ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்திய அறிமுக விபரம்!

ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்திய அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்திய அறிமுக விபரம்!

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹஸ்க்வர்னா நிறுவனம் கேடிஎம் பைக் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனால், கேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அங்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில், கேடிஎம் பைக்குகளுக்கு கிடைத்திருக்கும் அபரிதமான வரவேற்பை தொடர்ந்து, ஹஸ்க்வர்னா பைக்குகளையும் இந்தியாவில் களமிறக்க பஜாஜ் ஆட்டோ முடிவு செய்தது.

ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்திய அறிமுக விபரம்!

இந்திய மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் கேடிஎம் ட்யூக் 390 ட்யூக் அடிப்படையிலான ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 மற்றும் ட்விபிளேன் 401 ஆகிய இரண்டு பைக்குகளும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. கேடிஎம் பைக்குகளை போலவே, இவை மிகவும் தனித்துவமான டிசைன் அம்சங்களை கொண்டவை. எனவே, இளம் தலைமுறையை வெகுவாக கவரும்.

ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்திய அறிமுக விபரம்!

இந்த பைக்குகளின் வருகை குறித்து தொடர்ந்து பல யூகத் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்து வருகிறது. இந்த நிலையில், வரும் பண்டிகை காலத்தின்போது இந்த இரண்டு பைக்குகளும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்திய அறிமுக விபரம்!

ஆகஸ்ட் - நவம்பர் இடையிலான காலக்கட்டத்தில் ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதுள்ள கேடிஎம் நிறுவனத்தின் டீலர்களை வைத்தே ஹஸ்க்வர்னா பைக்குகளையும் விற்பனை செய்வதற்கு பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்திய அறிமுக விபரம்!

தற்போது கேடிஎம் நிறுவனத்திற்கு இந்தியாவில் 230 டீலர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே, வலுவான நெட்வொர்க் மூலமாக ஹஸ்க்வர்னா பைக்குகளை விற்பனை செய்யும் வாய்ப்பு இருக்கிறது. கேடிஎம் பைக்குகளை போலவே, இந்த பைக்குகளும் ஹிட் அடிக்கும் என்று தெரிகிறது.

ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்திய அறிமுக விபரம்!

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 ஆகிய இரண்டு பைக்குகளிலும் கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் பயன்படுத்தப்படும் 373சிசசி ஹூலிகன் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும்.

ஹஸ்க்வர்னா பைக்குகளின் இந்திய அறிமுக விபரம்!

இதனிடையே, ஹஸ்க்வர்னா பைக்குகளின் உற்பத்தியை ஆஸ்திரியாவிலுள்ள கேடிஎம் ஆலையிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பஜாஜ் ஆலையில் கேடிஎம் பைக்குகளை போலவே, ஹஸ்க்வர்னா பைக்குகளின் உற்பத்தியும் செய்யப்பட இருக்கிறது. எனவே, கேடிஎம் பைக்குகளை போலவே, விலை மிக சவாலாக இருக்கும்.

Source: 1, 2

Most Read Articles
English summary
There has been a lot confusion and excitement around the Husqvarna 401 twins. There were a lot of conflicting reports and update about the motorcycles. However, Bajaj has confirmed that the Husqvarna's production will move from Mattighofen, Austria, to the Bajaj facility at Chakan, Pune. Also Bajaj continues to test the Svartpilen 401 and Vitpilen 401 on Indian roads.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X