விலை குறைவான புதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்!

பஜாஜ் பல்சர் 150 பைக் இந்தியர்களின் மத்தியில் பேராதரவை பெற்ற பைக் மாடலாக வலம் வருகிறது. நேர்த்தியான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான விலை போன்றவை இந்த பைக்கிற்கு தொடர்ந்து ஸ்திரமான வர்த்தகத்தை தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், பல்சர் பிராண்டில் 125 சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

விலை குறைவான புதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்!

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, போலந்து உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் இருக்கும் பல்சர் என்எஸ் 125 பைக் மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட பல்சர் எல்எஸ் 135 பைக் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய மாடலை நிலைநிறுத்தவும் பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

விலை குறைவான புதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்!

புதிய பாதுகாப்பு விதிகள், இன்ஸ்யூரன்ஸ் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் பைக்குகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு வர இருக்கும் பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக எஞ்சினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால் பைக்குகளின் விலை 20 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

விலை குறைவான புதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்!

எனவே, பல்சர் 150 பைக்கின் விற்பனையில் தொய்வு ஏற்படலாம். இதனை மனதில் வைத்து குறைவான விலை கொண்ட பல்சர் மாடல் பஜாஜ் நிறுவனத்திற்கு அவசியமாகி இருக்கிறது. இதன்மூலமாக விற்பனையை சரிகட்ட முடியும் என நினைக்கிறது.

விலை குறைவான புதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்!

வெளிநாடுகளில் உள்ள பல்சர் என்எஸ் 125 பைக் இந்தியாவில் பல்சர் 125 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த பைக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

விலை குறைவான புதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள பல்சர் என்எஸ் 125 பைக்கில் 125 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13.05 எச்பி பவரையும், 11.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எனினும், இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் மாடலின் எஞ்சினில் சிறிய மாறுதல்கள் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

விலை குறைவான புதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்!

புதிய பஜாஜ் பல்சர் 125 பைக்கில் வி வடிவிலான ஹெட்லைட் ஹவுசிங், சிறிய விண்ட்ஸ்கிரீன், எல்இடி பைலட் விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. வெளிநாடுகளில் க்ளிப் ஆன் ஹேண்டில்பார் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்திய மாடலில் சாதாரண வகை ஹேண்டில்பார் கொடுக்கப்படும். விலைய சரியாக நிர்ணயிக்கும் யுக்தியாக இருக்கும்.

விலை குறைவான புதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்!

பண்டிகை காலத்திற்கு முன்னதாக பஜாஜ் பல்சர் 125 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.60,000 எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய பஜாஜ் பல்சர் 125 பைக் மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

Source: Autocarindia

Most Read Articles
English summary
According to media reports, Bajaj is planning to launch Pulsar 125 Model in India before festive season.
Story first published: Wednesday, July 10, 2019, 15:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X