடர வேண்டிய நிலை இருக்கிறது. இதற்கு காரணம் பட்ஜெட்தான். இதனை மனதில் வைத்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வரும் குறைவான விலை க்ரூஸர் மாடல்தான் அவென்ஜர் 180 மற்றும் அவென்ஜர் 220.

நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்துடன் வருகிறது பஜாஜ்; என்ன என தெரிந்தால் அசந்து போவீர்கள்

கவாஸாகி எலிமினேட்டர் டிசைன் அடிப்படையில் உருவான பஜாஜ் அவென்ஜர் முதலில் 180சிசி எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 200சிசி எஞ்சினும், தற்போது 220சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அவென்ஜர் 220 பைக் ஸ்ட்ரீட் 220 மற்றும் க்ரூஸர் 220 என இரு மாடல்களில் விற்பனையில் உள்ளது.

நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்துடன் வருகிறது பஜாஜ்; என்ன என தெரிந்தால் அசந்து போவீர்கள்

IMAGE SOURCE: 8,9

தற்போது அவென்ஜர் 180 மற்றும் அவென்ஜர் 220 பைக் ஏபிஎஸ் வசதியுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது. தற்போது அவென்ஜர் 180 மற்றும் அவென்ஜர் 220 விற்பனையாகும் விலையில் ரூ.7,600 விலை உயர்த்தப்பட்டும் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன

நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்துடன் வருகிறது பஜாஜ்; என்ன என தெரிந்தால் அசந்து போவீர்கள்

கடந்த 2010ம் ஆண்டு 220சிசி மாடல் விற்பனைக்கு வந்தது. இந்த பைக்கில் 219.89சிசி கொண்ட லிக்யூடு கூல்டு டிடிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.03பிஎஸ் பவரையும், 17.5 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது.

Most Read Articles
English summary
BAJAJ AVENGER and PULSAR 200F Lauch with ABS: Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X