பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் பார்வையிலேயே சொக்க வைக்கும் டிசைன் அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் ஆவலை கிளறியுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி?

ஒரு காலத்தில் ஸ்கூட்டர் என்றாலே பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் கியர் ஸ்கூட்டர்தான் நினைவுக்கு வரும். அந்த பெயரிலேயே தனது இந்த முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது பஜாஜ் ஆட்டோ. இந்த ஸ்கூட்டரின் பெரும்பாலான விபரங்கள் வெளியான நிலையில், இதன் விலை விபரம் வரும் ஜனவரியில் அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி?

இந்த நிலையில், இந்த ஸ்கூட்டரின் விலை எவ்வளவாக இருக்கும் என்பதுதான் இப்போது வாடிக்கையாளர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக மாறி இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் இடையிலான விலையில் வரும் என்று ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி?

இந்த நிலையில், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கவரும் வகையில் நிர்ணயிக்கப்படும் என்று பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். இந்த ஸ்கூட்டரானது ரூ.1.5 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் என்றும் பஜாஜ் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி?

இதன்படி, புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் இடையிலான ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மத்திய அரசின் ஃபேம் மானியத் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான தகுதிகளையும் பெற்றிருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிகச் சரியான விலையில் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி?

புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது. ஸ்டீல் பாடி பேனல்கள், எல்இடி ஹெட்லைட், இண்டிகேட்டர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி?

புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4kW திறன் வாய்ந்த மின்மோட்டார் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி?

இந்த புதிய ஸ்கூட்டரின் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இ- சிம்கார்டு மூலமாக நேரடி இணைய வசதி மூலமாக பல்வேறு தகவல்களை ஸ்மார்ட்ஃபோன் மூலமாக உரிமையாளர் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்கும். இது நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய மில்லியன் டாலர் கேள்வி?

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் புரோபைக்கிங் என்ற பிரிமீயம் ஷோரூம் வாயிலாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
According to report, Bajaj chetak electric scooter will be priced under Rs. 1.5 lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X