கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய பஜாஜ் டோமினார் பைக்!

மேம்படுத்தப்பட்ட புதிய பஜாஜ் டோமினார் பைக் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் மாற்றங்கள், கூடுதல் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய பஜாஜ் டோமினார் பைக்!

புதிய பஜாஜ் டோமினார் பைக்கில் 373.3 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், முக்கிய மாற்றமாக கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை 34 பிஎச்பி பவரை வெளிபடுத்தி வரும் இந்த எஞ்சின் புதிய மாடலில் 39.9 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய பஜாஜ் டோமினார் பைக்!

அதாவது, 5.9 பிஎச்பி பவரை கூடுதலாக வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், டார்க் திறன் வெளிப்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை. இதுவரை 6,500 ஆர்பிஎம் என்ற எஞ்சின் சுழல் வேகத்தில் அதிகபட்சமாக 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்திய இந்த எஞ்சின் தற்போது 7,000 ஆர்பிஎம்.,மில் 35 என்எம் டார்க் திறனை அளிக்கும்.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய பஜாஜ் டோமினார் பைக்!

Image Courtesy: 2,3

இந்த மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கொண்ட எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூடுதல் திறன் மிக்க எஞ்சின் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும்.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய பஜாஜ் டோமினார் பைக்!

அடுத்து, இதுவரை சாதாரண டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட இருக்கிறது.

முன்சக்கரத்தில் இதுவரை வலது புறத்தில் இருந்த டிஸ்க் பிரேக்கானது தற்போது இடது புறத்திற்கு மாற்றப்பட்டது. எடை விரவும் தன்மைக்கு ஏற்றவாறு இந்த மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், புதிய புகைப்போக்கி அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால், மிக அழுத்தமான புகைப்போக்கி சப்தத்தை புதிய டோமினார் பைக் வெளிப்படுத்தும். இதுவும் முக்கிய அம்சமாகவும், இளைஞர்களை கவரும் விதத்தில் இருக்கும்.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய பஜாஜ் டோமினார் பைக்!

மேற்கண்ட தொழில்நுட்ப மாற்றங்கள் தவிர்த்து, புதிய பஜாஜ் டோமினார் பைக்கில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது கூடுதல் தகவல்களை பெறும் விதத்தில் இருக்கும். புதிய வண்ணக் கலவையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பஜாஜ் டோமினார் பைக் மிக விரைவில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது பங்காளியான கேடிஎம் ட்யூக் 390 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

டோமினார் பைக்கிற்காக இதுவரை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை சீண்டும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு வந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இனி இந்த லிஸ்ட்டில் ஜாவா மோட்டார்சைக்கிள்களையும் இணைக்க வேண்டி இருக்கும்.

Most Read Articles
English summary
Bajaj Auto will soon be launching their 2019 Dominar 400 in the Indian market. Ahead of its launch, fresh details have been leaked online, revealing the engine specifications, features and other details on the 2019 Bajaj Dominar 400.
Story first published: Friday, February 15, 2019, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X