செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்திவரும் புதிய பைக்குறித்த அறிவிப்பை பஜாஜ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

இந்தியாவின் மிகவும் பிரபலமான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக பஜாஜ் இருக்கின்றது. இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்தியர்கள் நல்ல புகழ்வாய்ந்தவையாக இருக்கின்றன. அதிலும், பல்சர் மாடல் பைக்குகள் இரண்டு தசாப்தங்களையும் கடந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

அந்தவகையில், பல்சர் வரிசையில் 135சிசி தொடங்கி 220 சிசி திறனிலான மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவ்வாறு, பல்சர் 220, என்எஸ் 200, ஆர்எஸ் 200, என்எஸ் 160, 150 சிசி மற்றும் 180சிசி ஆகிய திறனிலான பைக்குகள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

இதில், 150 சிசி மாடலிலான பல்சர் பைக்கிற்கு இந்தியாவில் அமோகமான வரவேற்பு தற்போது வரை நிலவி வருகின்றது. இதன்காரணமாகவே, இந்த மாடல் பைக்கின் விலை மட்டும் எப்போதும் குறையாமல் இருக்கின்றது.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

ஆனால், இந்த பல்சர் வரிசையில் 125 சிசி இல்லாததே மிகப்பெரிய குறையாக இருந்து வருகின்றது. அதேசமயம், கேடிஎம் நிறுவனம் இந்த செக்மெண்டை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அண்மையில் அதன் ட்யூக் வரிசையில் 125 சிசி மாடலை அறிமுகம் செய்தது. இது, இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ட்யூக் வரிசையில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாக மாறியது.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

இந்நிலையில், 125சிசி திறன் கொண்ட இருசக்கர வாகன சந்தையில் கால் தடம் பதிக்கும் விதமாக பஜாஜ் நிறுவனம், அதன் பல்சர் வரிசையில் 125சிசி திறனுடைய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியது.

மேலும், அந்த பைக் பல்சர் எல்எஸ் 135 இல்லாத குறைப்பாட்டை தீர்க்கும் வகையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

ஆகையால், புதிய பல்சர் 125 மாடலின் வரவு இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், பல்சர் 125 மாடலை பஜாஜ் நிறுவனம் வருகின்ற செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

இதற்கிடையில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பஜாஜ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகளில் ஒருவரான ராகேஷ் ஷர்மா, இந்த தகவலை உறுதி செய்தார். அவர் கூறியதாவது, "பஜாஜ் நிறுவனம் அடுத்த மூன்று வாரங்களில் 125சிசி திறன் கொண்ட பைக்கை வெளியிட உள்ளது. அது செப்டம்பர் 5 அல்லது 7 தேதிகளுக்கு இடைப்பட்ட ஏதேனும் ஓர் நாளில் அறிமுகம் செய்யப்படலாம்" என தெரிவித்தார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

இந்த அப்கமிங் 125சிசி திறன் கொண்ட பல்சர் பைக், அதன் சகோதர மாடலான பல்சர் 150-இடம் இருந்து சில அம்சங்களைப் பெற்றுக் கொள்கின்றது. மேலும், நியான் பல்சர் ஸ்டைலயும் இந்த பைக் கணிசமாக பெற உள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

இந்த பைக்கை பல்சர் 150 மாடலுடன் ஒப்பிட்டு பார்த்தால், சற்று குறைவான திறனையே வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

ஆகையால், இந்த 125சிசி திறன் கொண்ட எஞ்ஜின் 13 பிஎஸ் பவரையும், 12 என் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், பல்சர் 150 மாடலோ 14 பிஎஸ் பவரையும், 13.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கின்றது.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

இத்துடன் புதிய பல்சர் 125 சிசி பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக அதன் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் இடம்பெற உள்ளது. இத்துடன் பாதுகாப்பான பிரேக்கிங் வசதிக்காக பைக்கின் முன் பக்க வீலுக்கு மட்டும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட உள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

இந்த பைக்கை மலிவான விலையில் களமிறக்கி சந்தையில் புரட்சி செய்வதற்காக சில நடவடிக்கைகளை பஜாஜ் நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது. அந்தவகையில், ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிக்கு பதிலாக சிபிஎஸ் வசதியும், நடுத்தர டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் நிறுவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

அதேசமயம், இந்த பைக்கிற்கு அலாய் வீல் கொடுக்கப்பட உள்ளது. இத்துடன், ஹெட்லைட்டை சுற்றியவாறு எல்இடி டிஆர்எல்கள் இணைக்கப்ட உள்ளது.

இந்த புத்தம் புதிய பல்சர் 125 மாடலுக்கு ரூ. 60,000 என்ற விலை நிர்ணயிக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், அது எந்த அளவிற்கு உறுதியானது என தெரியவில்லை.

செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழவிருக்கும் தரமான சம்பவம் இதுதான்... பஜாஜ் அதிரடி அறிவப்பு!

தற்போது, பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்பில் 125 சிசி திறனில் வி12 மற்றும் டிஸ்கவர் 125 ஆகிய இரு மாடல்கள்தான் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இவ்விரு மாடல்களைக் காட்டிலும் பல்சர் 125 பைக் பிரிமியம் தரத்தில் களமிறக்கப்பட உள்ளது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar 125 May Launched In September First Weeks. Read In Tamil.
Story first published: Saturday, August 10, 2019, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X