18 ஆண்டுகளாக சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழவிருக்கும் சோகம்: பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்!

பஜாஜ் நிறுவனம் பல்சர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

18 ஆண்டுகளாக இந்திய சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழ இருக்கும் சோகம்: பஜாஜின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை...!

இந்தியாவில் இயங்கி வரும் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் பஜாஜ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் முக்கியமாக இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், சமீபத்தில் க்யூட் என்ற மைக்ரோ காரை சந்தையில் அறிமுகம் செய்திருந்தது பஜாஜ்.

18 ஆண்டுகளாக இந்திய சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழ இருக்கும் சோகம்: பஜாஜின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை...!

இந்த நிறுவனம் அறிமுகம் செய்த பல தயாரிப்புகள் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாக இருக்கின்றன. அந்த வகையில், பஜாஜ் டிஸ்கவர், பஜாஜ் சிடி100, டோமினார் ஆகிய பைக்குகள் மிகவும் பிரபலமானவை. இதேபோன்று, இந்த நிறுவனத்தின் மிக முக்கியமான சூப்பர் ஸ்டார் பைக்காக பல்சர் இருந்து வருகிறது. இந்த மோட்டார்சைக்கிளை அந்த நிறுவனம் கடந்த 2001ம் ஆண்டில் விற்பனைச் செய்து வருகிறது.

18 ஆண்டுகளாக இந்திய சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழ இருக்கும் சோகம்: பஜாஜின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை...!

அதாவது, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக பல்சர் மாடல் பைக்குகள் இந்திய சாலையை கலக்கி வருகின்றது. மேலும், இன்றளவு வரை இந்த மோட்டார்சைக்கிளின் மீதான மோகம் இதுவரை நமது இந்திய இளைஞர்களிடம் குறைந்தபாடில்லை. இந்த பைக்கை முன்வைத்து பொல்லாதவன் என்ற படம் ஒன்று தமிழ் திரையுலகில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இந்த பைக் பிரசித்திப் பெற்றதாக இருக்கின்றது.

18 ஆண்டுகளாக இந்திய சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழ இருக்கும் சோகம்: பஜாஜின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை...!

பஜாஜ் நிறுவனம், இந்த பல்சர் வரிசையில் பல்சர் 150, பல்சர் 180, பல்சர் 220 ஆகிய மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. இதைத்தொடர்ந்து, அவ்வப்போது பல்சர் பைக்கினை அப்கிரேட் செய்தும் விற்பனைக் கொண்டு வரும். அந்த வகையில், சமீபத்தில் பல்சர் 150 மற்றும் பல்சர் 180எஃப் என்ற நியான் மாடலை 2019ம் ஆண்டிற்கு ஏற்ப பஜாஜ் நிறுவனம் அப்கிரேட் செய்து விற்பனைக்குக் கொண்டது.

18 ஆண்டுகளாக இந்திய சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழ இருக்கும் சோகம்: பஜாஜின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை...!

இந்நிலையில், பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பல்சர் 180 மாடலை விற்பனையில் விலக்கிக் கொள்ள இருப்பதாக பஜாஜ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பஜாஜின் இந்த தகவலால் பல்சர் ரசிகர்கள் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பஜாஜ் 180எஃப் என்ற புதிய மாடல் வருகையை ஒட்டி இந்த முடிவை பஜாஜ் நிறுவனம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இரண்டு மாதங்களுக்குள் பல்சர் 180-இன் உற்பத்தியையும் முடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

18 ஆண்டுகளாக இந்திய சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழ இருக்கும் சோகம்: பஜாஜின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை...!

பல்சர் 180எஃப் மோட்டார்சைக்கிளை பவர்ஃபுல்லாகவும், பல்சர் 220எஃப் பைக்கின் டிசைன் அம்சங்களுடன் பஜாஜ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய பல்சர் 180எஃப் நியான் எடிசன் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

18 ஆண்டுகளாக இந்திய சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழ இருக்கும் சோகம்: பஜாஜின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை...!

பல்சர் 220எஃப் மாடல் மோட்டார்சைக்கிளின் புரொஜெக்டர் ஹெட்லைட் தான் இந்த புதிய பல்சர் 180எஃப் மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மற்ற மோட்டார்சைக்கிளில் இருந்து மாறுபட்டு காணும் விதமாக பல்சர் 180எஃப் மாடலில் ஆரஞ்ச் வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அந்த பைக்கின் லுக்கை மேலும் ரம்மியமாகக் காட்சிப்படுத்துகிறது.

18 ஆண்டுகளாக இந்திய சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழ இருக்கும் சோகம்: பஜாஜின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை...!

இந்த புதிய மாடல் பல்சர் 180எஃப் மோட்டார்சைக்கிளில் 178.6 சிசி ஏர்கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 17 பிஎச்பி பவரையும், 17 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளாக இந்திய சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழ இருக்கும் சோகம்: பஜாஜின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை...!

இதைத்தொடர்ந்து, புதிய பஜாஜ் பல்சர் 180எஃப் நியான் எடிசன் பைக்கின் இரு சக்கரங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 260 மில்லி மீட்டர் டிஸ்க்கும், பின்சக்கரத்தில் 230 மில்லி மீட்டர் டிஸ்க்கும் இடம்பெற்றுள்ளது.

18 ஆண்டுகளாக இந்திய சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழ இருக்கும் சோகம்: பஜாஜின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை...!

முன்புறத்தில் சாதாரண ரக ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பின்புற ஷாக்அப்சார்பரை 5 விதமான நிலைகளில் மாற்றிக்கொள்ளும் வசதி கொடுக்கப்ட்டுள்ளது. புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் நியான் எடிசன் பைக் ரூ. 87,450 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar 180 Discontinued. Read In Tamil.
Story first published: Tuesday, April 9, 2019, 11:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X