அண்டார்டிகாவை எட்டிய முதல் இந்திய பைக் பஜாஜ் டோமினார்... மூவர்ண கொடியை நட்டு இளைஞர்கள் மரியாதை...

உறைபனி கண்டமான அண்டார்டிகாவை எட்டிய முதல் இந்திய பைக் என்ற சாதனையை பஜாஜ் டோமினார் படைத்துள்ளது. திகில் நிறைந்த பயணத்திற்கு பின், அங்கு இந்திய மூவர்ண கொடியை நட்டு இளைஞர்கள் மரியாதை செய்துள்ளனர்.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

இந்தியாவை சேர்ந்த தீபக் காமத், தீபக் குப்தா மற்றும் அவினேஷ் ஆகிய மூவருக்கும், பைக்குகளில் சாகச பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் அதிகம். சாகச பயணங்கள் என்றால் ஊர் விட்டு ஊர் நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணித்து விட்டு திரும்ப வருவது கிடையாது.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் என இமாலய இலக்குகளை எட்டி பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள்தான் இவர்கள் மூவரும். இந்த ஆர்வம் மேலோங்கி கொண்டே இருக்க, தற்போது 51 ஆயிரம் கிலோ மீட்டர்களை உள்ளடக்கிய சாகச பயணத்தை அவர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்!!!

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

மோட்டார் சைக்கிள் மூலமாக அவர்கள் மூன்று பேரும் 51 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சரியாக 99 நாட்கள் மேற்கொண்ட பயணத்தில், 3 கண்டங்கள் மற்றும் 15 நாடுகளை அவர்கள் கடந்து சென்றுள்ளனர்.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

இந்த பயணத்தில், உலகின் மிக அபாயகரமானவை என வர்ணிக்கப்படும் திகில் நிறைந்த பல சாலைகளை அவர்கள் கடக்க நேரிட்டுள்ளது. இதில், அமெரிக்காவின் ஆர்க்டிக் சர்க்கிள் பகுதியில் உள்ள ஜேம்ஸ் டால்டன் ஹைவே, கனடாவின் டெம்ப்ஸ்டர் ஹைவே ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

இதுதவிர உலகின் ஆபத்து நிறைந்த சாலைகளில் ஒன்றான, டெத் ரோடு ஆஃப் பொலிவியா (Death Road of Bolivia) என அழைக்கப்படும் பொலிவியாவின் மரண சாலையையும் அவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளனர்.

MOST READ: புதிய கேடிஎம் ட790 ட்யூக் பைக் விரைவில் அறிமுகம்: விபரம்!

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

மிக கடினமான சவால்களுக்கு இடையே, உறைபனி கண்டமான அண்டார்டிகாவை (Antarctica) அடைந்த பின் அவர்களின் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தினமும் சராசரியாக 515 கிலோ மீட்டர்கள் வீதம், 99 நாட்கள் பயணம் செய்து, 51 ஆயிரம் கிலோ மீட்டர்களை அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

இந்த பயணம் தீபக் காமத்தின் தலைமையில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் மிகவும் புகழ்பெற்ற ''க்ராஸ்-கன்ட்ரி மோட்டார் சைக்லிஸ்ட்'' (Cross-country Motorcyclist) ஆவார். மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமானவர்.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

இந்தியாவை சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் பைக்கைதான் இந்த சாகச பயணத்திற்கு அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலம் அண்டார்டிகாவை எட்டிய முதல் இந்திய நிறுவன பைக் என்ற பெருமையை பஜாஜ் டோமினார் தற்போது பெற்றுள்ளது.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

இவர்கள் மூன்று பேரும் ஆளுக்கு ஒரு பஜாஜ் டோமினார் பைக்கில் பயணம் செய்துள்ளனர். ஆனால் இந்த 3 பைக்குகளும் ஒரு நாள் கூட பிரேக் டவுன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதனை அவர்கள் மூவரும் தற்போது பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

வழக்கமாக மார்க்கெட்டில் விற்பனையாகி கொண்டிருக்கும் அதே பஜாஜ் டோமினார் பைக்தான், இந்த சாகச பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் மிக நீண்ட தூர பயணம் என்பதால், அதற்கு ஏற்ப ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன.

MOST READ: பெங்களூருவை தொடர்ந்து சென்னையில் கால்பதிக்கும் ஏத்தர்..!!

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், பஜாஜ் டோமினார் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகவே திகழ்கிறது. இதன் காரணமாக அறிமுகம் செய்யப்பட்டது முதலே பஜாஜ் டோமினார் அமோகமாக விற்பனையாகி கொண்டுள்ளது.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் அட்வென்ஜர் டூரர் (Adventure Tourer) ரக மோட்டார் சைக்கிள் என்பதாலும், இளைஞர்கள் மத்தியில் பஜாஜ் டோமினார் பிரபலமாக விளங்குகிறது. இந்த சூழலில், இந்திய மார்க்கெட்டில், டோமினார் 400 பைக்கை அப்டேட் செய்யும் பணியில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

எனவே 2019ம் ஆண்டு மாடல் டோமினார் 400 பைக் விரைவில் லான்ச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய டோமினார் 400 பைக்கின் ஸ்பை படங்கள் சமீபத்தில் வெளியாகி, ஆன்லைனில் வைரலாக பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

பஜாஜ் டோமினார் பழைய மாடலில், 373.3 சிசி, 4-வால்வு, ட்ரிபிள்-ஸ்பார்க், டிடிஎஸ்ஐ இன்ஜின் (373.3cc, Four-valve, Triple-spark DTSi Engine) பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 35 பிஎச்பி பவர், 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

இந்த சூழலில் தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் புதிய மாடலிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மாடலில் மெக்கானிக்கலாக எவ்வித மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது.

MOST READ: அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

என்றாலும் விஸ்வல் மற்றும் ஃபங்ஷனலாக (Visual And Functional) பல அப்டேட்கள் செய்யப்படும் என தெரிகிறது. அனேகமாக அப்டேட் செய்யப்பட்ட புதிய டோமினார் பைக்கை பஜாஜ் நிறுவனம் நடப்பு மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உயிரை பணயம் வைத்து இந்த இடத்தில் இந்திய கொடியை நாட்டிய இளைஞர்கள்... சாதனைக்கு உதவிய பைக் இதுதான்

தற்போது உள்ள பழைய மாடல் டோமினார் பைக்கின் விலை 1.63 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). ஆனால் புதிதாக வரவுள்ள மாடலின் விலை இதைக்காட்டிலும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles

English summary
Bajaj Dominar Concludes 51,000 Km Journey: Becomes First Indian Motorcycle To Reach Antarctica
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more