பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு திட்டம் போட்டு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த அக்டோபர் மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அந்நிறுவனத்தின் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்த சேத்தக் பெயரிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியிடப்பட்டது.

பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

மேலும், இந்த ஸ்கூட்டரின் அருமையான டிசைனும், தொழில்நுட்ப அம்சங்களும் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த மாதம் இந்த ஸ்கூட்டரின் விலை அறிவிப்பு வெளியிடப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கடந்த மாதம் முதல் பெங்களூர் மற்றும் புனே நகரங்களில் இந்த ஸ்கூட்டருக்கு முன்பதிவும் நடந்து வருகிறது.

பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

இந்த சூழலில், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களுக்கு விலை கூட ஒரு பொருட்டாக பார்க்கவில்லை. இந்த ஸ்கூட்டரை எப்போது கையில் பெறுவோம் என்ற ஆவலில் பணத்தை தயார் செய்து வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கின்றனர்.

பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

இந்தநிலையில், வரும் ஜனவரி மாத இறுதி வாரத்தில் இந்த புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. விற்பனைக்கு கொண்டு வந்த உடன் டெலிவிரி பணிகளை விரைந்து செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் காப்பியடிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், குறிப்பிடத்தக்க மாறுதல்களும் மிக அற்புதமாக அமைந்திருப்பது பெரிய ப்ளஸ் பாயிண்ட். அத்துடன், எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பேக்லிட் சுவிட்சுகள் ஆகியவையும் இதன் மதிப்பை கூட்டுகின்றன.

பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

இந்த ஸ்கூட்டரானது முழுமையான ஸ்டீல் பாடியில் கட்டமைக்கப்பட்டு இருப்பதும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வைக்கும் விஷயமாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஐபி-67 தர மதிப்பீட்டிற்கு இணையான 4kW பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும்.

பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 முதல் 90 கிமீ தூரம் பயணிக்க முடியும். ஈக்கோ, ஸ்போர்ட் ஆகிய இரண்டு டிரைவிங் மோடுகளில் வைத்து இயக்கும் வாய்ப்பை வழங்கும். ஆனால், ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டினால் பேட்டரியின் ரேஞ்ச் குறைந்துவிடும்.

பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் சிங்கிள் சைடு சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்திற்கு மட்டும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.

பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் மதிப்பு வாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது. முதல்கட்டமாக கேடிஎம் பைக் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Source

Most Read Articles
English summary
According to media report, Bajaj is planning to start Chetak EV deliveries from end of next month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X