3,000 கிமீ தூரத்தை அசால்ட்டாக கடந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

கடந்த மாதம் பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக சேத்தக் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அசத்தலான டிசைன் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

3,000 கிமீ தூரத்தை அசால்ட்டாக கடந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டரை வாங்குவதற்கான ஆயத்தத்திலும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் டெல்லியில் நடந்த அறிமுக விழாவின்போதே, பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் திறனை உலகுக்கு பரைசாற்றும் விதத்தில், பஜாஜ் சேத்தக் யாத்ரா என்ற பெயரில் 3,000 கிமீ தூர பயணத்திற்கான திட்டமும் அறிவிக்கப்பட்டது.

3,000 கிமீ தூரத்தை அசால்ட்டாக கடந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

மேலும், மத்திய அமைச்சர் நிதி கட்காரி 20 பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயணத்தையும் கொடி அசைத்து துவங்கி வைத்தார். டெல்லியிலிருந்து ஆக்ரா, ஜெய்பூர், ஆமதாபாத், மும்பை, பனாஜி உள்ளிட்ட நகரங்களை தொட்டுவிட்டு புனே நகரை இன்று வந்தடைந்தது.

3,000 கிமீ தூரத்தை அசால்ட்டாக கடந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த நிலையில், பஜாஜ் சேத்தக் யாத்ரா பயணம் இன்று புனேயில் நிறைவுபெற்றதையொட்டி, முதல்முறையாக பஜாஜ் நிறுவனத்தின் தலைமையகமாக விளங்கும் புனேயில் இந்த புதிய சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொது பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

3,000 கிமீ தூரத்தை அசால்ட்டாக கடந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் வழங்கப்படும் அனைத்து வண்ணத் தேர்வுகளும் இங்கே காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. இது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டிருப்போருக்கு முடிவு செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பலாம்.

3,000 கிமீ தூரத்தை அசால்ட்டாக கடந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், இண்டிகேட்டர்கள், டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

3,000 கிமீ தூரத்தை அசால்ட்டாக கடந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த ஸ்கூட்டரில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில், வண்டியின் வேகம், டிரிப் மீட்டர், பேட்டரியில் இருக்கும் சார்ஜ் அளவு, ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்துக் கொள்ளும் வசதிகள் இருக்கும்.

3,000 கிமீ தூரத்தை அசால்ட்டாக கடந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த புதிய ஸ்கூட்டரில் 4kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி திறன் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

3,000 கிமீ தூரத்தை அசால்ட்டாக கடந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்கூட்டருக்கு ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கபடாது என்று தெரிகிறது. பேட்டரி திறன் குறைந்து போகாமல் இருக்கவும், நீடித்த உழைப்பை தரும் விதத்தில் சாதாரண சார்ஜர் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

3,000 கிமீ தூரத்தை அசால்ட்டாக கடந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

வரும் ஜனவரி மாதம் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை அறிவிப்புடன் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பிராண்டுகளிலும் மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Bajaj Chetak Electric Yatra has concluded at Pune city today.
Story first published: Thursday, November 14, 2019, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X