சத்தமேயின்றி பல்சர் 125 ட்ரம் வேரியண்ட்டின் தயாரிப்பை நிறுத்தியுள்ள பஜாஜ்...

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான வாகனங்களுள் ஒன்றாக பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மாடல் பைக் உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே இந்த பைக் அறிமுகமான புதியதில் இதன் ஸ்டைல் மற்றும் நிற தேர்வுகளினால் மிக பிரபலம்.

சத்தமேயின்றி பல்சர் 125 ட்ரம் வேரியண்ட்டின் தயாரிப்பை நிறுத்தியுள்ள பஜாஜ்...

ஆனால் அதன் பின் யமஹா, சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்டைலான பல பைக்குகளை சந்தையில் இறக்கியதும், கேடிஎம் போன்ற ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்ததும் பஜாஜ் பல்சர் சிறிது சிறிதாக இளைஞர்களின் தேர்வில் இருந்து மறைய தொடங்கியது.

சத்தமேயின்றி பல்சர் 125 ட்ரம் வேரியண்ட்டின் தயாரிப்பை நிறுத்தியுள்ள பஜாஜ்...

இருப்பினும் பல்சர் பைக்கிற்கு தனி முக்கியத்துவம் கொடுத்து அதன் டிசைன், ப்ரேக் அமைப்புகளில் அவ்வப்போது அப்டேட்களை வெளியிடவும் பஜாஜ் நிறுவனம் மறக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு கூட பல்சர் 150 நியான் பைக்கில் புதிய அப்டேட் ஒன்றை வழங்கியிருந்தது. பல்சர் 150 நியான் பைக்கின் இந்த அப்டேட் குறித்த முழு தகவல்களை காண இங்கே க்ளிக் செய்யவும்.

சத்தமேயின்றி பல்சர் 125 ட்ரம் வேரியண்ட்டின் தயாரிப்பை நிறுத்தியுள்ள பஜாஜ்...

ஆனால் உண்மையில் பல்சரின் விற்பனை முன்பு போல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக பல்சர் 125 பைக்கின் விற்பனை மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல்சர் 125 பைக்கின் ஒரு வேரியண்ட்டின் தயாரிப்பை சத்தமே இல்லாமல் முழுவதுமாக நிறுத்தியுள்ளது பஜாஜ் நிறுவனம்.

சத்தமேயின்றி பல்சர் 125 ட்ரம் வேரியண்ட்டின் தயாரிப்பை நிறுத்தியுள்ள பஜாஜ்...

அதாவது, ட்ரம் மற்றும் டிஸ்க் என இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த பல்சர் 125 பைக்கின் ட்ரம் வேரியண்ட்டின் தயாரிப்பு தான் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்சர் 125-ன் இந்த வேரியண்ட்டின் பெயர் மற்றும் விலை பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சத்தமேயின்றி பல்சர் 125 ட்ரம் வேரியண்ட்டின் தயாரிப்பை நிறுத்தியுள்ள பஜாஜ்...

இந்த இணையத்தள பக்கத்தில் பல்சர் 125-ன் டிஸ்க் வேரியண்ட் மட்டும் ரூ.66,618 விலையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.64,000 விலையுடன் குறிப்பிடப்பட்டிருந்த பல்சர் 125 வேரியண்ட்டின் தகவல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

சத்தமேயின்றி பல்சர் 125 ட்ரம் வேரியண்ட்டின் தயாரிப்பை நிறுத்தியுள்ள பஜாஜ்...

பல்சர் 125 பைக்கின் இவ்விரு வேரியண்ட்களுக்கும் ப்ரேக் பகுதியை தவிர்த்து எந்தவொரு வித்தியாசம் இல்லை. இந்த இரு வேரியண்ட்களும் 124.4சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் அமைப்புடன் 8500 ஆர்பிஎம்மில் 12 பிஎச்பி பவரையும் 6500 ஆர்பிஎம்மில் 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகின்றன. இவற்றின் என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சத்தமேயின்றி பல்சர் 125 ட்ரம் வேரியண்ட்டின் தயாரிப்பை நிறுத்தியுள்ள பஜாஜ்...

பஜாஜ் நிறுவனம் ட்ரம் வேரியண்ட் மட்டுமில்லாமல் சோலார் ரெட் மற்றும் பிளாட்டினம் சில்வர் நிற தேர்வுகளில் விற்பனையாகி வந்த பல்சர் 125 பைக்கின் தயாரிப்புகளையும் எப்போதோ நிறுத்தி விட்டது. இதனால் பல்சர் 125 பைக் இனி ஒரே ஒரு நியான் ப்ளூ நிற தேர்வில் மட்டும் தான் டீலர்ஷிப்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
bajaj pulsar 125 drum brake variant discontinued in India
Story first published: Friday, November 22, 2019, 18:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X