டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்தியிருக்கு தெரியுமா...?

பஜாஜ் நிறுவனம், அதன் டோமினார் 400 பைக்கின் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. தற்போது, இந்த பைக்கின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற தகவலை இந்த பதிவின் காணலாம்.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக்குகளில் டோமினார் 400 மாடலும் ஒன்றாக இருக்கின்றது. இதனை நிரூபிக்கும் வகையில் அதன் விற்பனை வளர்ச்சி விகிதம் இருக்கின்றது.

அந்தவகையில், பஜாஜ் டோமினார் 400 பைக் அறிமுகமான அப்போதிலிருந்து தற்போது வரை இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

இந்நிலையில், இந்த பைக்கின் விலையை பஜாஜ் உயர்த்தி அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு, பஜாஜ் நிறுவனம் இந்த டோமினார் 400 மாடலின் விலையை உயர்த்துவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும், சரியாக நான்கு மாதங்களுக்கு முன்பு இதேபோன்று, இந்த பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்தது.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

அவ்வாறு, தற்போது பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விலையில் ரூ. 5,800 உயர்த்தப்பட்டுள்ளது. ஆகையால், இந்த பைக் தற்போது ரூ. 1.8 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட உள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

பஜாஜ் நிறுவனம் இந்த டோமினார் பைக்கை அரோரா கிரீன் மற்றும் ஒயின் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் விற்பனைச் செய்து வருகின்றது. இத்துடன், கிளாசி சிவப்பு நிறத்தையும் அதன் ரசிர்களுக்கு அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த புதிய நிறத்திலான டோமினார் 400 பைக்கை பஜாஜ் நிறுவனம், முன்னதாக வெளிநாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால், இதனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அதேசமயம், இதனை வருகின்ற ஏதேனும் திருவிழா நாளில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

இந்த புதிய கிளாஸ்ஸி சிவப்பு நிறத்திலான பஜாஜ் டோமினார் 400 பைக், அண்மையில் அதன் தயாரிப்பு தளமான புனே சக்கன் பிளாணட்டுக்கு அருகில் வைத்து காட்சிப்படுத்தப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள்கூட சமீபத்தில் வெளியாகின.

அதேசமயம், இந்த நிறம் கொண்ட டோமினார் பைக்கை வைத்துதான் அந்நிறுவனம், டிவி விளம்பரத்திற்கான வீடியோவில் காட்சிப்படுத்தியிருந்தது. இது தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற டோமினாரைக் காட்டிலும், சற்று ஸ்பெஷலான காட்சியை நமக்கு வழங்கியது.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

தற்போது வரை, அதிகளவு பயன்பாட்டில் அரோரா கிரீன் நிறத்திலான டோமினார்தான் இருக்கின்றது. அதேசமயம், அதிகம் விற்பனையாகும் கலரிலும் இதுவே முதன்மை இடத்தைப் பிடித்திருக்கின்றது.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

மேலும், இந்த பஜாஜ் டோமினார் 400, அதன் விலைக்கேற்ற சிறந்த பைக்காக கருதப்படுகின்றது. இதன்காரணமாகவே, தற்போது அதிகளவிலான விற்பனை வளர்ச்சியை இந்த பைக் அண்மைக் காலங்களாகப் பெற்று வருகின்றது.

ஆகையால், பஜாஜ் நிறுவனம், இந்த பைக்கை கணிசமாக சமீபத்தில் அப்டேட் செய்து சந்தையில் அறிமுகம் செய்தது.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

அந்தவகையில், புதிய அப்டேட்டுகளாக போர்ஜட் ஸ்டீல் சைட் ஸ்டாண்ட், புதிய டிசைனிலான ஹெட் மற்றும் டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், பின்பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடி, பஞ்ஜீ ஸ்ட்ராப்ஸ் பொஸிசன்ட் பெனீத் பில்லியன் இருக்கை மற்றும் புதிய டேங்க் பேட் டீகேல் உள்ளிட்டவை அப்டேட் செய்யப்பட்டிருந்தன.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

அதேபோன்று, நவீன அம்சத்தின் அப்டேட்டாக இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரும் புதுப்பித்தலைப் பெற்றுள்ளது. அவ்வாறு, அதில் ரைடர் குறித்த தகவலை வெளிப்படுத்தும் வகையிலான அப்பேட் வழங்கப்பட்டிருந்தது.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

இந்த பைக்கில் 373.3 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்ட், ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 8,650 ஆர்பிஎம்மில் 40 பிஎஸ் பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

இத்துடன், ரைடரின் சொகுசான பயண அனுபவத்திற்காக பைக்கின் முன்பக்கத்தில் அப்சைட் டவுண் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, சிறப்பான பிரேக்கிங் அனுபவத்திற்காக முன்பக்க வீலில் 320 மிமீ மற்றும் பின்பக்கத்தில் 230 மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

டோமினார்400 பைக்கின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ்: எவ்வளவு உயர்த்திருக்கு தெரியுமா...?

மேலும், இதில் கூடுதல் பாதுகாப்பான பிரேக்கிங் வசதிக்காக ஏபிஎஸ் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. டோமினார் 400 பைக்கை பஜாஜ் நிறுவனம், நடப்பாண்டின் மார்ச் மாதத்தில்தான் இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Dominar 400 Price Increased. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X